Thursday 2 April 2009 | By: Menaga Sathia

பாகற்காய் குழம்பு



தே.பொருட்கள்:


புளி - 1 எலுமிச்சை அளவு+2 சுண்டைக்காயளவு
கலந்த மிளகாய்த்தூள் - 1டேபிள்ஸ்பூன்
பாகற்காய் - 2 பெரியது
சின்ன வெங்காயம் -15
பூண்டு - 10 பல்
தக்காளி - 1
உப்பு+எண்ணெய் = தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்


தாளிக்க:


வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பில்லை - சிறிது
செய்முறை:


* எலுமிச்சையளவு உள்ள புளியைக் 1 கோப்பையளவு கரைத்துக் கொள்ளவும்.

*பாகற்காயை மெல்லிய வட்டங்களாக நறுக்கி,உப்பு சேர்த்து 10 நிமிடம் பிசிறி வைக்கவும்.பின் 2 சுண்டைக்காயளவு புளியைக் கரைத்து பாகற்காயை அந்த நீரில் 15 நிமிடம் ஊறவைத்து அலசி வைக்கவும்.இப்படி செய்தால் ஒரளவு கசப்பு குறையும்.


*வெங்காயம்+தக்காளி பொடியாக நறுக்கவும்.


*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளிக்கவும்.


*வெங்காயம்,தக்காளி,பாகற்காய்,மிளகாய்த்தூள் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.


*வதங்கியதும் புளித்தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.


*நன்கு கொதித்ததும் நல்லெண்ணெய் ஊற்றி 5 நிமிடம் கொதித்தபின் இறக்கினால் வாசனையாக இருக்கும்.


பி.கு: பாகற்காய் வத்தலிலும் செய்யலாம்.

4 பேர் ருசி பார்த்தவர்கள்:

Malini's Signature said...

மேனகா நான் தாளிக்க வடகம் போட்டதில்லை என்ன வடகம் போடனும்?

Menaga Sathia said...

ஹர்ஷினி தாளிக்க வெங்காய வடகம் போடனும்பா.அந்த குறிப்பு தமிழ்குடும்பத்தில் இருக்கு.அது இல்லன்னா கடுகு+உ.பருப்பு+சீரகம்+வெந்தயம் தலா 1/2 டீஸ்பூன் போடலாம்.வடகம் சேர்த்து செய்தால் நல்ல வாசனையாவும்,டேஸ்டாகவும் இருக்கும் ஹர்ஷினி.

Unknown said...

மேனு என்ன வடகம் போட்டு தாளிக்கனும்?முதல்ல வடகம் என்றால் என்ன? ஆனால் ஃபோட்டோல குழம்பு அழகா(டேஸ்டா) இருக்கு...

Menaga Sathia said...

ஹர்ஷினி,தாமரை மாமி வடக குறிப்பு குடுத்திருக்கேன் பாருங்க.

01 09 10