Monday 1 September 2014 | By: Menaga Sathia

ஐயங்கார் புளியோதரை / IYENGAR PULIYODARAI | LUNCH BOX RECIPES

 முகநூலில் திரு.ரத்னவேல் ஐயா அவர்கள் அவருடைய பக்கத்தில் இந்த குறிப்பினை பகிர்ந்திருந்தார்.அதனை பார்த்து உடனே செய்தது.அப்படியே பெருமாள் கோவில் பிரசாதம் சாப்பிட்டது போல் இருந்தது.நன்றி ஐயா!!

புளியோதரைக்கு புளிக்காய்ச்சலை முதல்நாள் இரவே செய்துவைக்கவேண்டும்.மறுநாள் காலையில் பாத்திரத்தை திறக்கும் போது கெம்மென்று வாசனை வந்தால் புளிக்காய்ச்சல் சரியாக செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

ஒரிஜினல் ரெசிபியில் முந்திரி சேர்க்க  சொல்லியிருந்தாங்க,நான் அதற்கு பதில் வேர்க்கடலை சேர்த்து செய்தேன்.மேலும் இதில் காரத்திற்கு மிளகினை ப்ரெஷ்ஷாக பொடித்து நல்லெண்ணெயில் குழைத்து சாதத்தில் கலக்கவேண்டும்.

இப்போழுது செய்முறையை பார்க்கலாம்.

தே.பொருட்கள்

உதிராக வடித்த சாதம் - 3 கப்
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் சாதத்தில் கலக்க
பொடித்த மிளகு - 2 டேபிள்ஸ்பூன்

புளிகாய்ச்சல் செய்ய

கெட்டியான புளிகரைசல் - 1 கப்
நல்லெண்ணெய் - 1/4 கப்
உளுத்தம்பருப்பு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் -சிறிது
வேர்க்கடலை - 1 கைப்பிடி
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு+கடலைப்பருப்பு+வெந்தயம்+சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
 *பின் வேர்க்கடலை+மஞ்சள்தூள் சேர்க்கவும்.
 *கெடியான புளிகரைசல்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
 *பச்சை வாசனை அடங்கி குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.
 *மறுநாள் காலையில் சாதத்தை வடித்து ஆறவைத்து நல்லெண்ணெய் சேர்த்து கலக்கவும்.

*சிறிது புளிகாய்ச்சலை சேர்க்கவும்.
 *பொடித்த மிளகினை சிறிது எண்ணெயில் கலந்து சேர்க்கவும்.நான் அப்படியே மிளகினை சேர்த்து விட்டேன்.
 *அனைத்தையும் ஒன்றாக நன்கு கிளறவும்.
*சுவையான புளிகாய்ச்சல் ரெடி!!

7 பேர் ருசி பார்த்தவர்கள்:

great-secret-of-life said...

wow! looks so perfect.. I love Iyengar puli rice

Rathnavel Natarajan said...

மகிழ்ச்சி. இந்த நன்றிக்கு உரியவர் எங்கள் அருமை நண்பர் திரு Pitchumani Sudhangan சார். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திருமதி Menaga Sathia

Priya Suresh said...

My mouth is watering Menaga.

Jaleela Kamal said...

பாரக்கவே மிக அருமையாக இருக்கு மேனகா.

புளியாதுரைக்கு அந்த மசால் வடை சூப்பர் காம்பினேஷன்.

அமுதா கிருஷ்ணா said...

கடலையை தோல் ஊதி எடுத்துட்டு இரண்டாக உடைத்து மூக்கை எடுத்துட்டு கடலையை எண்ணெயில் தனியே வறுத்து சாதம் கிளறும் போது கடைசியில் அம்மா போடுவாங்க. முதல்லே போட்ட கிரிஸ்ப் இல்லாம,புளியில் ஊறி ஊறி புளிப்பு ஏறிடும்னு சொல்வாங்க.

Hema said...

This is one of my favorites, love it with some thengai thogayal..

Unknown said...

My all time favorite..nice...

01 09 10