Monday 18 May 2015 | By: Menaga Sathia

கொத்தவரங்காய் பிட்லை / Cluster Beans (Kothavarangai ) Pitlai

print this page PRINT IT 
முகநூலில் அறிமுகமான பானுமதி மாமியின் குறிப்பின்படி செய்தது.ஏற்கனவே 30நாள் வெஜ் லஞ்ச் மெனு 22ல் இந்த சமையல் போஸ்ட் செய்துள்ளேன்.

கொத்தவரங்காய் தவிர பாகற்காய்,கத்திரிக்காய்,வாழைப்பூவில் பிட்லை செய்யலாம்.

தே.பொருட்கள்

கறுப்பு/வெள்ளை கடலை- 2 டேபிள்ஸ்பூன்
கொத்தவரங்காய் -1/4 கிலோ
மஞ்சள்தூள்- 1/2 டீஸ்பூன்
துவரம்பருப்பு -1/4 கப்
புளி கரைசல் -1/2 கப்
உப்பு+எண்ணெய்= தேவைக்கு
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை- சிறிதளவு

எண்ணெயில் வறுத்து பொடிக்க‌
காய்ந்த மிளகாய்- 7
தனியா -1 டேபிள்ஸ்பூன்
கடலைபருப்பு -2 டீஸ்பூன்
வெந்தயம் -1/2 டீஸ்பூன்
தேங்காய்துறுவல் -2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க‌
கடுகு+உளுத்தம்பருப்பு தலா -1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 1

செய்முறை

*துவரம்பருப்பினை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும்.

*கடலையை முதல்நாள் இரவே ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவைக்கவும்.

*பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் வறுத்து பொடிக்கவும் அல்லது நைசாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய்  விட்டு கொத்தவரங்காய் பொடியாக நறுக்கி வதக்கவும்.பின் மஞ்சள்தூள்+உப்பு சேர்த்து வேகவைக்கவும்.



*காய் வெந்ததும் புளிகரைசல்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் வேகவைத்த கடலை+துவரம்பருப்பு+அரைத்த மசாலா சேர்த்து கொதிக்கவிடவும்.



*கெட்டியாக இருந்தால் தேவைக்கு நீர் சேர்க்கவும்.

*நன்கு கொதித்த பிறகு கொத்தமல்லி தழை சேர்த்து தாளித்து சேர்க்கவும்.

*சுவையான பிட்லை வறுவலுடன் சாப்பிட செம சுவை!!

2 பேர் ருசி பார்த்தவர்கள்:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கொத்தவரங்காய் தவிர பாகற்காய்,கத்திரிக்காய்,வாழைப்பூவில் பிட்லை செய்யலாம்.//

மீதியெல்லாம் ஏற்கனவே கேள்விப்பட்டுள்ளேன். சாப்பிட்டும் உள்ளேன். கொத்தவரங்காயிலும் பிட்லை செய்யலாம் என்பதை இப்போது தங்கள் பதிவின் மூலம் மட்டுமே தெரிந்துகொண்டேன்.

சுவையான பகிர்வுக்கு நன்றிகள்.

Unknown said...

பிட்லை மிக அருமை.

01 09 10