Monday 8 June 2009 | By: Menaga Sathia

சிக்கன் லாலிபாப்


நாம் சாதரணமாக சிக்கனை மாசாலா தடவி,ஊறவைத்து பின் எண்ணெயில் பொரிப்போம்.மேலே மட்டும் வெந்து,உள்ளே வேகாமல் இருக்கும்.நானும் அப்படித்தான் செய்வேன்.வேகாமல் இருக்கும் அதனால் பொரிக்காமல் அவனில் செய்து சாப்பிடுவேன்.என் ப்ரெண்ட் திருமதி.ஜலிலா அவர்களின் குறிப்பை பார்த்து வேகவைத்து பொரித்து செய்தேன்.ரொம்ப நல்லா இருந்தது.நன்றி ஜலிலா அக்கா!!.

தே.பொருட்கள்:

சிக்கன் லெக் பீஸ் - 6
ரெட்கலர் -1 சிட்டிகை
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
புதினா,கொத்தமல்லி -சிறிது
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழௌது - 3/4 டேபிள்ஸ்பூன்
தயிர் - 1டேபிள்ஸ்பூன்
மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்
சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
முட்டை வெள்ளைக்கரு -1

செய்முறை:

* சிக்கனை சுத்தம் செய்து நடுவில் அங்கங்கே கீறிக்கொள்ளவும்.
*பின் அதில் புதினா+கொத்தமல்லி+மிளகாய்த்தூள்+ரெட்கலர்+இஞ்சி பூண்டு விழுது+தயிர்+ சிறிது உப்பு அனைத்தையும் கலந்து வைக்கவும்.

*குக்கரில் சிக்கனை தண்ணீர் ஊற்றாமல் 3 விசில் வரை வேகவிடவும்.சிக்கனில் தண்ணீர் விடும்,அதனால் தண்ணீர் ஊற்ற வேண்டாம்.

*ப்ரெஷ்ர் அடங்கியதும் திறந்துப் பார்த்தால் கறி வெந்து தண்ணீர் விட்டிருக்கும்.

*சிக்கனை மட்டும் தனியா எடுத்து அதில் மைதாமாவு+சோளமாவு+முட்டை வெள்ளைகரு+ தேவைப்பட்டால் சிறிது உப்பு கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.

*பிசையும் போது தண்ணீர் தேவையெனில் சிக்கன் வெந்த தண்ணீர் ஊற்றி பிசையவும்.

*பின் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

*சுவையான சிக்கன் லாலிபாப் ரெடி.

12 பேர் ருசி பார்த்தவர்கள்:

ராஜ நடராஜன் said...

//நாம் சாதரணமாக சிக்கனை மாசாலா தடவி,ஊறவைத்து பின் எண்ணெயில் பொரிப்போம்.மேலே மட்டும் வெந்து,உள்ளே வேகாமல் இருக்கும்//

தங்கமணி ரகசியம்!கோழிய கட்டாயம் கத்தில கீறி விடுவது.
Simmering point எனும் சின்னதா நெருப்புல வறுக்கிறது.இப்படி வறுத்தால் மட்டுமே ருசி.குக்கர் டெக்னிக் சரியா (ருசியா) வருமான்னு எனக்கு சந்தேகம்:)

Menaga Sathia said...

நானும் நீங்க சொல்ற மாதிரி கீறிவிட்டு க்ரில் பண்ணுவேன்,ஆனால் குக்கரில் வேகவைத்து செய்ததில் சுவையில் எந்த மாற்றமும் இல்லை,நன்றாக இருந்தது.செய்து பாருங்கள்.நன்றி ராஜ நடராஜன்!!

Malini's Signature said...

சமையல் ராணியின்(ஜலீலா அக்கா) குறிப்பு ஆச்சே சுவையாக தான் இருக்கும்... ஆனா எனக்கு சிக்கனை கீறி அவனில் 40 நிமிடம் (Bake) வைத்தால் உள்ளே வெளியே எல்லாம் ஒரே மாதிரி தான் வெந்து இருக்கும்பா..

SUMAZLA/சுமஜ்லா said...

நாவில் நீர் ஊறுது! செய்து பார்த்து மறுபடியும் பின்னூட்டமிடுகிறேன்.

Jaleela Kamal said...

மேனகா ரொம்ப நன்றி.

என் பேம‌ஸான‌ குழ‌ந்தைக்க‌ளுக்கும் பெரிய‌வ‌ர்க‌ளுக்கும் பிடித்த‌ லாலிபாப், இத‌ நான் செய்த‌தை விட‌ நீங‌க‌ செய்து பார்த்த‌து ரொம்ப‌ ஜோரா இருக்கு.
பார்த்ததும் புதுமாதிரியா இருக்கும் என்று உடனே ஓடிவந்தேன், இன்ப அதிர்சி என் பெயரை சொல்லி என் குறிப்பு படி சொல்லி அதை பிளாக்கிலும் சொல்லி இருக்கிறீர்கள்.

Menaga Sathia said...

நானும் அவனில் பேக் செய்து சாப்பிடுவேன்பா,ஆனால் எண்ணெயில் பொரிக்கும் சில கரி உள்ளே வேகாமலிருக்கும்.எண்ணெயில் பொரிக்கும் போது மட்டும் வேகவைத்து செய்வேன் .நன்ரி ஹர்ஷினி!!

Menaga Sathia said...

செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் சுகைனா,நன்றி!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஜலிலாக்கா,உங்க குறிப்பை பார்த்துதான் வேகவைத்து செய்கிறேன்.

Anonymous said...

there is very little chance of not being cooked when fried. need to lower the flame then and fry slowly. but not healthy to fry though.

Asiya Omar said...

அருமை மேனகா.

Asiya Omar said...

அருமை மேனகா.

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!!

01 09 10