Thursday 27 January 2011 | By: Menaga Sathia

மாந்தோல் குழம்பு/ Dry Mangopeel Khuzhampu


இந்த குழம்பு புளி+தக்காளி இல்லாமல் செய்வது.மாந்தோலின் புளிப்பே போதுமானது.மாந்தோல் என்பது மாங்காயை உப்பில் ஊறவைத்து காயவைத்த மாங்காய்.

தே.பொருட்கள்:
மாந்தோல் - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 10
பூண்டுப்பல் - 6
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு + நல்லெண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
வடகம் - 1/2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:
* மாந்தோலை சிறிது நேரம் வெந்நீரில் ஊறவைத்து குக்கரில் சிறிதளவு நீர் வைத்து நன்கு குழைய வேகவைக்கவும்.

*வெந்ததும் நன்கு மசித்துக்கொள்ளவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வடகம்+கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டுப்பல் சேர்த்து வதக்கி மசித்த மாந்தோல்+சாம்பார்பொடி+தேவையானளவு நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

*நன்கு கொத்தித்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.

பி.கு:
மாந்தோலில் நிறைய உப்பு இருப்பதால் உப்பின் அளவை பார்த்து போடவும்.

23 பேர் ருசி பார்த்தவர்கள்:

ஆயிஷா said...

மாந்தோல் குழம்பு.

வித்தியாசமாக இருக்கு.

எல் கே said...

புளி இல்லாமல் சாபிட்டது இல்லை.

Thenammai Lakshmanan said...

மாங்கொட்டைப் பருப்பை அரைத்துக் குழம்பு வைப்பாங்க.. இப்பத்தான் மாந்தோல் குழம்பு பார்க்கிறேன்.. அருமை மேனகா..:)

Reva said...

puthumaiyaa arumaiyaa irukku..
Reva

ஸாதிகா said...

மாந்தோலையும் விட்டு வைக்க வில்லையா?வித்தியாசமாகத்தான் இருக்கு.

Chitra said...

நாவில் நீர் ஊற.....!!!!

GEETHA ACHAL said...

மாந்தோல் என்றால் தாளிக்காத மாங்காய் ஊறுகாயா மேனகா...

அருமையாக இருக்கின்றது....

Priya Suresh said...

Slurp, mouthwatering here,superaa irruku kuzhambu..

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமை. இந்த குழம்பு செய்திருக்கேன்.

Gayathri Kumar said...

My most fav kulambu. Super..

சசிகுமார் said...

தோல கூட விடமாட்டீங்களா ஆடு மாடுக்கு ஏதாவது மிச்சம் வைக்கலாம் அக்கா ha ha ha...

Jayanthy Kumaran said...

Surely delectable recipe...sounds very interesting menaga..
Tasty appetite

Menaga Sathia said...

நன்றி ஆயிஷா!!

நன்றி எல்கே!!

நன்றி தேனக்கா!!

நன்றி ரேவா!!

Menaga Sathia said...

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி சித்ரா!!

நன்றி கீதா!!மாஞ்காய் ஊறுகாய் இல்லப்பா,மாவடுன்னு சொல்லுவாங்களே அது..

நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி காயத்ரி!!

நன்றி சசி!! என்ன செய்ய தோலில்தான் அதிக சத்து இருக்கு சசி...

நன்றி ஜெய்!!

KrithisKitchen said...

puli illadha maandhol kulambu miga arumai...

தெய்வசுகந்தி said...

எங்க அம்மா இந்த குழம்பு செய்வாங்க!!
அருமையான குழம்பு!

vanathy said...

super !

ஜெய்லானி said...

அடுத்ததா....வேனாம் நான் அங்கேயே சொல்லிக்கிரேன் :-))))))

அஸ்மா said...

மாவடுவை மசித்து செய்வது வித்தியாச‌மா இருக்கு மேனகா. பகிர்வுக்கு நன்றி.

Mrs.Mano Saminathan said...

வித்தியாசமாக இருக்கு மேனகா! இது காய வைத்த மாங்காயை ஊறவைத்து செய்வதா? அல்லது மாவடு ஊறுகாயில் இருக்கும் மாவடுவின் தோலை வைத்து செய்வதா? மாவடு ஊறுகாய் என்றால் ஊறவைக்க வேண்டாமே?

Menaga Sathia said...

நன்றி கீர்த்தி!!

நன்றி தெயசுகந்தி!!

நன்றி வானதி!!

ம்ம் அங்கயே கேளுங்க ஜெய்!!

Menaga Sathia said...

நன்றி அஸ்மா அக்கா!!

நன்றி மனோ அம்மா!! இது காயவைத்த மாங்காயை ஊறவைத்து செய்வது...தப்பா எழுதிட்டேன் தலைப்பில்,திருத்திவிடுகிறேன்....

01 09 10