Thursday 5 November 2015 | By: Menaga Sathia

7 கப் கேக்/பர்பி | 7 Cup Cake | 7 Cup Burfi | Easy Diwali Sweet Recipe

print this page PRINT IT
இந்த பர்பி செய்வதற்கு மிக சுலபம்.இதன் மொத்த கப் அளவுகளையும் கூட்டினால் 7 வரும்,அதனால் தான் இதற்கு இந்த பெயர்.

இதில் நாம் அளவுகளை நமக்கு தகுந்தாற்போல் போட்டுக்கொள்ளலாம்,ஆனால் மொத்தம் 7 கப் வருமளவு இருக்க வேண்டும்.

நெய் அளவினை குறைக்கவேண்டாம்,குறைத்தால் பர்பியின் Texture  மாறுபடும்.

சமைக்கும் நேரம் ‍‍: 20 நிமிடங்கள்
தயாரிக்கும் நேரம் : 5 நிமிடங்கள்
பரிமாறும் அளவு : 3 நபர்கள்

தே.பொருட்கள்

கடலைமாவு- 1 கப்
துருவிய கேரட்- 1 கப்
பால் -1 கப்
சர்க்கரை -1 கப்
தேங்காய்த்துறுவல்- 1 கப்
நெய் -2 கப்

செய்முறை

*கடாயில் நெய் சிறிது ஊற்றி கேரட் துறுவலை 5 நிமிடங்கள் வதக்கி ஆறவைக்கவும்.

*அதனுடன் கொடுத்துள்ள அனைத்து பொருட்களும் ஒன்றாக கட்டியில்லாமல் கலக்கவும்.

*இப்போழுது கடாயினை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கைவிடாமல் கிளறவும்.


*பர்பி வெந்து ஒரங்களில் ஒட்டாமல் வரும் போது நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தவும்.


*இளஞ்சூடாக இருக்கும் போது துண்டுகள் போட்டு பரிமாறவும்.

*இந்த பர்பி நொடியில் காலியாகிவிடும்.

பி.கு

*இதில் பால் சேர்த்து இருப்பதால் 2 நாட்களுக்குள் பயபடுத்தவும்.

*இதில் கேரட் துறுவலுக்கு பதில் அதே அளவு தேங்காய்துறுவலை அதிகபடுத்தி செய்யலாம்.

*நெய்யின் அளவினை குறைக்க வேண்டாம்.

*நான் கொடுத்துள்ள அளவில் பாதியளவே போட்டு செய்துள்ளேன்,

3 பேர் ருசி பார்த்தவர்கள்:

'பரிவை' சே.குமார் said...

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்டா...
வீட்டில் கூப்பிட்டுச் சொல்லி தீபாவளிக்கு செய்யச் சொல்லணும்...

மனோ சாமிநாதன் said...

பர்பி மிக அருமை!

Unknown said...

Thought of trying this sweet for long time... Its so tempting now.. Love your step by step instructions..

Sowmia - Sowmia's Galley

01 09 10