Sunday 7 February 2010 | By: Menaga Sathia

ப்ரெட் பிஸ்ஸா


தேவி மெய்யப்பனின் ப்ரெட் பிஸ்ஸா பார்த்து நான் செய்த குறிப்பு.அவர்களுக்கு என் நன்றி!!
 
தே.பொருட்கள்:

ப்ரெட் ஸ்லைஸ் - 5
தக்காளி சாஸ் - தேவைக்கு
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய குடமிளகாய் - 1
துருவிய கேரட் - 1
ஆலிவ் காய் - 10
துருவிய சீஸ் - 70 கிராம் சிறிய பாக்கெட்
செய்முறை :

* ப்ரெட்டின் ஓரங்களை கட் செய்து தக்காளி சாஸை தடவும்.

*அதன் மேல் வெங்காயம்+கேரட்+குடமிளகாய்+சீஸ்+ஆலிவ் காய் என ஒவ்வொறாக வைக்கவும்.

*அவனை 300 டிகிரிக்கு 5 நிமிடம் முற்சூடு செய்து ப்ரெட் பிஸ்ஸாவை பேக்கிங் டிரேயில் 5 முதல் 8 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.

*எளிதில் செய்யகூடிய குழந்தைகளுக்கு பிடித்த பிஸ்ஸா.குழந்தைகளுக்கு கொடுக்கும் போது தக்காளி சாஸ்க்கு பதில் கெட்சப் தடவலாம். இதனுடன் கிரில் சிக்கன் அல்லது மீனும் அவரவர் விருப்பத்துக்கேற்ப ஸ்டப்பிங் செய்யலாம்.
 
பி.கு:
அவரவர் அவனுக்கு ஏற்ப டைம் மாறலாம்.அதிக நேரம் வைத்தால் ப்ரெட் கருவிவிடும்.

38 பேர் ருசி பார்த்தவர்கள்:

சிங்கக்குட்டி said...

நல்லா இருக்கு மேனகா :-)

நம்ம செட்டி நாடு காரகுழம்பு பத்தி ஒரு இடுகைய போடுங்க :-).

ஒரு ரகசியம் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....தங்கமணி நான் சொன்னா ஒத்துக்க மாட்டாங்க, நீங்க, கீதா, பாயிஷா ஜலீலா யாராவது இடுகைய போட்டா அடுத்த நாளே நமக்கு கிடைச்சுரும் :-) அதான்.

நாஸியா said...

naanum veetula thaan irukken aanaa seyya thaan somberi aa irukku.. unga bread pizzavai paarthaal aasaiyaa iruku idhaiyaachum seiyanum insha Allah

Pavithra Srihari said...

Paarkavae supppeeraaa irukku !!!!

நட்புடன் ஜமால் said...

ஆலிவ்மா

ஆஹா - நெம்ப பிடிக்கும்


அவசியம் செய்து பார்த்திடுவோம்

malarvizhi said...

அருமை . வித்யாசமாக உள்ளது.

டவுசர் பாண்டி said...

இது தான் நமக்கு ஒத்து வரும் போல கீது , பாக்கவே தூலா கீது சூப்பர் !! நல்ல சுவையான தக்காளி ரசம் வெக்கறது எப்படி இன்னு ரவ சொல்லுங்களேன் !!

நான் நல்லாவே சமையல்
பண்ணுவேன் !! இந்த ரசம் மட்டும் எனுக்கு திருப்தியா இருக்க மாட்டுண்ணுது அதான் !!

SUFFIX said...

வாவ் சூப்பர் ஐடியா, ப்ரட்டில் பிஸ்ஸா. செய்து சாப்பிட்டு விட்டுதான் மறுவேளை. நன்றி.

Jaleela Kamal said...

நானும் அடிக்கடி குழந்தைகளுக்கு பிட்சா பிரட், பிட்சா பன், பிட்சாஅ தோசை செய்து அனுப்பி இருக்கிறேன் எல்லா குழந்தைகளிடத்திலும் நல்ல வரவேற்பு இதற்கு,

மைக்ரோ வேவில் வைத்துள்ளேன், ஓவனில் வைப்பது நல்ல ஐடியா

இனி செய்யும் போது இப்படி செய்து பார்க்கனும்.

பிள்ளைகளுக்கு பிட்சா என்றதும் ரொம்ப பிடிக்கும் ஆகையால் பிடிக்காத கேபேஜையும் வைத்து உள்ளே தள்ளலாம்.

அண்ணாமலையான் said...

எப்டித்தான் புதுசு புதுசா செய்வாங்களோ? கலக்குங்க

Menaga Sathia said...

நன்றி சிங்கக்குட்டி!!

//நம்ம செட்டி நாடு காரகுழம்பு பத்தி ஒரு இடுகைய போடுங்க :-).//ரெசிபிதானே போட்டுட்டா போச்சு உங்களுக்காக...

//ஒரு ரகசியம் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....தங்கமணி நான் சொன்னா ஒத்துக்க மாட்டாங்க, நீங்க, கீதா, பாயிஷா ஜலீலா யாராவது இடுகைய போட்டா அடுத்த நாளே நமக்கு கிடைச்சுரும் :-) அதான்.// ஹா ஹா...

Menaga Sathia said...

நிச்சயம் செய்து பாருங்கள்.ரொம்ப சுலபம்தான்.நன்றி நாஸியா!!

நன்றி பவித்ரா!!

Menaga Sathia said...

செய்து பார்த்து சொல்லுங்கள்.நன்றி ஜமால் அண்ணா!!

நன்றி மலர்விழி!!

Menaga Sathia said...

நன்றி அண்ணாத்தே!!

தக்காளி ரசத்துக்கு புளிப்புள்ள பழத்தை உபயோகபடுத்தனும்.புளிப்பில்லாத தக்காளியா இருந்தா கொஞ்சம் புளி சேர்த்துக்கணும்.மத்தபடி நாம சாதராணமா வைக்கிறமாதிரிதான் தக்காளி ரசம் வைக்கனும்.உங்களுக்காக தக்காளிரசம் பதிவு போடுகிறேன்.

//நான் நல்லாவே சமையல்
பண்ணுவேன் !!//நீங்க சொல்றத நம்புறேன்.அப்ப்டியே நீங்க செய்றதையும் பார்சல் பண்ணுங்க அன்ணாத்தே..

Menaga Sathia said...

செய்துவிட்டு சொல்லுங்கள்.நன்றி சகோ!!

Menaga Sathia said...

அவனில் செய்து பாருங்கள்.நீங்க சொல்ற மாதிரி கோஸையும் இதுல வைக்கலாம்.நன்றி ஜலிலாக்கா!!


சமையலில் ஒரு ஆர்வம்தான்.நன்றி அண்ணாமலையான்!!

ஸாதிகா said...

பிரட்டில் பிஸ்ஸா..சுலபமாக செய்து கொடுத்து விடலாம்.

Unknown said...

வாவ் பர்க்கும் பொழுதே நாவில் நீர் வருகிறதே..ரொம்ப நல்லா இருக்கு.. உடனே செய்துவிடுகிறேன்

Perspectivemedley said...

wow.. paarka rombha arumaiya iruku:):).. very nice!.. Naanum next time orathai cut panitu seiran:).. thank you:)

Nithu Bala said...

Looks so nice..love the picture..Devi, my Dear buddy is such a nice cook and I'm happy that you have prepared a recipe from her blog :-)

புலவன் புலிகேசி said...

முயற்சி செஞ்சி பாப்போம்...

ஹுஸைனம்மா said...

இதேதான், இப்படியே ஃபில்லிங்க்ஸ் எல்லாம் வச்சு, சீஸையும் போட்டுட்டு, அதுக்கு மேல இன்னொரு பிரட்டை வச்சு பட்டர் தடவி டோஸ்ட் பண்ணி கொடுத்தா, பிள்ளைங்களுக்கு ஸ்கூல்ல சாப்பிட வசதியா இருக்கும்.

வீட்டில பிட்ஸா சாப்பிடணும்போல இருந்துதுன்னா இது இன்ஸ்டண்ட் மெத்தட். நன்றி மேனகா.

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்குங்க. கலக்குங்க. எங்க வயிற்றில் அமிலம் சுரக்கின்றது. நமக்கு இட்லி தோசையை விட்டா எதுவும் கிடைக்காது. நன்றி.

Thenammai Lakshmanan said...

superb Ma Menaka Bread Pizza
c Jaleela's and add cabage also its very tasty ma

Shama Nagarajan said...

delicious pizza

சாருஸ்ரீராஜ் said...

very nice menega

Menaga Sathia said...

ஆமாம் ஈஸியாக செய்துவிடலாம்.நன்றி ஸாதிகா அக்கா!!

செய்துபாருங்கள்.நன்றி பாயிஷா!!

Menaga Sathia said...

நன்றி தேவி

நன்றி நிதுபாலா!!

Menaga Sathia said...

முயற்சித்து பாருங்கள்.நன்றி புலவரே!!


நன்றி ஹூசைனம்மா!!

Menaga Sathia said...

//நல்லா இருக்குங்க. கலக்குங்க. எங்க வயிற்றில் அமிலம் சுரக்கின்றது. //ஹி...ஹி..
நான் அடுத்தமுறை செய்யும்போது பார்சல் அனுப்புகிறேன்.ஏன் சகோ இதை நீங்கள் செய்து பார்க்கலாமே.நன்றி சுதா அண்ணா!!

Menaga Sathia said...

//superb Ma Menaka Bread Pizza
c Jaleela's and add cabage also its very tasty ma//ஆமாம் அக்கா.அப்போழுது என்னிடம் கோஸ் இல்லை.அதனால்தான் சேர்க்கவில்லை.நன்றி தேனக்கா!!

நன்றி ஷாமா!!

நன்றி சாரு அக்கா!!

suvaiyaana suvai said...

I do same like this!!

Perspectivemedley said...

I would like to share an award with you:).. please accept it from my blog:)

Menaga Sathia said...

நன்றி சுஸ்ரீ!!


உங்கள் அன்பான விருதுக்கு மிக்க நன்றி தேவி!!

Nathanjagk said...

ஹைய்யா.. நல்ல அருமையான ​பேபி ஃபுட்டா இருக்கும் போல.

//அவரவர் அவனுக்கு ஏற்ப டைம் மாறலாம்.//
நல்ல தத்துவமா இருக்கே!! இருந்தும் ப்ரட்டை அவன்ல வைக்க பயமாத்தான் இருக்கு.

பீட்ஸாவுக்கு ஸ்டப்பிங் செய்றது எப்படின்னு சொல்லுங்க.

Kanchana Radhakrishnan said...

அருமை

Menaga Sathia said...

//ஹைய்யா.. நல்ல அருமையான ​பேபி ஃபுட்டா இருக்கும் போல.//ஆமாங்க குழந்தைகளுக்கு பிடித்தமானதுதான்.

////அவரவர் அவனுக்கு ஏற்ப டைம் மாறலாம்.//
நல்ல தத்துவமா இருக்கே!! இருந்தும் ப்ரட்டை அவன்ல வைக்க பயமாத்தான் இருக்கு.//
ஒன்னும் ஆகாது.பயப்படாம வைக்கலாம்.அதுக்குதான் ஓரத்தை கட் செய்கிறோமே..

//பீட்ஸாவுக்கு ஸ்டப்பிங் செய்றது எப்படின்னு சொல்லுங்க.//ப்ரெட் பிஸ்ஸாவுக்கு வைப்பது போலதான்.பிஸ்ஸா மாவின்மேல் தக்காளி சாஸ் தடவி சிக்கன்,அல்லது மீன்,உங்களுக்கு பிடித்த காய்கறிகள் வைத்து ஸ்டப்பிங் செய்யலாம்.நன்றி சகோ!!

Menaga Sathia said...

நன்றி காஞ்சனா!!

Priya Suresh said...

Pizza looks soo cheesy...saapita solluthu udane..

01 09 10