Thursday 2 April 2009 | By: Menaga Sathia

அருகம்புல்லின் மகிமை


* தினமும் காலையில் அருகம்புல்லை வேரோடு பரித்து மண்போக கழுவி,வேருடன் அரைத்து சாறு பிழியவும்.1/2 தேக்கரண்டி மிளகு,1/2 தேக்கரண்டிசீரகம்,1/4 டீஸ்பூன் அதிமதுரம்,1/4 டீஸ்பூன் சித்தரத்தை எல்லாவற்றையும் பொடித்து சலித்துக் கொள்ளவும்.1 டம்ளர் வெந்நீரில் மேற்கண்ட பொடியை 1 டீஸ்பூன் போட்டு 1/2 டம்ளர் அருகம்புல் சாறு கலந்து தினமும் பருகி வந்தால் இருமல்,சளி போயே போச்சு.

*அருகம்புல் வேரை மட்டும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி நிழலில் உலர்த்தி பொடி செய்து சலித்து வைத்துக் கொண்டால் பலநோய்களுக்கு இது ஒரு அற்புதமான மருந்தாக உபயோகப்படுத்தலாம்.

*1 டீஸ்பூன் அருகம்புல் வேர் பொடியைப் பாலில் கலந்து குடித்தால் மூலநோய்க்கு குட்பை சொல்லலாம்.

*அருகம்புல்லை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி,100 கிராம் பாசிப்பருப்பை வேகவைத்து,2 பல் பூண்டு,சிறு துண்டு இஞ்சி நசுக்கி உப்பு+அருகம்புல் சேர்த்துக் கிளரினால் அருகம்புல் பொரியல் ரெடி.இதை சாப்பிட்டால் உடலுக்கு சத்தும் ஞாபகசக்தியும் பெருகும்.

*அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

* அருகம்புல் சாறை தேனுடன் கலந்து குடித்தால் தாது விருத்தி ஏற்படும்,உடல் உறுதியாகும்,ரத்தம் பெருகும்

3 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

ஆரோக்க்கியமான டிப்ஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அறுகம்புல்லா? அருகம்புல்லா?
இங்கு பெறுவது கடினம்.

Menaga Sathia said...

எனக்கும் இது கிடைப்பது கஷ்டம்.இந்தியாவில் சும்மாவே வயல்,வாய்க்கால் ஓரம் விளைந்து இருக்கும்.

01 09 10