Tuesday 20 July 2010 | By: Menaga Sathia

வடை கறி/Vada Curry

தே.பொருட்கள்:
கடலைப்பருப்பு - 1 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
தேங்காய்ப்பால் - 1 1/2 கப்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை,புதினா,கொத்தமல்லி -சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:
இஞ்சி - 1 சிறுதுண்டு
பூண்டுப்பல் - 5
பச்சை மிளகாய் - 4
கிராம்பு - 3
பட்டை - 1 சிறுதுண்டு
ஏலக்காய் - 2
தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
 
செய்முறை :
*அரைக்க கொடுத்துள்ளவைகளை மைய அரைக்கவும்.கடலைப்பருப்பை 3/4 மணிநேரம் ஊறவைத்து சோம்பு+உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*கடலைப்பருப்புடன் அரிந்து வைத்துள்ள சிறிது வெங்காயம்+அரைத்த சிறிதளவு மசாலா விழுது சேர்த்து பிசைந்து பகோடாகளாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்+அரைத்த மசாலா விழுது+தக்காளி+மிளகாய்த்தூள்+மஞ்சள்தூள்+புதினா கொத்தமல்லி கறிவேப்பிலை,உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக வதக்கவும்.

*வதங்கியதும் தேங்காய்ப்பாலை ஊற்றி கொதிக்கவிடவும்.கொதித்ததும் பொரித்த பகோடாகளை போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

Sending this recipe to Sidedishes other than dal/subzis Event by Suma & Iftar Moments Hijri 1431 Event Ayeesha.

28 பேர் ருசி பார்த்தவர்கள்:

Shama Nagarajan said...

delicious curry

kavisiva said...

மேனு இதோ பருப்பை ஊறப் போட்டுட்டேன். தோசைக்கு சைட் டிஷ் இதுதான்

எல் கே said...

chennais favourite side dish

சாருஸ்ரீராஜ் said...

mmm looks very nice

தெய்வசுகந்தி said...

நல்ல கறி மேனகா!!!

நட்புடன் ஜமால் said...

இது என்னான்னு புரியாமலே பல வருடம் போயாச்சு

நன்றிங்கோ ...

Lav said...

ennoda super favourite dish idhu...cant forget vakari at any good hotel in chennai :) looks super !!!

Umm Mymoonah said...

wow! Thank you so much for sending this delicious entry for my event, we would love to have this for Iftar.
Looking forward to more delicious entries:-)

Prema said...

wat a delicious curry,luks very rich...yummy.

Life is beautiful !!! said...

Namma urundai kuzhambu mathiri. Vadai kariyum, Idliyum super combonu kelvi pattu iruken sapitathillai. I shuld try once :)

Priya said...

என்னவருக்கு பிடித்தது. ஆனால் இதுவரை செய்ததில்லை உங்களின் குறிப்பை கொண்டு செய்ய போகிறேன். நன்றி மேனகா.

Menaga Sathia said...

நன்றி ஷாமா!!

நன்றி கவி!! இன்னிக்கு வடைகறிதான் சமையலா?? அப்போ உங்க வீட்டுக்குதான் வரப்போறேன்..

நன்றி எல்கே!!

நன்றி சாரு அக்கா!!

Menaga Sathia said...

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி சகோ!! அப்போ இதுவரை நீங்க சாப்பிட்டதில்லையா??

நன்றி லாவண்யா!!

நன்றி ஆயிஷா!!

Menaga Sathia said...

நன்றி பிரேமலதா!!

நன்றி மஞ்சு!! செய்து பாருங்கள்.இட்லி,தோசைக்கு பொருத்தமா இருக்கும்...

நன்றி ப்ரியா!! செய்து கொடுத்து அசத்துங்க..அப்புறம் எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க..

சிநேகிதன் அக்பர் said...

சென்னையில் சாப்பிட்ட வடைகறி ஞாபகத்துக்கு வருது.

Priya Suresh said...

Yennaku romba pidichathu, suda rendu ildyum vada curryum irruntha pothum sorgame vantha madhri than..

அப்பாதுரை said...

அவசியம் செய்து பார்க்கப்போகிறேன்;
வடை கறிக்கு வடை தேவைன்னு நினைச்சிட்டிருந்தேன்...! மொத நாள் வடை தான் மறு நாள் வடைகறின்னு இத்தனை நாளும்...

Krishnaveni said...

this is my fav for idly or dosa, beautiful curry

vanathy said...

very mouth watering recipe.

PS said...

ahh, so yummy. feel like having it with crispy dosas. thanks for this wonderful recipe..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

எனக்கு ரொம்பவும் பிடிச்ச ஐட்டம்.
பகிர்வுக்கு நன்றிங்க.. மேனகா :-)

'பரிவை' சே.குமார் said...

ithu chennai favorite curry illa.
mmm pakka nalla irukku...

Anonymous said...

இது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் thanks for the recipe.

Menaga Sathia said...

நன்றி அக்பர்!!

நன்றி ப்ரியா!! நீங்க சொல்வது மிகசரி..

நன்றி அப்பாதுரை!! செய்து பார்த்து சொல்லுங்கள்..மீதமான வடையிலும் வடைகறி செய்வதுண்டு...

நன்றி கிருஷ்ணவேணி!!

Menaga Sathia said...

நன்றி வானதி!!

நன்றி பிஎஸ்!!

நன்றி ஆனந்தி!! எனக்கும் ரொம்ப பிடிக்கும்..

நன்றி சகோ!!

நன்றி சந்தியா!!

Niloufer Riyaz said...

enakku migavum piditha curry. pakirnthathukku nandri

இமா க்றிஸ் said...

Looks yum Menaga.

Gayathri said...

rombha naal thedinen.super elimaya solli kuduthuteenga..rombha rombha rombha nandri menaka

01 09 10