Thursday 27 August 2015 | By: Menaga Sathia

பாலடை பாயாசம் / Palada Payasam | Onam Sadya Recipes | Payasam recipes

print this page PRINT IT 
ஒணம் சத்யாவின் போது செய்யபடும் முக்கியமான பாயசம்.

பாயசம் என்பது பால்+சர்க்கரை சேர்த்து செய்வது.ப்ரதமன் என்பது தேங்காய்பால்+வெல்லம் சேர்த்து செய்வது.

அடை ப்ரதமன் மற்றும் பாலடை ப்ரதமன் இவ்விரண்டுமே ஒணசத்யாவின் மெனுவில் இடம்பெறும்.

அரிசிஅடை ரெடிமேடாக இருந்தால் கொதிக்கும் நீரில் 10 நிமிடம் ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் 2 -3 முறை அலசி நீரை வடிக்கவும்.

நான் பயன்படுத்தியிருப்பது ப்ரெஷ் அடை என்பதால் நேரடியாக அப்படியே பயன்படுத்தலாம்.

தே.பொருட்கள்

அரிசி அடை- 1/2 கப்
பால்- 2 1/2 கப்
சர்க்கரை -1/3 கப்
உப்பு- 1 சிட்டிகை
நெய் -2 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள்- 1/4 டீஸ்பூன்
முந்திரி+திராட்சை- தேவைக்கு

செய்முறை

*கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி+திராட்சை வறுத்தெடுக்கவும்.

*பின் மீதமுள்ள நெய் விட்டு சிறிது சர்க்கரை சேர்த்து,கரையும் வரை கலக்கவும்.

*அரிசி அடையை சேர்த்து லேசாக பொன்முறுவலாக வறுக்கவும்.

*பாலினை பாத்திரத்தில் ஊற்றி பாதியளவு சுண்டும் வரை காய்ச்சியபின் வறுத்த அடையினை சேர்த்து வேகவிடவும்.

*அடை வெந்ததும் உப்பு+சர்க்கரை சேர்த்து கரைந்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

*பின் ஏலக்காய்த்துள்+முந்திரி திராட்சை சேர்த்து பரிமாறவும்.

*இந்த பாயாசம் மிகுந்த சுவையாக இருக்கும்.

3 பேர் ருசி பார்த்தவர்கள்:

mullaimadavan said...

Arumai, arumai! Payasam super!

மனோ சாமிநாதன் said...

குறிப்பு மிகவும் அருமை! எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு! துபாயிலும் பாலடை ரெடிமேடாகத்தான் கிடைக்கும். அதை ஃப்ரெஷாக செய்தால் இன்னும் சுவை அதுகம்!

'பரிவை' சே.குமார் said...

படங்களுடன் பாயசம் அருமை...

01 09 10