Sunday 22 November 2009 | By: Menaga Sathia

ஆப்பம் / Appam

செய்துட்டேன் செய்துட்டேன் நானும் ஆப்பம் செய்து சாப்பிட்டேன்.கிட்டத்தக்க 3 வருஷமாச்சு ஆப்பம் சாப்பிட்டு.இந்த வருஷம் எங்கண்ணி ஆப்பசட்டியும்,பணியாரகல்லும் வாங்கி வந்து கொடுத்தாங்க.அந்த ஆப்பசட்டிக்கு இப்பதான் நேரம் வந்துச்சு.யான் பெற்ற இன்பம் நீங்களும் பெறுக...

சுதாகர் அண்ணா அவர் பதிவில் மென்மையான ஆப்பம் பதிவிட்டிருந்தார்.அதிலிருந்து ஆப்பத்துல மேல ஒரு கண்ணு.ஆவ்ருடைய ஆப்ப பதிவால் தான் எனக்கு ஆப்பம் செய்ய தோனுச்சு.அதனால் அவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!!.அந்த பதிவைப் பார்த்து சில மாற்றங்களுடன் நான் செய்த ஆப்பம்...

தே.பொருட்கள்:

பச்சரிசி - 1 1/2 கப்
புழுங்கலரிசி - 1 1/2 கப்
உளுந்து - 1 டேபிள்ஸ்பூன்
ஜவ்வரிசி - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துறுவல் - 1/4 கப்
இளநீர் - 1
உப்பு - தேவைக்கு


செய்முறை :

*அரிசி வகைகள்+உளுந்து+ஜவ்வரிசி அனைத்தையும் 4 மணிநேரம் ஊறவைத்து இளநீர்+தேங்காய்த்துறுவல் சேர்த்து நன்கு மைய அரைக்கவும்.

*அரைத்த மாவிலிருந்து 2 கரண்டி மாவெடுத்து 1 கப் நீர்விட்டு கரைத்து ராகி கூழ் போல காய்ச்சவும்.

*ஆறியதும் அரைத்த மாவில் உப்பு சேர்த்து கலந்து 8 மணிநேரம் புளிக்கவிடவும்.மாவு தோசைமாவு பதத்திற்க்கு இருக்கனும்.

*நான் ஸ்டிக் ஆப்பக் கடாயில் ஒரு குழிக்கரண்டி மாவு ஊற்றி ஆப்பசட்டியால் ஒரு சுற்று சுற்றி மூடி வேகவிடவும்.

*வெந்ததும் எடுக்கவும்.திருப்பி போடக்கூடாது.தேங்காய்ப் பாலுடன் பறிமாறவும்.

பி.கு

மாவை கூழ் போல் காய்ச்சி ஊற்றுவதால் ரொம்ப சாப்டா இருந்தது.சீக்கிரம் புளித்துவிட்டது.

38 பேர் ருசி பார்த்தவர்கள்:

ஜெட்லி... said...

சரவணா பவன் ஆப்பம் அருமையாக இருக்கும்...
எங்க வீட்ல சில டைம் ஆப்பதுக்கும் தோசைக்கும் வித்தியாசம்
தெரியாது!!!

my kitchen said...

ஆப்பம் அருமையாக இருக்கு

Menaga Sathia said...

சரவணபவன் ஆப்பம் ஊருக்கு போனால் தான் வாங்கி சாப்பிடனும்.

//எங்க வீட்ல சில டைம் ஆப்பதுக்கும் தோசைக்கும் வித்தியாசம்
தெரியாது!!!// ஹி ஹி

நன்றி ஜெட்லி!!

Menaga Sathia said...

நன்றி செல்வி!!

பாவா ஷரீப் said...

ஆப்பம் சாப்ட்டு ஏப்பம் விட்டுட்டீங்க

Admin said...

ஆப்பம் என்று சொன்னால் விருப்பம்தான். அடிகடி சாப்பிடுவதுண்டு..

Priya Suresh said...

Naan appam saapitu naal achu..ippadiya pasiya undu pannura madhri appam pannuvinga...pasikuthu pa..

suvaiyaana suvai said...

Looks awesome!!!

ஸாதிகா said...

ஆப்பத்துக்கு ஜவ்வரிசி சேர்ப்பீர்களா மேனகா?நாங்கள் வெறும் பச்சரிசியுடன்,சாதம்,வெந்தயம் சேர்த்து அரைத்து செய்வோம்.அடுத்த முறை உங்கள் முறையில் டிரை பண்ணுகிறேன்.இட்லி,இடியாப்பத்துக்கு அடுத்து லைட்டான,எண்ணெய் இல்லாத டிபன் வகை இது.எனக்கு மிகவும் பிடித்த டிபனும் கூட.

பித்தனின் வாக்கு said...

சகோதரி இப்ப இந்த படத்தில் இருக்கும் ஆப்பத்தைப் பார்த்ததும் எங்களுக்குத் தான் ஆப்ப பைத்தியம் பிடிக்கும் போல. நல்ல வென்மையாகவும், சாப்ட்டாகவும் இருக்கு.
இந்த அரைத்து விட்டதைல் ஆப்பத்தின் சாப்ட்னஸ் பத்தி எதுவும் சொல்லவில்லை என்றாலும், படத்தில் பார்த்தால் அருமையாக இருக்கின்றது.

ஒரு நாலு ஆப்பம் பார்சல்ல்ல்ல்ல்ல்ல் பிளிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நன்றி.

நாஸியா said...

ஐ இது எந்த ஊரு ஆப்பம்?
சூப்பெரா இருக்கே
ஆப்பம் செய்றதுல நிறைய முறைகள் இருக்குன்னு நினைக்குறேன்.. எங்க வீட்டுல பச்சரிசியும் கொஞ்சம் உளுந்தும் ஊர வெச்சு, அரைக்கும்போது கொஞ்சம் சோறோ இல்லை எங்க ஊரு பக்கம் (நெல்லை) பன்/பிரெட் அ அரைக்கும்போது போடுவாங்க... கரைக்கும்போது தோசை மாவுக்கும் தண்ணியா இருக்கனும், ஆப்பத்தை ஊத்த முன்ன தேங்கா பால் கரைக்கனும்..

இதே கொழும்பு/சிலோன் ஸ்டைல் ஆப்பம் வேற மாதிரியாம்.. வெறும் பச்சரிசிய ஒரு நாள் முழுக்க ஊர வெச்சு, அரைக்கும்போது ஒரு முட்டையும் மேரி பிஸ்கட்டும் போட்டு அரைக்கனுமாம்..இதுவும் தோசை மாவுக்கும் தண்ணியா இருக்கனும்.. பின்ன ஆப்பத்த ஊத்த முன்ன தேங்கா பாலில் கொஞ்சம் சீனியும் சோடா மாவும் கலந்து ஊத்தனுமாம்..

கேரளாவில கள்ளு சேர்ப்பாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன்..

GEETHA ACHAL said...

ஆப்பம் அருமை...இந்த வாரம் தான் அம்மாவின் சமையலில் சாப்பிட வேண்டும்...

நன்றி மேனகா..ஆப்பத்துடன் தேங்காய் பால் அருமையே அருமை...

S.A. நவாஸுதீன் said...

ஆப்பம்னாலே நேத்துவச்ச மீன்கொழம்புதான் (அதுவும் வத்த வத்த சூடு காட்டனும்)அதுக்கு சரியான காம்பினேசன்.

நல்லா பசியைக் கெளப்பி விட்டுட்டீங்க சகோதரி.

my kitchen said...

Menaga please collect ur award from my blog

Menaga Sathia said...

//ஆப்பம் சாப்ட்டு ஏப்பம் விட்டுட்டீங்க// ஆமாம் பின்னே என்ன செய்றது,சாப்பிட்டு 3 வருஷமாச்சே..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கருவாச்சி!!

Menaga Sathia said...

எல்லோருக்குமே இந்த ஆப்பம் பிடித்தமானது ஒன்று.நன்றி சந்ரு!!

Menaga Sathia said...

நீங்களும் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சா?அப்ப உடனே எங்க வீட்டுக்கு வாங்க.செய்து தரேன்.நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

நன்றி சுஸ்ரீ!!

Menaga Sathia said...

//நாங்கள் வெறும் பச்சரிசியுடன்,சாதம்,வெந்தயம் சேர்த்து அரைத்து செய்வோம்.// எங்கம்மாவும் இப்படிதான் செய்வாங்க.அதனுடன் கல் ஊற்றுவாங்க.ஜவ்வரிசி போட்டு செய்தால் ஆப்பம் சுளையாக வரும்னு என் தோழி சொன்ன ஐடியா.நீங்களும் செய்து பாருங்கள்.ஆமாம் நீங்கள் சொல்வதுபோல் அதிகம் எண்ணெயில்லாத டிபன்.நன்றி ஸாதிகா அக்கா!!

Menaga Sathia said...

நீங்கள் சொன்ன மாதிரி கருத்து எழுதிவிட்டேன்.ரொம்ப்ப்ப்ப்ப நல்லாயிருந்தது.உடனே இப்பவே பார்சல் 4 ஆப்பம் என்ன 10 ஆப்பம் அனுப்புறேன்.நன்றி அண்ணா!!

Menaga Sathia said...

//எங்க வீட்டுல பச்சரிசியும் கொஞ்சம் உளுந்தும் ஊர வெச்சு, அரைக்கும்போது கொஞ்சம் சோறோ இல்லை எங்க ஊரு பக்கம் (நெல்லை) பன்/பிரெட் அ அரைக்கும்போது போடுவாங்க... கரைக்கும்போது தோசை மாவுக்கும் தண்ணியா இருக்கனும், ஆப்பத்தை ஊத்த முன்ன தேங்கா பால் கரைக்கனும்..//ஆப்பத்தில் இத்தனை வகை இருக்கா..அடுத்தமுறை ப்ரெட் சேர்த்து பார்க்கிறேன்.

ஆப்பம் ஊற்றுவதற்க்கு முன் தே.பால் சேர்ப்பிங்களா?அப்போ நல்லா பஞ்சு போல வெண்மையா இருக்கும்னு நினைக்கிறேன்.

//ஐ இது எந்த ஊரு ஆப்பம்?//பாண்டிச்சேரி ஆப்பம் நாஸியா.

//இதே கொழும்பு/சிலோன் ஸ்டைல் ஆப்பம் வேற மாதிரியாம்.. வெறும் பச்சரிசிய ஒரு நாள் முழுக்க ஊர வெச்சு, அரைக்கும்போது ஒரு முட்டையும் மேரி பிஸ்கட்டும் போட்டு அரைக்கனுமாம்..இதுவும் தோசை மாவுக்கும் தண்ணியா இருக்கனும்.. பின்ன ஆப்பத்த ஊத்த முன்ன தேங்கா பாலில் கொஞ்சம் சீனியும் சோடா மாவும் கலந்து ஊத்தனுமாம்..

கேரளாவில கள்ளு சேர்ப்பாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன்..//ஆப்பத்துல நிறைய வகை சொல்லிருக்கிங்க.ஒன்னு ஒன்னா செய்துடுவோம்.
எங்கம்மாவும் இதுல கள் தான் சேர்ப்பாங்க.

கூடுதல் டிப்ஸ்+கருத்துக்கும் நன்றி நாஸியா!!

Menaga Sathia said...

அப்போ என்னை மாதிரி எல்லோரும் ஆப்பத்துக்கு ஏங்கிட்டிருக்கிங்கன்னு சொல்லுங்க.ம்ம் அம்மாவின் பக்குவமே தனிதான்.செய்து சாப்பிடுங்கப்பா.நன்றி கீதா!!

Menaga Sathia said...

//ஆப்பம்னாலே நேத்துவச்ச மீன்கொழம்புதான் (அதுவும் வத்த வத்த சூடு காட்டனும்)அதுக்கு சரியான காம்பினேசன்.

நல்லா பசியைக் கெளப்பி விட்டுட்டீங்க சகோதரி.//

ஆப்பத்துக்கு மீன்குழம்பு தொட்டுப்பிங்களா?புதுசா இருக்கு.சிலை மட்டன் குழம்பு,கடலை குருமாலாம் செய்து சாப்பிடுவாங்க இதனுடன்.

பசியை கிளப்பிட்டேனா வாங்க எங்க வீட்டுக்கு..செய்து தரேன்.

நன்றி ப்ரதர்!!

Jaleela Kamal said...

மேனகா ஆப்பம் சூப்பர்,

நானும் ஒன்றுக்கு ஒன்று தான் ஜவ்வரிசி , தேங்காய் , வெந்தயம் சேர்த்து தான் அரைப்பேன். எப்போதுமே எனக்கு ஆப்பம் சூப்பராக வரும்,
மாதம் ஒரு முறை தேங்காய் பாலுடன் ஒரு வெட்டுதான்,

ஆனால் காய்ச்சி இது வரை செய்ததில்லை சுதாகர் சார் சொன்ன மாதிரி காய்ச்சி செய்து பார்க்கனும்.
மேனகா ஆப்பம் சூப்பர்,

நானும் ஒன்றுக்கு ஒன்று தான் ஜவ்வரிசி , தேங்காய் , வெந்தயம் சேர்த்து தான் அரைப்பேன். எப்போதுமே எனக்கு ஆப்பம் சூப்பராக வரும்,
மாதம் ஒரு முறை தேங்காய் பாலுடன் ஒரு வெட்டுதான்,

ஆனால் காய்ச்சி இது வரை செய்ததில்லை சுதாகர் சார் சொன்ன மாதிரி காய்ச்சி செய்து பார்க்கனும்.


இதிலியே முட்டை ஆப்பம், பராசாப்பாம் என்று நாங்க நிறைய விதத்தில் செய்வோம்

சாருஸ்ரீராஜ் said...

மேனகா என் பெரிய பொண்ணுக்கு பிடித்த டிபன் அவள் அடிக்கடி ஆப்பம் தான் கேப்பா , நான் ஜவ்வரிசி சேர்க்க மாட்டேன் கொஞ்சம் சாதம் சேர்ப்பேன் அடுத்த முறை ஜவ்வரிசி சேர்த்து செய்கிறேன்.

Menaga Sathia said...

தங்கள் விருதுக்கு மிக்க மகிழ்ச்சி+நன்றி செல்வி!!

Menaga Sathia said...

மாவை காய்ச்சி செய்து பாருங்க,ரொம்ப நல்லா சாப்டா இருந்தது.நன்றி ஜலிலாக்கா!!

Menaga Sathia said...

ஜவ்வரிசி போட்டு செய்து பாருங்க,ஆப்பம் சுளை சுளையா இருக்கும்.அப்புறம் மகள் தினமும் ஆப்பம் தான் கேட்பாங்க.நன்றி சாரு அக்கா!!

தமிழ் நாடன் said...

அடடா நாக்குல எச்சில் ஊற வச்சிட்டீங்களே! நான் விடுதியில படிக்கிற காலத்தில இருந்து வெளிநாட்டுல வேலை செய்யுற இன்னிக்கு வரைக்கும் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த மறுநாளே அம்மா ஆப்பம் போட்டுடுவாங்க. ஏன்னா எனக்கு ஆப்பம்னா உசிரு. இங்க வந்து இருக்கும்போதும் அம்மா அடிக்கடி போட்டுடுவாங்க. ரொம்ப நாளாச்சு ஆப்ப சாப்பிட்டு. இந்த முறை நானே முயற்ச்சி செய்யறேன். சகோதரிதான் சொல்லிட்டீங்க இல்ல!

Menaga Sathia said...

அப்புறமென்ன செய்து எல்லோரையும் அசத்துங்க.நன்றி சகோ!!

இந்த ஆப்ப பதிவை போட்டபின் தெரியுது ஆப்பத்துக்கு ஒரு பெரிய கூட்டமே இருக்குன்னு.எப்படியோ எல்லோருடைய ஆசையும் கிளப்பி விட்டுட்டேன்...

S.sampath kumar said...

what a excellent development of yours blog, i am very happy, just now i receive your blog rank in alexa, keep it up sister.

S.sampath kumar said...

just see your ranking in alexa, click the following link....

http://www.alexa.com/siteinfo/sashiga.blogspot.com

Menaga Sathia said...

அலெக்சா பற்றிய விபரம் தந்தமைக்கு மிக்க நன்றி சம்பத்.

நீண்ட நாளுக்கு பின் உங்க பின்னூட்டம் பார்த்ததில் சந்தோஷம்.உங்கள் பாராட்டுக்கும்,கருத்துக்கும் நன்றி சம்பத்!!

Unknown said...

அடடா மேனகா இப்படியா ஆப்பம் ஆசையை உண்டாக்குரது.எப்படியோ நீங்களாவது 3 வருஷம் கழித்து ஆப்பம் சாப்பிட்டீங்களே அதுவே சந்தோஷம்.வாழ்க உங்க அண்ணி...ம்ம் நானும் ஆப்ப சட்டி,பணியாரக்கல்,முறுக்கு குழாய் இப்படி பல பொருட்களை லிஸ்ட்டா போட்டு வெச்சிருக்கேன்.ஊருக்கு போனா வாங்கி வரனும்.முதல் முறை வரும்போது இதெல்லாம் எதற்கு நமக்கு செய்யவும் தெரியாது என்ரு விட்டு விட்டேன்..இப்படி உங்க ப்லாகெல்லாம் பார்ப்பேன் மேனகா ஆப்பம்லாம் செய்து காமிப்பாங்கன்னு தெரிஞ்சிருந்தா அப்போவே வாங்கியிருப்பேன்......எப்படியோங்க ஆப்பம் சூப்பரூ......

Menaga Sathia said...

//அடடா மேனகா இப்படியா ஆப்பம் ஆசையை உண்டாக்குரது.எப்படியோ நீங்களாவது 3 வருஷம் கழித்து ஆப்பம் சாப்பிட்டீங்களே அதுவே சந்தோஷம்.//ஏம்ப்பா நீங்க சாப்பிட்டு எத்தனை வருஷமாகுது?

//வாழ்க உங்க அண்ணி// எங்கண்ணி பார்த்தாங்கன்னா சந்தோஷப்படுவாங்க.

//நானும் ஆப்ப சட்டி,பணியாரக்கல்,முறுக்கு குழாய் இப்படி பல பொருட்களை லிஸ்ட்டா போட்டு வெச்சிருக்கேன்.ஊருக்கு போனா வாங்கி வரனும்.//என்னென்ன தேவையோ அதெல்லாம் லிஸ்ட் எழுதிக்குங்க.அப்புறம் மறந்துடுவோம்.

//முதல் முறை வரும்போது இதெல்லாம் எதற்கு நமக்கு செய்யவும் தெரியாது என்ரு விட்டு விட்டேன்//நானும் இப்படிதான் எதுவும் வாங்காமல் வந்தேன்.ஒவ்வெஒரு தடவையும் அம்மா அல்லது அக்கா,அண்ணன் எடுத்து வந்து கொடுப்பாங்க.

தங்கள் கருத்துக்கி மிக்க நன்றி கினோ!!

Thenammai Lakshmanan said...

வெறும் பச்சரிசி புழுங்கலரிசி உளுந்து வெந்தயம் சேர்த்து முதல்நாள் அரைத்து மறுநாள் காலை ஆப்பம் செய்வோம் மேனகா

நல்லா வரும்

நீங்கசொல்லியபடியும் செய்து பார்க்கிறேன்

Menaga Sathia said...

உங்கள் முறைப்படிதான் அம்மா செய்வாங்க.இது பித்தன் அவர்களின் குறிப்பை பார்த்து செய்தேன்.நன்றி தேனம்மை அக்கா!!

Menaga Sathia said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி உன்னி!!

01 09 10