
என் கணவர் எனக்கு வைத்துக் குடுத்த மீன் குழம்பு.அவர் செய்யும் போது ஒரமா ஒரு சேர்ல உட்கார்ந்துக்கிட்டு வேடிக்கைப் பார்த்தேன் எப்படி செய்தார்ன்னு சொல்றேன் கேளுங்க.குழம்பு கொதிக்கும் போது வாசனை நல்லா கமகமன்னு இருந்தது.நல்லா சாப்பிட்டேன்.ரொம்ப ஈஸிதான் நீங்களும் செய்து பாருங்க.
தே.பொருட்கள்:
நாக்கு மீன் - 8 துண்டுகள்
புளி - 1 பெரிய எலுமிச்சையளவு
வெங்காயம் - 1
தக்காளி - 2
பூண்டுப்பல் - 5
கறிவேப்பில்லை - சிறிது
கலந்த மிளகாய்த்தூள் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
பச்சை மிளகாய் - 2
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
*வெங்காயம்+பூண்டு நீளவாக்கில் அரியவும்,பச்சை மிளகாயை கீறவும்.
*புளியை ஒரு கோப்பையளவு கரைத்துக் கொள்ளவும்.அதில் உப்பு+வெங்காயம்+பச்சை மிளகாய்+கறிவேப்பில்லை+தக்காளி+மிளகாய்த்தூள்+பூண்டு அனைத்தையும் போட்டு கரைத்துக் கொள்ளவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வடகத்தைப் போட்டு தாளித்து புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.
*நன்கு கொதித்ததும் மீனைப் போடவும்.
*15 நிமிடம் கழித்து மறுபடியும் கறிவேப்பில்லை போட்டு இறக்கவும்.
பி.கு:
விருப்பட்டால் கத்திரிக்காய்,மாங்காய் சேர்க்கலாம்.இப்படி செய்ததில் இதுவும் வித்தியாசமான சுவையில் இருந்தது.