Monday 23 January 2012 | By: Menaga Sathia

கத்திரிக்காய் கொத்தமல்லி பச்சடி / Brinjal Coriander Pachadi

திருமதி. சோலை அவர்களின் குறிப்பை பார்த்து செய்தது.

தே.பொருட்கள்
வேகவைத்த துவரம்பருப்பு - 1/4 கப்
பொடியாக நறுக்கிய கத்திரிக்காய் - 4
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் - 2
புளிபேஸ்ட் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
சீரகம் - 1 டீஸ்பூன்
உ.பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய்+சாம்பார் பொடி+கத்திரிக்காய் சேர்த்து வதக்கி 1 கப் நீர்+உப்பு சேர்த்து வேகவைக்கவும்.

*5நிமிடத்திற்க்கு பின் புளிபேஸ்ட்+வேகவைத்த பருப்பு சேர்க்கவும்.

*பின் கொத்தமல்லித்தழை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

*கலவை கெட்டியாக இல்லாமலும்,நீர்க்க இல்லாமலும் இருக்கவேண்டும்.கத்திரிக்காய் அதிகநேரம் வேகவைக்கவேண்டாம்.

*இட்லி,தோசை,சாதம் அனைத்திற்க்கும் நன்றாக இருக்கும்.


17 பேர் ருசி பார்த்தவர்கள்:

Lifewithspices said...

romba beautiful recipe perfect for rice, roti, dosa.. romba super..

Priya Suresh said...

Mouthwatering here..super pachadi for idlis..

ஸாதிகா said...

வித்தியாசமான சைட் டிஷ் மேனகா.

சி.பி.செந்தில்குமார் said...

>>5நிமிடத்திற்க்கு பின் புளிபேஸ்ட்

WAT IS IT? I KNOW ONLY TOOTH PASTE & COPY PASTE. HI HI

ராஜி said...

இட்லி தோசைக்கு சைட் டிஷ் என்ன செய்வதுன்னு நைட் படுக்க போறதிலிருந்தே மண்டையை பிச்சுக்குடுவேன். புது டிஷ் அறிமுகப்படுத்தியிருக்கீங்க நன்றி

Vimitha Durai said...

Nice pachadi. Would great with rice.

Sowmya said...

pachadi looks so tempting...thanks for the recipe!

விச்சு said...

கத்தரிக்காய் கொத்துமல்லி பச்சடி பார்க்கும்போதே நல்லாயிருக்கு.

Asiya Omar said...

நல்லாயிருக்கு மேனகா.கிட்ட தட்ட சாம்பார் டேஸ்ட் இருக்கும் போல் தெரியுது.

Sangeetha M said...

very nice recipe..thanks for sharing!!

Spicy Treats
OnGoing Event ~ Dish It Out-Brinjal n Garlic

MyKitchen Flavors-BonAppetit!. said...

Pachadi Combo is new to me but truly delish it must be.Yumm.

Unknown said...

I never prepare brinjal and coriander together. Looks like a nice combo. must give a try.

Shanavi said...

Nice combo Menaga..Looks great..

Kanchana Radhakrishnan said...

நல்லாயிருக்கு.

Mahi said...

New recipe to me..looks yummy!

Unknown said...

Chappati odu pramadama irrukun :) yum!

குறையொன்றுமில்லை. said...

இதுவும் வித்யாசமாகத்தான் இருக்கு ட்ரை பண்ணிடவேண்டியத்துதான்

01 09 10