Wednesday 26 August 2015 | By: Menaga Sathia

ஒணம் சத்யா - 2 | Onam Sadya -2 | Kerala Lunch Recipes | Onam Sadya Recipes

print this page PRINT IT 

இந்த முறை ஒணம் சத்யா மெனுவை போனமுறை செய்ததை விட அதிகமாகவே செய்துள்ளேன்.

ஒணம் சத்யா - 1 மெனுவை இங்கே பார்க்கவும்.

சிப்ஸ் மட்டுமே கடையில் வாங்கினேன்.

நான் செய்திருப்பவை

நேந்திரன் சிப்ஸ் (கடையில் வாங்கியது)
இஞ்சி புளி
இன்ஸ்டண்ட் மாங்காய் ஊறுகாய்
எலுமிச்சை ஊறுகாய்
குறுக்கு காளன்
எரிசேரி
ஒலன்
கூட்டுக் கறி
அவியல்
கோஸ் தோரன்
கேரட் பீன்ஸ் தோரன்
பீட்ரூட் பச்சடி
இஞ்சி கிச்சடி
பருப்புக் கறி
கேரளா சாம்பார்
தக்காளி ரசம்
சேமியா பாயசம்
பருப்பு ப்ரதமன்
மோர்
பப்படம்

இதில் இஞ்சி புளி மற்றும் மாங்காய் ஊறுகாய் மட்டும் முதல் நாள் இரவே செய்துவிட்டேன்.

மறுநாள் மற்றவைகளை செய்து முடிக்க 3 மணிநேரம் ஆனது.

இதனை எப்படி சுலபமாக செய்தேன் என்பதை மட்டும் சொல்கிறேன்.

என்ன மெனுக்களை செய்ய போகிறோம் என முடிவு செய்து அதற்கேற்ப காய்களை வாங்கிக் கொள்ளவும்.

எரிசேரி மற்றும் ஓலன் செய்ய காரமனியை முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.

இந்த முறை எரிசேரியை பூசணிக்காயில் செய்தேன்.அதே போல் கூட்டுக்கறிக்கு கறுப்புக் கடலைக்கு பதில் கடலைப்பருப்பில் செய்தேன்.

கூட்டுக்கறி,அவியல்,காளன் செய்ய சேனைக்கிழங்கை நறுக்கி முதலில் மஞ்சள்தூள் சேர்த்து அரைக்வேக்காடு வேகவைத்து நீரை வடிக்கவும்.இப்படி செய்வது சேனைக்கிழங்கின் காரலை போக்கும்.பின் அதனை மூன்று பாகமாக பிரித்து பயன்படுத்தவும்.

பாசிப்பருப்பை பருப்பு கறி மற்றும் ப்ரதமன் செய்ய வறுக்கவும்.

குக்கரில் சாம்பாருக்கு துவரம்பருப்பினை அடியில் வைத்தும் மேலே சிறிய கிண்ணத்தில் பாசிப்பருப்பினை வேக வைத்து எடுக்கவும்.

பின் வேறொரு குக்கரில் காராமணியை அடியிலும் அதன் மேல் சிறிய கிண்ணத்தில் கடலைப்பருப்பையும் வேகவைத்தேன்.

காய்களை அவியலுக்கு நீளமாகவும் மற்றும் அனைத்து சைட் டிஷ் செய்யவும் நறுக்கி வைத்தேன்.


கேரட்,முருங்கை,வெள்ளை பூசணி சேர்த்து சாம்பார் செய்தேன்.

ஒலன் மற்றும் பிரதமன் தேங்காயை முதல் மற்றும் 2 ஆம் பால் எடுக்கவும்.

இஞ்சி கிச்சடி செய்ய பாகற்காய்க்கு பதில் இஞ்சியை பொன்முறுவலாக வறுத்து செய்ய வேண்டும்.

எல்லா குறிப்புகளுக்கும் தேங்காய் முக்கியம் என்பதால் தேங்காய்+சீரகம்+பச்சை மிளகாயை அவியல்,காளன்,எரிசேரி,கூட்டு கறி ,பருப்புக்கறி செய்ய நிறைய அரைத்து வைத்தேன்.

பொரியல் செய்ய கேரட்+பீன்ஸ்+கோஸ் நறுக்கிய பின் பீட்ரூட்டினை பச்சடி செய்ய கொஞ்சம் துருவிக் கொண்டேன்.

இவைகள் அனைத்தும் செய்து முடித்த பின் கடைசியாக சாதம்,சேமியா பாயசம்,ரசம் வைத்தேன்.

இப்படி திட்டமிட்டு செய்து முடிக்கவே 3 மணிநேரம் ஆனது.

அப்புறம் என்ன,கடைசியாக இலையில் பரிமாறவேண்டியதுதான்.

அனைவருக்கும் இனிய ஒணம் நல்வாழ்த்துக்கள்!!

4 பேர் ருசி பார்த்தவர்கள்:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

பார்த்தவுடன் பசி எடுத்து விட்டது.பார்வையால் சுவைத்து விட்டேன்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Jaleela Kamal said...

தாளி சாப்பாடு அருமை

mullaimadavan said...

Beautiful thali... Onam wishes to you and your family Menaga!

Unknown said...

Superb ji

01 09 10