இதற்கு புடலங்காய்,அவரைக்காய்,கீரை,கீரைத்தண்டு,பூசணிக்காய் மட்டுமே நன்றாக இருக்கும்.
அவரையில் செய்தால் தனி ருசி,நான் அவரைக்காயில் தான் செய்துருக்கேன்.
குழம்பு வகைகளுக்கும்,சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ள அருமையான சைட் டிஷ் !!
காய்களை வதக்க நல்லெண்ணெய் பயன்படுத்தினால் நிறம் மாறாது.
அதே போல் இதில் தேங்காய் மணம் தான் முக்கியம்,அதனால் நிறையவே சேர்க்க வேண்டும்.
Recipe Source : Here
தே.பொருட்கள்
அவரைக்காய் -1/4 கிலோ
வேகவைத்த பாசிப்பருப்பு- 1/4 கப்
மஞ்சள்தூல் -1 சிட்டிகை
உப்பு -தேவைக்கு
நல்லெண்ணெய் -1 டீஸ்பூன்
அரைக்க
தேங்காய்த்துறுவல் -1/3 கப்
மிளகாய் வற்றல்- 3
சீரகம்- 2 டீஸ்பூன்
தாளிக்க
தேங்காய் எண்ணெய்- 1 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு- தலா 1/4 டீஸ்பூன்
சீரகம் -1/4 டீஸ்பூன்
கரிவேப்பிலை- 1கொத்து
காய்ந்த மிளகாய்- 1
செய்முறை
*அவரைக்காயை பொடியாக நறுக்கி நல்லெண்ணெய்+மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி நீர் ஊற்றி வேகவிடவும்.
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைக்கவும்.
*காய் வெந்ததும் அரைத்த மசாலா +பாசிப்பருப்பு+உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
*பின் தேங்காய் எண்ணெயில் தாளித்து சேர்க்கவும்.
4 பேர் ருசி பார்த்தவர்கள்:
super ithai poosanikayil seithiruken. ithaiyum seithu parkirenda :)
செய்து பார்க்க வேண்டும்...
ரொம்ப அருமையா இருக்கு மேனகா.
இதில் பாசிப் பருப்பு சேராமலும் செய்வோம்.
தேங்காஉ இன்னும் கூடுதல்.
மிக நன்றி மா.
மிக அருமை அவரக்காயில் இன்னும் மணமாக இருக்கும் , இது மொளக்கூட்டல் நம்ம சாதாரணாமாகக காய் பருப்புகளில் செய்வது தான் ஊருக்கு ஊர் பெயர் வித்தியாசப்படும் இல்லையா
Post a Comment