Thursday 7 November 2013 | By: Menaga Sathia

கொள்ளு சாதம் /Kollu(Horsegram) Rice

ஆஹா என்ன ருசி -இல் பார்த்து செய்தது..... டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்றது!!

தே.பொருட்கள்
உதிராக வடித்த சாதம் - 1 கப்
வேகவைத்த கொள்ளு - 1/2 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 சிறியது
கீறிய பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவைக்கு

தாளிக்க

வெந்தயம் +மிளகு  - தலா 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/2  டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

*பின் வேகவைத்த கொள்ளு+உப்பு+கொள்ளு வேகவைத்த நீர் 1/4 கப் குறைவாக சேர்த்து கொதிக்கவிடவும்.

*சாதத்தை சேர்த்து கிளறி இறக்கவும்.

பி.கு
சின்ன வெங்காயத்திற்கு பதில் நான் பெரிய வெங்காயம் சேர்த்து செய்திருக்கேன்.

10 பேர் ருசி பார்த்தவர்கள்:

ராஜி said...

உடல் வெயிட்டை குறைக்கலாம்ன்னு இருக்கும் நேரத்துல நல்ல ஒரு ரெசிபி சொல்லி இருக்கீங்க. தேங்க்ஸ்

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புள்ள மேனகா,
வணக்கம்.


ஆஹா ....

கொள்ளுச்சாதம் ....
கொன்னுட்டீங்கோ!

’கொள்ளு’ குதிரைகளுக்கு மட்டுமோ என நான் நினைத்திருந்தேன்.

சாப்பிட்டால் நமக்கும் நல்ல HORSE POWER கிடைக்குமோ ;)

அன்புடன்
கோபு

Priya Anandakumar said...

one healthy sadam, Iam thinking of dieting, ur recipe will come in handy...

Asiya Omar said...

கொளளு சாதம் சூப்பர்.கொள்ளு டேஸ்ட் எனக்கு பிடிக்கும் மேனகா.

Priya Suresh said...

Menaga, naanum intha sadham panna yosichite irruken but innum pannave illa, ippo pannida vendiyathu than.Supera irruku.

nandoos kitchen said...

kollu sadam looks super delicious and healthy

சாந்தி மாரியப்பன் said...

அசத்தல் சாதம் மேனகா.

Sangeetha M said...

interesting recipe, sounds quick and healthy..will try it sometime..thanks for sharing!

Priya said...

Asathureenga menaga .Kandipa anaivarum rusika vendiya unavu.Unga thevaiyana porula vengayam thirutham seiyanum.

Vimitha Durai said...

Very healthy rice dear

01 09 10