Thursday 4 February 2010 | By: Menaga Sathia

தேங்காய் பச்சடி


இந்த பச்சடியை வாய்ப்புண்,வயிற்றுப்புண் உள்ளவர்கள் சாப்பிட்டால் மிக நல்லது.விரைவில் குணமாகும்.அவர்கள் மட்டும் பச்சைமிளகாயை தவிர்க்கவும்.இந்த பச்சடியை நண்பரின் வீட்டில் சாப்பிட்டேன்.அவர்களிடன் செய்முறையை கேட்டு தெரிந்து கொண்டேன்.

தே.பொருட்கள்:

தயிர் - 1 கப்
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
உப்பு + எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்

செய்முறை :

*தேங்காய்த்துறுவலை நீர் விடாமல் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும்.

*கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+ப.மிளகாயினை போட்டு பொன்னிறமாக வதக்கி ஆறவிடவும்.

*ஒரு பாத்திரத்தில் தயிர்+உப்பு+அரைத்த தேங்காய்த் துறுவல்+வதக்கிய வெங்காயம் அனைத்தையும் ஒன்றாக கலந்து பரிமாறவும்.

பி.கு:
காரகுழம்பிற்கு இந்த பச்சடி பெஸ்ட் காம்பினேஷன்.

31 பேர் ருசி பார்த்தவர்கள்:

ராமலக்ஷ்மி said...

நல்ல குறிப்பு. எங்கள் ஊர்ப்பக்கத்தில் (புளி) வத்தக் குழம்புக்கும் இதை காம்பினேஷனாக வைப்பார்கள். ஒருசில வாழைப்பழத் துண்டுகளும் சேர்ப்பார்கள் சமயத்தில்:)!

டவுசர் பாண்டி said...

சொல்லும் போதே சோக்கா கீதே !! ஒரு நாளைக்கி நாமலே இத செஞ்சி பாத்துட வேண்டியத் தாம்பா !!

Unknown said...

தேங்காய் பச்சடி செய்ததில்லை செய்து பார்க்கனும் மேனகா

kavisiva said...

நானும் வந்துட்டேன் மேனகா :-) நிறைய நல்ல குறிப்புகள் கொடுத்திருக்கீங்க. ஒவ்வொன்னா பார்த்துக்கிட்டு இருக்கேன். ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்

Thenammai Lakshmanan said...

This one is new to me MENAKA
seithu parkiren ma

ஸாதிகா said...

அட தேங்காயில் பச்சடி..!செய்து பார்த்துவிடுவோம்.

suvaiyaana suvai said...

looks good!!

Anonymous said...

very new to me but sounds yummy.will try and let u know menaka.

ஹேமா said...

ம்...நல்லாயிருக்கும்.
செய்து பாக்கிறேன்.

Trendsetters said...

thanks for posting an unique and healthy dish

Priya Suresh said...

Thengai pachadi looks tempting..will try soon..

Priya dharshini said...

thenga paachadi super ponga...

சாருஸ்ரீராஜ் said...

கேள்வி படாத புது வகை பச்சடி செய்து பார்க்க வேண்டியது தான்.

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்குங்க. கூட வெள்ளரிக்காயும் சேர்த்தால் குளுமை. நன்றி.

Menaga Sathia said...

நன்றி அண்ணாமலையான்!!

இதுல வாழைப்பழமும் சேர்ப்பாங்களா?நன்றி ராமலஷ்மியக்கா!!

Menaga Sathia said...

அண்ணாத்தே அத இப்பவே நீங்களும் ஷோக்கா செஞ்சிபாக்கலாம்.நன்றி அண்ணாத்தே!!


செய்து பாருங்க ரொமப் அருமையாயிருக்கும்.நன்றி பாயிஷா!!

Menaga Sathia said...

வாங்க கவி.வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி கவி!!

செய்துபார்த்து சொல்லுங்கள்.நன்றி தேனக்கா!!

Menaga Sathia said...

செய்து பாருங்கள்.ரொம்ப ஈஸி.நன்றி ஸாதிகா அக்கா!!

நன்றி சுஸ்ரீ!!

Menaga Sathia said...

செய்து பாருங்கள்.நன்றி அம்மு!!


ரொமப் நல்லாயிருக்கும்.நன்றி ஹேமா வருகைக்கும்,கருத்துக்கும்..

Menaga Sathia said...

நன்றி Trendsetters!!


நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி சாரு அக்கா!!

Menaga Sathia said...

வெள்ளரிக்காயும் சேர்க்கலாம் ஆனால் பச்சடியின் சுவை மாறிடும்.நன்றி சுதா அண்ணா!!

Perspectivemedley said...

Thengkkai yil Pachadi!.. rombha pudhusa iruku.. and athoda useful information !!.. rombhavum nalla recipe!.. thank you:)

Nithu Bala said...

I too make this pacchadi without onion..will try your version..the picture looks too good..Thank you Dear for the lovely comments on my blog..

athira said...

மேனகா.. உங்கள் பெயர் புரியாததால் (சசிகா), புளொக்கை கண்டுபிடிக்க கஸ்டப்பட்டுவிட்டேன்.

வீடாக இருக்குமென வந்தேன், தொடர்மாடியே கட்டி வைத்திருக்கிறீங்கள். நன்றாக இருக்கு. மெதுவா படித்து பயன் பெறுகிறேன்....

தேங்காய்பச்சடி அருமை.

Menaga Sathia said...

நன்றி தேவி!!

வெங்காயம் சேர்த்து செய்து பாருங்கள்.நன்றாகயிருக்கும்.நன்றி நிதுபாலா!!

Menaga Sathia said...

வாங்க அதிரா,ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்களா?ஒவ்வொறாக படித்து பாருங்களி நேரமிருக்கும் போது.நன்றி அதிரா வருகைக்கும்,கருத்துக்கும்...

geetha said...

ஹாய் மேனு!
பச்சடி பார்க்க ரொம்ப நல்லா இருக்கு. தேங்காய் சேர்ப்பதால் இனிப்பு சுவை வந்திடாதா? இல்ல, வெங்காயம் சேர்ப்பதால் இனிப்பு சுவை அடங்கிடுமா?
இது பிரியாணி தக்காளி சாதத்துக்கு நல்லா இருக்குமா???

Menaga Sathia said...

//ஹாய் மேனு!
பச்சடி பார்க்க ரொம்ப நல்லா இருக்கு. தேங்காய் சேர்ப்பதால் இனிப்பு சுவை வந்திடாதா? இல்ல, வெங்காயம் சேர்ப்பதால் இனிப்பு சுவை அடங்கிடுமா?
இது பிரியாணி தக்காளி சாதத்துக்கு நல்லா இருக்குமா???//தேங்காய் சேர்ப்பதால் இனிப்பு சுவை வராது சுவை ரொம்ப நல்லாயிருக்கும்.வெங்காயம் சேர்ப்பதால் சுவையும் மணமும் ரொம்ப நல்லாயிருக்கு.பிரியாணி,தக்காளி சாதத்துக்கு சாப்பிடலாம்.நன்றாகயிருக்கும்.செய்து பாருங்கள்.நன்றி கீதா!!

Jaleela Kamal said...

ரொம்ப நல்ல இருக்கும் இஸ்லாமிய இல்ல திருமணத்தில் பிரியாணிக்கு தொட்டுக்க‌ வைக்கும் தயிர் பச்சடியில் தேங்காய் சேர்ப்பார்கள். பிற்கு அதை போடுகீறேன்.

Menaga Sathia said...

உங்கள் செய்முறையும் போடுங்க ஜலிலாக்கா!!

01 09 10