Monday 20 July 2009 | By: Menaga Sathia

தேங்காய் சாதம்

தே.பொருட்கள்:

உதிராக வடித்த சாதம் - 1 கப்
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
பொரித்தஅப்பளப்பூ - 10
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு+உளுத்தம்பருப்பு = 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 3/4 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
காய்ந்த மிளகாய்- 3
முந்திரிப்பருப்பு - விருப்பத்துக்கு

செய்முறை:

*பொரித்த அப்பளப்பூவை நொறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து தேங்காய்த்துருவலை போட்டு நன்கு வதக்கவும்.

*அதனுடன் உப்பு+நொறுக்கிய அப்பளப்பூவை போட்டு கிளறி இறக்கவும்.

*ஆறியதும் சாதத்தை போட்டு கிளறி பரிமாறவும்.

பி.கு:

இது செய்வதற்க்கும் ரொம்ப ஈஸி.வறுவலுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

17 பேர் ருசி பார்த்தவர்கள்:

ரவி said...

தட்ல இருக்க உருளக்கெழங்கு பொரியலும் வருமா >? கி கி கி

ப்ரியமுடன் வசந்த் said...

ஈஸியான விளக்கம் மேடம்......

Menaga Sathia said...

உங்களுக்கு வேனுமா சொல்லுங்க,தரேன்.தங்கள் கருத்துக்கு நன்றி ரவி!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி வசந்த்!!

GEETHA ACHAL said...

எனக்கு மிகவும் பிடித்த தேங்காய் சாதம். அடிக்கடி வீட்டில் செய்வது. அனவருக்கும் மிக விருப்பம்.

நான் இத்துடன் வெங்காயம் வதக்கி சேர்த்து செய்வேன். மிகவும் சுவையாக இருக்கும்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதுவும் சற்று கூடுதலாக கடலைப்பருப்பை போட்டால் சூப்பர்..

Admin said...

உங்கள் உணவுகளை வாசிக்கும் போதே சுவையாக இருக்கிறது சாப்பிட்டால் எப்படி இருக்கும்...

Menaga Sathia said...

நீங்க சொன்ன மாதிரி வெங்காயம் போட்டு செய்து பார்க்கிறேன்.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ராஜ்!!

Menaga Sathia said...

செய்து பாருங்க நன்றாக இருக்கும்,கருத்துக்கு மிக்க நன்றி சந்ரு!!

Manuneedhi - தமிழன் said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

மாமி வாழ்த்துக்கள் உங்களுக்கு கிடைத்திருக்கும் அவார்ட்க்கு... தேங்காய் சாதம் செய்து பார்த்தேன்..ருசியாக இருந்தது நன்றி..அப்பளத்தை உடன் சேர்க்காமல் கையில் கொடுத்துவிட்டேன்..வேண்டுமென்றால் பிரட்டிகொள்ளட்டும்னு...அவரும் நன்றாக இருப்பாதாக தான் சொன்னார்..மீண்டும் நன்றி மாமி!!!!

Anonymous said...

ஹாய் மேனகா,
இப்டி தான் எங்கள் வீட்டில் செய்வோம்.எனக்கு ரொம்ப புடிக்கும்.எங்காவது பக்கத்தில் பிக்னிக் செல்லும்பொழுது என் அம்மா இந்த விதத்தில் தேங்காய் சாதம் செய்து கொண்டு வருவார்கள்.இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி தொக்கும்,வாழைக்காய் வருவலும் எனக்கு ரொம்ப புடிக்கும்.வாழ்த்துக்கள்.
அன்புடன்,
அம்மு.

dsfs said...

நீண்ட நாட்களாக எங்கள் வீட்டில் இதை செய்யவே இல்லை. நினைவு படுத்தி நாக்கில் எச்சில் ஊற வைத்து விட்டீர்கள்.

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தமிழன்!!

செய்தீங்களா,தங்கள் வாழ்த்திற்க்கும்,பின்னூட்டத்ததிற்க்கும் நன்றி மாமி!!

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அம்மு!!

அப்புறமென்ன செய்து சாப்பிடுங்கப்பா,தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மலர்!!

வால்பையன் said...

எனக்கு ரொம்ப பிடித்த சாதம் பகிர்ந்தமைக்கு நன்றி!

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி வால்பையன்!!

01 09 10