Sunday 3 March 2013 | By: Menaga Sathia

செட்டிநாடு மட்டன் சுக்கா/Chettinad Mutton Chukka

Recipe Source:Solai's kitchen

தே.பொருட்கள்

மட்டன் - 1/2 கிலோ
நறுக்கிய சின்ன வெங்காயம் -20 எண்ணிக்கை
நறுக்கிய தக்காளி - 1
தனியாத்தூள் - 3 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் -3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
நறுக்கிய பூண்டுப்பல் - 5
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க

தேங்காய்த்துறுவல் -2 டேபிள்ஸ்பூன்
கசகசா+சோம்பு - தலா 1 டீஸ்பூன்

தாளிக்க

பிரியாணி இலை - 2
கிராம்பு - 2
பட்டை - சிறுதுண்டு
கறிவேப்பிலை -10 இலைகள்
சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை

*குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு 1 டேபிள்ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்+பூண்டுப்பல்+மட்டன் சேர்த்து வதக்கி தனியாத்தூள்+1 டீஸ்பூன் வரமிளகய்த்தூள்+சிறிது உப்பு  சேர்த்து வதக்கி தேவையான நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*வெந்ததும் கறி+வேகவைத்த நீர் தனிதனியாக வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து இஞ்சிப்பூண்டு விழுது+வெங்காயம்+தக்காளி+மீதமுள்ள தூள் வகைகள்+உப்பு சேர்த்து வதக்கவும்.

*பின் அரைத்த தேங்காய் விழுது+கறிவேகவைத்த நீர் சேர்த்து சிறுதீயில் கொதிக்கவிடவும்.

*அடிக்கடி கிளறி விடவும் இல்லையெனில் அடிப்பிடிக்கும்.

*கிரேவி திக்கானதும் வேகவைத்த கரியை சேர்த்து சுருள கிளறி இறக்கவும்.

Sending to Faiza's Passion on plate & T and T  Chettinad Cuisine  & Kitchen Chronicles!!

12 பேர் ருசி பார்த்தவர்கள்:

திண்டுக்கல் தனபாலன் said...

படம் செம...

Unknown said...

super delicious... thx dear

Priya Anandakumar said...

Very very yummy and mouth watering...

MANO நாஞ்சில் மனோ said...

ருசி பார்க்கத்தான் முடியலையே அவ்வ்வ்வ்வ்...படத்தை பார்த்ததுமே பசி எடுக்குதே...!

Sangeetha Priya said...

delicious preparation...loved it.

Akila said...

Finger licking mutton

Event: Dish name starts with R till April 15th

Sangeetha Nambi said...

Wow ! Finger licking...
http://recipe-excavator.blogspot.com

Vimitha Durai said...

Super tempting. drooling here

Unknown said...

romba super...love this...

Priya Suresh said...

One of my fav dish,love love with hot piping rasam rice.

ஸாதிகா said...

வாழ்த்துக்கள் மேனகா.இணையத்தைக்கலக்கும் இலக்கிய பெண்கள் வரிசையில் நீங்களும் இடம் பெற்றமைக்கு.இது போல் பல அங்கிகாரங்கள் கிடைக்க இனிய வாழ்த்துக்கள்.

http://tamilamudam.blogspot.com/2013/03/blog-post_5.html

Asiya Omar said...

சூப்பராக இருக்கு மேனகா.

01 09 10