Wednesday 22 April 2009 | By: Menaga Sathia

புடலங்காய் பொரியல்


தே.பொருட்கள்:

புடலங்காய் - 1 பெரியது
மஞ்சள்தூள் - 1டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்தேங்காய்துருவல் - 1/4 கப்

தாளிக்க:

கடுகு + உளுத்தம்பருப்பு = 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
உப்பு + எண்ணெய் = தேவைக்கேற்ப

செய்முறை:

*.புடலங்காயை பொடியாக கட்செய்து உப்பு+மஞ்சள்தூல் சேர்த்து பிசைந்து வைக்கவும்.

*அப்போழுது தான் அதில் இருக்கும் நீர்விடும்.15 நிமிடம் கழித்து நீரில் அலசி பிழிந்து வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து புடலங்காயை சேர்க்கவும்.

*1 கப் நீர்+உப்பு சேர்த்து வேகவிடவும்.

*வெந்ததும் தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும்.

பி.கு:
விருப்பப்பட்டால் சிறிது வறுத்த வேர்கடலையை லேசாக பொடித்துப் போடலாம்.

4 பேர் ருசி பார்த்தவர்கள்:

Asiya Omar said...

பொரியல் அழகு.வேர்க்கடலை ஐடியா புதுசு.

Chef.Palani Murugan, said...

வேர்க‌ட‌லை Additional taste

ஸாதிகா said...

வேர்கடலை சேரத்தால் சுவை அள்லுமே.பொதுவாக ஆந்திராசமையலில் காய்களுக்கு அநேகமாக வேர்கடலை பொடி சேர்த்துதான் சமைகின்றார்கள்.

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!! வேர்க்கடலை சேர்த்தால் இன்னும் ருசியாக இருக்கும்...

நன்றி செஃப்!!

நன்றி ஸாதிகாக்கா!! ஆமாம் அக்கா நானும் கேள்விபட்டிருக்கேன்...

01 09 10