Wednesday 29 April 2009 | By: Menaga Sathia

மட்டன் பிரியாணி /Mutton Biryani


தே.பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 4 கப்
மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 3 பெரியது
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - 4 மேஜைகரண்டி
கொத்தமல்லித்தழை - 1 கட்டு
புதினா - 1 கட்டு
தயிர் - 250 கிராம்
எலுமிச்சைப் பழம் - 1
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
கலந்த மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
பட்டர் - 100 கிராம்
உப்பு+எண்ணெய் = தேவைக்கேற்ப

தாளிக்க:

பட்டை - 1 துண்டு
கிராம்பு - 5
ஏலக்காய் - 2
பிரிஞ்சி இலை - 3

மேலேதூவ:

ஏலக்காய் - 5 (பொடித்துக் கொள்ளவும்)
ஜாதிக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
காய்ந்த வறுத்த வெங்காயம் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

*அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊற வைத்து தண்ணீயை வடித்துக் கொள்ளவும்.

*வெங்காயம்+தக்காளி +கொத்தமல்லிதழை+புதினா இவற்றை அரிந்துக் கொள்ளவும்.பச்சை மிளகாயைக் கீறவும்.
*மட்டனை சுத்தம் செய்து 1 மேஜைக்கரண்டிஇஞ்சிபூண்டு விழுது+கரம் மசாலா+125 கிராம் தயிர்+1/2 டேபிள்ஸ்பூன் கலந்த மிளகாய்த்தூள் +1 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் வரும்வரை வேகவிடவும்.*பாத்திரத்தில் பட்டர்+எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம் செர்த்து வதக்கவும்.

*பின் இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+பச்சை மிளகாய்+புதினா கொத்தமல்லி+தயிர்+மீதமிருக்கும் தூள் வகைகள் இவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.

*குக்கரைத் திறந்து கறியைத் தனியாக வைத்து,தண்ணீயை அளந்துக் கொள்ளவும்.

*மசாலா நன்கு வதங்கியதும்,1 கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் விகிதம் மொத்தம் 6 கப் தண்ணீர் சேர்க்கவும்[கறி வேக வைத்த தண்ணீர்+தண்ணீர்].

*நன்கு கொதித்ததும் எலுமிச்சை சாறு+உப்பு+கறி+அரிசி சேர்க்கவும்.

*அவனை 190 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.

*தண்ணீர் நன்கு சுண்டி வந்ததும் 10 நிமிடம் பிரியாணியை அவனில் வைக்கவும்.

*அரிசி நன்கு வெந்து பொலபொலவென இருக்கும் போது சமபடுத்தி மேலேதூவ சொன்ன பொருட்களை தூவி 5 நிமிடம் கழித்து பரிமாறலாம்.

பி.கு:அவரவர் அவனுக்கு ஏற்ப டைம் மாறலாம்
21 பேர் ருசி பார்த்தவர்கள்:

சென்ஷி said...

பார்க்கும்போதே பசியை தூண்ட வச்சுட்டீங்க :)

சென்ஷி said...

இந்த கமெண்ட் ஆப்சனை ஆங்கிலத்துல மாத்துங்களேன். நாலஞ்சு தடவை வந்து பார்த்துட்டு ஒண்ணும் புரியாம திரும்பிட்டேன் :(

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சென்ஷி!!.


//இந்த கமெண்ட் ஆப்சனை ஆங்கிலத்துல மாத்துங்களேன். நாலஞ்சு தடவை வந்து பார்த்துட்டு ஒண்ணும் புரியாம திரும்பிட்டேன் :(//

கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.

Malini's Signature said...

எங்க வீட்டு பிறியாணி வேற மாதிரி இருக்கும் மேனகா... இதை அடுத்த முறை பன்னி பாக்கனும்..

//இந்த கமெண்ட் ஆப்சனை ஆங்கிலத்துல மாத்துங்களேன். நாலஞ்சு தடவை வந்து பார்த்துட்டு ஒண்ணும் புரியாம திரும்பிட்டேன் :(//


ஆமாம்பா இதை கொஞ்சம் மாத்துங்க...எனக்கும் சில சமையம் கமெண்ட் போகுத இல்லையானே தெரியமாட்டேங்குது....குழப்பமா இருக்கும்

Menaga Sathia said...

இந்த முறையிலும் செய்து பாருங்க ஹர்ஷினி.நன்றிப்பா!!.

Menaga Sathia said...

publier un commentaire means post ur comment,aperçu means preview என்று அர்த்தம்பா.நீங்க கமெண்ட் போஸ்ட் செய்த பின் என்ன வருதுனு சொல்லுங்க,அர்த்தம் சொல்றேன்.நானும் எவ்வோளோ முயற்சித்துவிட்டேன் மாத்தமுடியல.அதுவுமில்லாமல் இங்க இருக்கும் கம்ப்யூட்டரில் புல்லா ப்ரெஞ்சுல தான் இருக்கும்பா.ஆரம்பத்துல கூகிள் ஐடி கூட நான் ப்ரெஞ்மொழியிலேயே கிரியேட் பண்ணிட்டேன் அதான் ப்ளாக் கூட ப்ரெஞ்சுல வருதுப்பா.
ஆப்ஷன் மாத்தமுடியாததால வருந்துகிறேன்பா.எனினும் மீண்டும் முயற்சி செய்கிறேன் சென்ஷி மற்றும் ஹர்ஷினி!!

தாஜ் said...

பரவாயில்லை மேனகா அப்பப்ப எங்களுக்கு ஃபிரென்ச்சும் சேர்த்து கத்து கொடுங்க

தாஜ் said...

பிரியாணி ரொம்ப நல்லாயிருக்குப்பா

Menaga Sathia said...

நன்றி தாஜ்!!.ப்ரெஞ்ச் தானே கத்துக்குடுத்துட்டா போச்சு.நானும் நிறைய கத்துக்கிட்ட மாதிரியும் இருக்கும்பா.

Unknown said...

மாமி!!கலக்குறீங்க..பார்க்க அழகா இருக்கு,ஆனால் எனக்கு எந்த பிரியாணி செய்தாலும் பிரியாணி மாதிரி நல்ல ஸ்மெல் வரமாட்டேங்குது, சும்மா ஏதோ கலவைசாதம் மாதிரி லைட் ஸ்மெல்தான்..என்ன செய்யலாம்னு முடிந்தால் சொல்லுங்க..

Menaga Sathia said...

மாமி நான் சொன்ன முறையில் அப்படியே செய்து பாருங்க,நல்லா வரும்.செய்து பார்த்து சொல்லுங்க.நன்றி மாமி!!

ஸாதிகா said...

அவனில் தம் போடும் முறை.புதுமையாக உள்ளது.அடுப்பில்,குக்கரில் போடுவதால் சில சமயம் அடியும் பிடித்து விடுகின்றது.அடுத்த முறை உங்கள் குறிப்புப்படி செய்யப்போகிறேன் மேனகா.

Menaga Sathia said...

இது ரொம்ப ஈஸியான முறையில்.அவனில் தம் போடுவதால் அடிபிடிக்கும் என்ற கவலையே கிடையாது.அடுத்த முறை முயற்ச்சித்து பாருங்கள்.நன்றி ஸாதிகாக்கா!!

சௌந்தர் said...

4 கப் என்றால் எத்தனை கிலோ சொலுங்க

Menaga Sathia said...

4 கப் என்றால் 1/2 கிலோ அரிசி என்று நினைக்கிறேன்.எனக்கு கிலோ அளவு சரியாக தெரியவில்லை.நான் எல்லாமே கப் அளவில்தான் போடுவது....

pradeep said...

இந்த மெத்தட்ல செய்த டேஸ்ட் அவ்வளவா இருக்காது.ஒரு சின்ன மாற்றம் செயதால் சூப்பரா இருக்கும்

Menaga Sathia said...

நன்றி ப்ரதீப்!! அவரவர் சுவைக்கேற்ப மாற்றி செய்துகொள்ளவேண்டியதுதான்...

Unknown said...

supera irukku

Unknown said...

super

Unknown said...

எங்க வீட்டு பிறியாணி வேற மாதிரி இருக்கும் மேனகா... , பார்க்கும்போதே பசியை தூண்ட வச்சுட்டீங்க

Unknown said...

பார்க்கும்போதே பசியை தூண்ட வச்சுட்டீங்க

01 09 10