Showing posts with label International Recipes. Show all posts
Showing posts with label International Recipes. Show all posts
Monday, 25 November 2013 | By: Menaga Sathia

நாண்+பிஸ்ஸா=நாணிஸ்ஸா /Indian Style Naanizza (Naan+ Pizza)

Recipe Source: USmasala

தே.பொருட்கள்

நாண்-  1
பனீர் துண்டுகள்  - 10
பிஸ்ஸா சாஸ் - தேவைக்கு
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
துருவிய சீஸ் -  தேவைக்கு
சில்லி ப்ளேக்ஸ் -  1 டீஸ்பூன்
கெட்டித்தயிர் -  1 டேபிள்ஸ்பூன்
மிளகய்த்தூள் - 1 டீஸ்பூன்
கரம்மசாலா -  1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
நெய்  - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*ஒரு பவுலில் தயிர்+மிளகாய்த்தூள்+உப்பு+இஞ்சி பூண்டு விழுது +கரம் மசாலா இவற்றை கலந்து பனீர் துண்டுகளை சேர்த்து 1/2 மணிநேரம் ஊறவைத்து தவாவில் எண்ணெய் விட்டு இருபுறமும் வறுத்தெடுக்கவும்.

*அவனை 220 முற்சூடு செய்து நாணை பேக்கிங் டிரேயில் வைத்து 5 வைத்து எடுக்கவும்.

*பின் அதன்மீது பிஸ்ஸா சாஸ் தடவி வறுத்த பனீர் துண்டுகள்+வெங்காயம்+கொத்தமல்லித்தழை+சில்லி ப்ளேக்ஸ்+சீஸ் இவற்றை தூவி விடவும்.

*அதன்மீது நெய் பரவலாக ஊற்றி மீண்டும் 5 - 6 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.

பி.கு
*நான் சீஸ் நாண் பயன்படுத்தியிருப்பதால் மேலே தூவும் போது சீஸை குறைவாக பயன்படுத்திருக்கேன்..
01 09 10