Wednesday 17 June 2009 | By: Menaga Sathia

கத்திரிக்காய் சாதம்

தே.பொருட்கள்:

உதிராக வடித்த சாதம் - 3 கப்
கத்திரிக்காய் - 1 பெரியது
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
ஊறவைத்த கடலைப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:

ஏலக்காய் - 3
கிராம்பு - 3
சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

*வெங்காயம்+தக்காளியை நீளவாக்கில் அரியவும்.பச்சை மிளகாயை கீறவும்.
*கத்திரிக்காயை பொடிப் பொடியாக நறுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது +தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் பச்சை மிளகாய்+மஞ்சள்தூள்+ஊற வைத்த கடலைப் பருப்பு சேர்க்கவும்.

*பின் கத்திரிக்காயை போட்டு சிறு தீயில் தண்ணீர் விடாமல் வதக்கவும்.

*தேவைக்கேற்ப அப்பப்போ எண்ணெய் ஊற்றவும்.

*கத்திரிக்காய் நன்கு வெந்ததும் உப்பு+எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.

*கிரேவி ஆறியதும் சாதத்தை போட்டு உடையாமல் கிளறி பரிமாறவும்.

பி.கு:
பெரிய கத்திரிக்காயில் விதைகள் இருக்காது,அதில் செய்தால் நன்றாக இருக்கும்.


6 பேர் ருசி பார்த்தவர்கள்:

தேவன் மாயம் said...

படமெல்லாம் கலக்கல்!!
நான் சமைக்கும்போது உபயொகப்படுத்திக்கொள்கிறேன்!!

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தேவன்மயம்!!

சிறகுகள் said...

படங்களுடன் படைப்புகள் பார்ப்பதற்கே அழகாக உள்ளது.. சுவைக்க விருப்பம் ஏற்படுகிறது...அருமை...!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கண்ணா!!.

Unknown said...

மேனு சூப்பரா இருக்கு கத்தரிக்காய் சாதம்...கலக்கிட்டீங்க..செய்து பார்க்கனும், படத்துல இருக்கிற கத்தரிக்காய் என்கிட்ட இப்போ இல்ல..அதான் வாங்கிட்டு வந்து செய்து பார்த்துட்டு சொல்றேன்...

Menaga Sathia said...

மாமி செய்துப் பாருங்க,நல்லாயிருக்கும்.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மாமி!!

01 09 10