Sunday 14 February 2010 | By: Menaga Sathia

பைனாப்பிள் கேசரி

தே.பொருட்கள்:

பைனாப்பிள் துண்டுகள் - 1/4 கப்
ரவை - 1 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
பைனாப்பிள் எசன்ஸ் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள்கலர் - 1 சிட்டிகை
தண்ணீர் - 1 1/2 கப்
நெய் - 4 டேபிள்ஸ்பூன்
சன்பிளவர் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரி,திராட்சை - தேவைக்கு
 
செய்முறை :

*கடாயில் நெய்விட்டு முந்திரி,திராட்சையை வறுத்து தனியாக வைக்கவும்.

*அதே கடாயில் மீதமிருக்கும் நெய்+எண்ணெய் விட்டு ரவையை வறுக்கவும்.

*வேறொரு பாத்திரத்தில் தண்ணியை கொதிக்கவைக்கவும்.அதனுடன் கலர் சேர்த்துக் கொள்ளவும்.

*ரவை நன்கு வெந்து பொன்னிறமாக வரும் போது கலர் கலந்து வைத்துள்ள வெந்நீரை ஊற்றி கட்டி விழாமல் கிளறவும்.

*பின் சர்க்கரை சேர்க்கவும்.அது இளகியதும் பைனாப்பிள் துண்டுகள் சேர்க்கவும்.

*அனைத்தும் ஒரு சேரநன்கு கிளறி சுருண்டிவரும்போது ஏலக்காய்த்தூள்+முந்திரி திராட்சை+எசன்ஸ் சேர்க்கவும்.

*சுவையான கேசரி அசத்தலான சுவையில் இருக்கும்.
 
பி.கு:

*பைனாப்பிள் எசன்ஸ் இல்லையெனில் பைனாப்பிள் ப்ரெஷ் ஜூஸ் 1 டேபிள்ஸ்பூன் சேர்க்கலாம்.
*இதனுடன் ரெட் ஆப்பிள் துண்டுகள் + கருப்பு திராட்சை சேர்த்தால் பழகேசரி தயார்.

29 பேர் ருசி பார்த்தவர்கள்:

நட்புடன் ஜமால் said...

very interesting - let me try ...

Unknown said...

ஐஸ் கீரீம் தான் செய்து இருக்கேன்.. கேசரியா செய்து பார்க்கலாம். ஆனால் இப்ப என்னால் சாப்பிடமுடியாது..இன்னும் சில மாதங்கள் கழித்து செய்து பார்கிறேன்..

geetha said...

மேனு!
நல்லவேளையாய் இன்னைக்கு மதிய சாப்பாடு முடிஞ்சுதான் வந்தேன்.
உங்க பைனாப்பிள் கேசரி கண்டிப்பாய் செய்து பார்க்கிறேன்.
எப்பவும் ஒரேமாதிரி கேசரி கிளறி போரடிக்குது.
1 டம்ளர் ரவைக்கு 11/2 டம்ளர் சர்க்கரை போதுமா?
நான் 1 3/4 அல்லது 2 டம்ளர் போடுவேன்.
பைனாப்பிள் சேர்த்தால் இனிப்புசுவை கூடுமா??

Raghu said...

போட்டோவே சூப்ப‌ருங்க‌:)

பொன் மாலை பொழுது said...

நான் முன்னமே ஒரு முறை எழுதியதுண்டு. உங்கள் ப்ளாக் பக்கம் வந்தாலே எனக்கு Cleanex papaer box பக்கத்தில் இருக்கவேண்டும்.எழுதுவது மட்டுமல்லாமல் இப்படி போட்டோ வேறு போட்டு கலக்குவது ஞாயமா ??

Asiya Omar said...

பைனாப்பிள் கேசரி சூப்பர்.புதுசு புதுசாக செய்து அசத்துறீங்க.

நாஸியா said...

ஆஹா வாய் ஊருதே.. என்னுடைய ம்மாவும் பைனாப்பிள் வைத்து ஜாம், கேசரி எல்லாம் நல்லா செய்வாங்க..
ஆனா இப்பதைக்கு பைனாப்பிளுக்கு எனக்கு தடா ;)

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நல்லா இருக்கு உங்கள் கேசரி செய்து பார்கிறேன் ,

ஸாதிகா said...

பைனாப்பிள் சேர்த்து கேசரி செய்தால் உண்மையில் கேசரி மிக அருமையாக இருக்கும்.கேசரி விரும்பாதவர்கள் கூட இன்னும் ஒரு கப் எடுத்துக்கொள்வார்கள்.படம்கொள்ளை அழகு மேனகா!

Menaga Sathia said...

செய்து பாருங்கள்.ரொம்ப ருசியா இருக்கும்.நன்றி சகோ!!


முடியும் போது செய்து சாப்பிட்டு பாருங்கள்.இதில் ஐஸ்க்ரீம் செய்யலாமா?நன்றி சிநேகிதி!!

Menaga Sathia said...

சாப்பிட்டு வந்து இந்த பதிவை பார்த்தீங்களா..செய்து பாருங்கள் கீதா.1 டம்ளர் ரவைக்கு 1 1/2 டம்ளர் ரவை சரியாக இருக்கும்.சொல்லபோனால் நான் எப்பவும் 1 கப் ரவைக்கு = 1 கப் சர்க்கரைதான் போடுவேன்.அதுவே ரொம்ப இனிப்பா இருக்கும் எங்களுக்கு..இந்த கேசரிக்காக கொஞ்சம் கூட போட்டேன்.நீங்கள் போடும் அளவுக்கே போட்டு செய்து பாருங்கள்.ஆமாம் பைனாப்பிள் சேர்ப்பதால் இனிப்பு கொஞ்சம் கூட இருக்கும்.இதில் இன்னும் அதிகமா நெய்யும்,எண்ணெயும் சேர்த்தால் கல்யாண கேசரிப்போல் இருக்கும்.நன்றி கீதா!!

Menaga Sathia said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ரகு!!


போட்டோ போட்டால் செய்வதற்க்கு இன்னும் ஆர்வம் வரும்.நன்றி சகோ!!

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!!


பைனாப்பிள் சாப்பிடும் நேரம் வரும் போது செய்து சாப்பிடுங்கள்.நன்றி நாஸியா!!

Menaga Sathia said...

செய்து பாருங்கள்.நன்றி சாரு அக்கா!!

//கேசரி விரும்பாதவர்கள் கூட இன்னும் ஒரு கப் எடுத்துக்கொள்வார்கள்//நீங்கள் சொல்வது மிக சரி..நன்றி ஸாதிகா அக்கா!!

Menaga Sathia said...

உங்கள் பதிவை வந்து படிக்கிறேன்.நன்றி அண்ணாத்தே!!

malarvizhi said...

சூப்பர் மேனகா .படமே சாப்பிட தூண்டுகிறது. நல்ல பதிவு.

Jaleela Kamal said...

பைனாப்பிள் கேசரி வாசம் இங்கு வரை அடிக்குது. ம்ம்

Menaga Sathia said...

நன்றி மலர்விழி!!

வாசம் அங்குவரை வந்ததா?நன்றி ஜலிலாக்கா!!

Nithu Bala said...

Hey, I love this..neraya pudusa seireengha..have to try this..very tempting..

Thenammai Lakshmanan said...

Superb Menaka
looks Delicious
taste buds ellam alert aagiruchu
so anupi vaima courier la...

Priya Suresh said...

Yumm!! pineapple kesari pakkura pothey pasikuthu..

Menaga Sathia said...

செய்து பாருங்கள்.நன்றி நிதுபாலா!!

உங்களுக்கு இல்லாததா அக்கா?வீட்டுக்கே வாங்க செய்து தருகிறேன்.நன்றி தேனக்கா!!

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

Pavithra Srihari said...

looks very yummy !! adhoda fruit kesari try pannittu .i will post it soon in my blog .Pictureaa kalakkudhu ... adpsiyae saapidalam ..

Menaga Sathia said...

உங்கள் குறிப்பையும் செய்து போடுங்கள்.பழ கேசரி இதைவிட சூப்பராயிருக்கும்.நன்றி பவித்ரா!!

suvaiyaana suvai said...

Super Menaga i'll try one time

Menaga Sathia said...

செய்து பாருங்கள்,நன்றி சுஸ்ரீ!!

ரோஸ்விக் said...

அக்கா... எனக்கு இது ரொம்ப பிடிக்கும்... ஞாபகப் படுத்தீட்டிங்க.... இந்தவாரம் செஞ்சு ஒரு புடி புடிச்சிர வேண்டியது தான்.

:-)))

Menaga Sathia said...

அப்புறமென்ன செய்து சாப்பிட்டு விட்டு சொல்லுங்கள்.எப்படி இருந்ததுன்னு.நன்றி ரோஸ்விக்[இன்னுமும் உங்க புனைப்பெயரை படிக்கும்போதெல்லாம் சிரிப்பு வருது]

01 09 10