Friday 17 July 2009 | By: Menaga Sathia

32 கேள்விகளும் பதில்களும்

32 கேள்விகள் - தொடர்ப்பதிவு

இந்த தொடர் பதிவு எழுத அழைத்த எனதருமைத் தோழி பாயிஷாகாதருக்கு நன்றி,நன்றி!!


1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

எங்கப்பா வைத்த பெயர் மேனகா,அதனால் இந்த பெயர் பிடிக்கும் (சின்ன வயசுல இந்த பெயர் பிடிக்காது,அப்போ அப்பாகிட்ட அழுத காலமும் உண்டு.இப்போ தான் இந்த பெயரின் அருமை தெரியுது)

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

15 வருடத்துக்கு முன் என் தந்தை இறந்த போது,இப்போழுதும் அழுதேன் நேற்று..

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்ப பிடிக்கும்..

4.பிடித்த மதிய உணவு என்ன?

கல்யாண கேசரி,வத்தக்குழம்பு,ரசகுல்லா.....லிஸ்ட்ல இன்னும் நிறைய இருக்கு..

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

கிடைத்த நட்பை பத்திரமா வச்சிருப்பேன், புதிதாக என்றால் யோசிப்பேன்..

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவியில் பிடிக்கும்...

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள்..

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடித்தது மற்றவர்களிடம் அன்பாய் இருப்பது – பிடிக்காதது கோபம்

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்தது: கோபப்பட்டு 10 நிமிடத்தில் என்னிடம் பேசுவார் (நான் எப்படின்னு மட்டும் கேட்கக்கூடாது)

பிடிக்காதது: அதேகோபம் தான்


10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

அம்மா,அப்பா..

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

ரோஸ் கலர்

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

என் தோழி ஹர்ஷினி அம்மா ப்ளாக்கிலிருந்து கிட்ஸ் பாட்டு என் மகளுக்காக கேட்கிறேன்.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

நீலம்,கருப்பு

14.பிடித்த மணம் ?

மண்ணென்ணெய்,மல்லிக்கைப்பூ வாசனை,

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

* சுகைனா சிறுகதைகள்,ப்ளாக் பத்தி இடுகை என அனைத்தும் பிடிக்கும்..

* கீதா ஆச்சல் இவங்களின் சமையல் குழந்தைகளுக்கு பிடித்தமானதகாவும்,ஈஸியாகவும் இருக்கும்.

*சம்பத்குமார் இவரின் அனைத்து இடுகைகளும் பிடிக்கும்.


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

பாயிஷாகாதர்,அவங்களின் அனைத்து கைவேலைப்பாடுகள்,டிப்ஸ்கள் ரொம்ப பிடிக்கும்.

17. பிடித்த விளையாட்டு?

சுடோகு,கண்ணாமூச்சி..

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

நகைச்சுவை+த்ரில்லர் திரைப்படங்கள்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

வாமணன்

21.பிடித்த பருவ காலம் எது?

மழை காலம்.

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

நெட்ல ரமணிசந்திரன் கதை..

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

வாரம் ஒரு தடவையாவது.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

மனதுக்கு பிடித்த மெல்லிசை. அதிக சத்தம் பிடிக்காது.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

ப்ரான்ஸ்.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

நன்றாக கணக்கு போடுவது.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நம்பிக்கை துரோகம்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அழுகை

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

மைசூர்,தாஜ்மகால்

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

நான் நானாகவே இருக்க ஆசை

31.கனவன் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

எதுவுமில்லை

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

"Demain Demain Ne Viendrais Jamais". இது ஒரு ப்ரெஞ்ச் பழமொழி.நாளை நாளை என்பது இல்லை என்றே அர்த்தம்.அதனால் இன்னிக்கு என்ன நினைக்கிறோமோ அதன்படி செய்து வாழனும்.

11 பேர் ருசி பார்த்தவர்கள்:

Admin said...

நல்ல பதில்கள்..

Unknown said...

அன்பு தோழி மேனகா கேள்விகளுக்கு மிகவும் அழகாக பதில் சொல்லியிருக்கிங்க மிகவும் அருமை..

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்லா சுருக்கமா எழுதி இருக்கீங்க அக்கா.
//இப்போ தான் இந்த பெயரின் அருமை தெரியுது//
அப்படி என்னக்கா ? சொல்லுங்களேன்?

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி சந்ரு!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி பாயிஷா!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ராஜ்!!
////இப்போ தான் இந்த பெயரின் அருமை தெரியுது//
அப்படி என்னக்கா ? சொல்லுங்களேன்?// அதுவா ஒன்னுமில்லைப்பா இந்திராகாந்தி மருமக பெயரும் அதானே அதை சொன்னேன் இப்போ நம்ம பெயர் எவ்வளவு பேமஸ்ன்னு இப்போ புரியுதாப்பா...

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஹூம்ம்ம். முடியலக்கா...

குறை ஒன்றும் இல்லை !!! said...

புடிச்சிருக்கோ இல்லையோ.. படிக்கிற காலத்தில பரிட்சை புடிக்கல, காதலிக்கறப்போ அப்பாவ புடிக்கல, வேலைக்கு போனா வேலையே புடிக்கல, கல்யாணத்துக்கு அப்புறம் எதுவுமே புடிக்கல இருந்தாலும் எதையும் தவிர்க்க முடியாமல் ஏத்துக்கிட்ட மாதிறி இதையும் ஏத்துக்கோங்க ஸ்சாமியோயோ...

http://yellorumyellamum.blogspot.com/2009/07/blog-post_19.html

நட்புடன் ஜமால் said...

இயல்பான பதில்கள்.

வாழ்வு பற்றி சொன்னது அருமை.

Menaga Sathia said...

ஏன் என்ன ஆச்சு ராஜ்,இப்பவே முடியலன்னு சொல்றீங்க.
//காதலிக்கறப்போ அப்பாவ புடிக்கல,கல்யாணத்துக்கு அப்புறம் எதுவுமே புடிக்கல //இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல.ம்ம் பானு கிட்ட போட்டு குடுக்கிறேன் இருங்க.
தங்கள் விருதுக்கு மிக்க நன்றி தம்பி!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஜமால்!!

01 09 10