Wednesday 2 November 2016 | By: Menaga Sathia

வாணியம்பாடி சிக்கன் பிரியாணி/Vaniyambadi Chicken Biryani


இந்த பிரியாணியில் தக்காளி சேர்க்காமல் வெங்காயத்தினை அரைத்து நன்றாக வதக்கி சேர்க்க வேண்டும்.

தே.பொருட்கள்

பாஸ்மதி -3 கப்
வெங்காயம் -2 பெரியது
கீறிய பச்சை மிளகாய்- 4
புதினா கொத்தமல்லி தலா -1 கைப்பிடி
நெய் -2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் -தேவைக்கு

சிக்கனில் ஊறவைக்க‌
சிக்கன்- 1/2 கிலோ
தயிர் -1 கப்
இஞ்சி பூண்டு விழுது- 1 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் -5 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்

தாளிக்க‌
பட்டை -சிறுதுண்டு
ஏலக்காய் -3
கிராம்பு -4
பிரியாணி இலை -2

செய்முறை
*வெங்காயத்தினை நன்றாக மைய அரைக்கவும்.

*சிக்கனில் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களிளை சேர்த்து குறைந்தது 1 மணிநேரமாவது ஊறவைக்கவும்.


*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காய விழுதினை சேர்த்து குறைந்த தீயில் நன்கு பச்சை வாசனை போகுமளவு வதக்கவும்.

*பின் கீறிய பச்சை மிளகாய்+புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
*ஊறவைத்த சிக்கனை சேர்த்து சிக்கன் முக்கால் பதம் வேகும் வரை வதக்கவும்.

*4 கப் நீர்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*நீர் கொதிக்கும் போது அரிசியை சேர்க்கவும்.

*தண்ணீர் நன்கு வற்றி வரும் போது தோசைகல்லை காயவைத்து அதன் பாத்திரத்தை வைத்து குறைந்த தீயில் 10 நிமிடங்கள் தம்மில் போடவும்.


*பின் நெய் சேர்த்து மெதுவாக கிளறி பரிமாறவும்.

பி.கு

*வெங்காய விழுதினை நன்கு வதக்கவும் இல்லையெனில் பச்சை வாசனை அடிக்கும்.

*சிக்கன் நீர் விடும் மேலும் வெங்காய விழுது சேர்த்திருப்பதால் நான் 1/2 கப் நீர் குறைத்து சேர்த்துள்ளேன்.


1 பேர் ருசி பார்த்தவர்கள்:

'பரிவை' சே.குமார் said...

வாவ்....
ரொம்பச் சுலபமா இருக்கே...
இந்த வெள்ளி இதுதான் செய்யணும்...

01 09 10