Tuesday, 4 April 2017 | By: Menaga Sathia

சுண்டைக்காய் வத்தல் /Sun Dried Turkey Berry(Sundakkai) Vathal | Summer Spl

 சுண்டைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது,ஏராளமான பயன்கள் கொண்டது.இணையத்திலிருந்து எடுத்த சில பயன்களை இங்கே குறிப்பிடுகிறேன்.

இருமலுக்கு - 2 டீஸ்பூன் சுண்டைக்காய் வத்தலை நெய்யில் வறுத்து பொடித்து,தினமும் 2 வேளை 1/2 டீஸ்பூன் சாப்பிடலாம்..
தலைவலிக்கு - சுண்டைக்காய் வத்தலை பொடித்து தினமும் இதனை  முகர்ந்தால் சரியாகும்.
வயிற்றுவலிக்கு - 5-6 சுண்டைக்காய் வத்தலை நெய்யில் பொரித்து சாப்பிட்டால் சரியாகும்.
இரத்தசோகைக்கு -2 டீஸ்பூன் சுண்டைக்காய் வத்தலை நெய்யில் வறுத்து பொடித்து,தினமும் 3 வேளை 1/4 டீஸ்பூன் சாப்பிடலாம்.

தே.பொருட்கள்
ப்ச்சை சுண்டைக்காய் -3 கப்
தயிர் - 2கப்
உப்பு -தேவைக்கு

செய்முறை
*பச்சை சுண்டைக்காயின் காம்பினை நீக்கி கழுவவும்.
*இதனை இடிப்பானில் லேசாக நசிக்கியோ அல்லது கத்தியில் கீறியோ வைக்கவும்.
*தயிரை கட்டியில்லாமல் நன்கு கடைந்து உப்பு சேர்த்து 1/2 கப் நீர் ஊற்றி சுண்டைக்காயை 1 நாள் ஊறவிடவும்.
*மறுநாள் வெயிலில் சுண்டைக்காயினை மட்டும் தட்டில் வைத்து காயவைக்கவும்.
*மோரினை வெயிலில் வைக்ககூடாது,மாலையில் திரும்பவும் மோரில் ஊறவைக்கவும்.

*இதேபோல் மோர் வற்றும் வரை செய்து பின் வெயிலி நன்கு காயவைத்து எடுத்து வைக்கவும்.

*வத்தகுழம்பு செய்தால் நன்றாக இருக்கும்.குறிப்பினை இங்கே பார்க்கவும்.

*இதே போல் மணத்தக்காளி காயில் செய்யலாம்,அப்படி செய்யும் போது நேரடியாகவே தயிரில் ஊறவைத்து காயவைக்கவும்.நசுக்கி போட தேவையில்லை.

*தயிரில் ஊறவைத்து போடுவது வாசனையாக இருக்கும்.

4 பேர் ருசி பார்த்தவர்கள்:

ஸ்ரீராம். said...

எங்கள் வீட்டிலேயே சுண்டைச் செடி இருந்தது. சாம்பார், வத்தல் என்று விதம் விதமாக சமைத்துச் சாப்பிட்டிருக்கிறோம். அது சரி, மதுரைச் சுண்டைக்காய் தெரியுமோ?

Menaga Sathia said...

@ராம் மதுரை சுண்டைக்காய் அப்படி என்ன ஸ்பெஷல்,தெரியலயே...

ஸ்ரீராம். said...

கொஞ்சம் கெட்டியாக இருக்கும். கடினமாக இருக்கும். சாம்பார் போலச் செய்ய முடியாது. ஊறுகாய் போல ஊற வைத்து வற்றல் போடமுடியும். சர்க்கரை நோய்களுக்கும் சிறந்தது.

Menaga Sathia said...

@ராம்
தகவலுக்கு மிக்க நன்றிங்க...இப்போ தான் கேள்விபடுகிறேன்

01 09 10