Thursday 28 January 2010 | By: Menaga Sathia

ஈஸி அடை



வடை மாவு மீதமாகிவிட்டது.அதை திரும்பவும் வடை சுட்டு சாப்பிட பிடிக்காமல் அடை சுட்டு சாப்பிட்டேன்.செய்வதற்க்கும் ரொம்ப ஈஸி.நன்றாகவும் இருந்தது.

தே.பொருட்கள்:
மீதமான வடை மாவு - 1 கப்
ஒட்ஸ் - 1/2 கப்
பொடியாக அரிந்த பசலைக்கீரை - 1/4 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை :

*ஒட்ஸை சிறிது நேரம் ஊறவைத்து அரைக்கவும்.

*வடைமாவு+அரைத்த ஒட்ஸ்+கீரை அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.தேவைக்கேற்ப நீர்+உப்பு சேர்க்கவும்.

*மாவினை அடைகளாக சுட்டெடுக்கவும்.

பி.கு:
வடைமாவில் உப்பு இருப்பதால் உப்பு பார்த்து போடவும்.அதிலயே வெங்காயம்+மிளகாய் சேர்த்திருப்பதால் இதெல்லாம் போடத்தேவையில்லை.

37 பேர் ருசி பார்த்தவர்கள்:

ராமலக்ஷ்மி said...

நல்ல குறிப்பு. நன்றி!

Shama Nagarajan said...

yummy adai...

Sanjai Gandhi said...

//வடை சுட்டு சாப்பிட பிடிக்காமல் அடை சுட்டு சாப்பிட்டேன்//

அடடா.. அக்கா ரைமிங்கா எழுதறாங்களே :))

Menaga Sathia said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அக்கா!!

நன்றி ஷாமா!!

Menaga Sathia said...

//அடடா.. அக்கா ரைமிங்கா எழுதறாங்களே //ஹி..ஹீ...நீங்க சொன்னபிறகுதான் நானே பார்த்தேன்.நன்றி சகோ...

ஸாதிகா said...

வடை மாவு என்றால்..?உளுந்துவடையா?பருப்புவடையா?விபரம் சொன்னால் நன்றாக இருக்க்கும் மேனகா.படத்தைப்பார்த்ததும் செய்து விட வேண்டும் போல் உள்ளது மேனகா

Unknown said...

எதையும் வீண்ணாக்காமல் ஏதாவது புதுவிதமாக உணவு செய்து சாப்பிடுவது நலமே.. நல்ல குறிப்பு மேனகா

Menaga Sathia said...

நான் காய்ந்த வெள்ளை பட்டாணியை ஊறவைத்து வடை சுட்டேன்.அந்த மாவில் தான் இந்த அடை செய்தேன்.செய்து பார்த்து சொல்லுங்கள்.நன்றி ஸாதிகா அக்கா!!

Menaga Sathia said...

நன்றி பாயிசா!!

இமா க்றிஸ் said...

நல்ல யோசனை சொல்றீங்க.

சாருஸ்ரீராஜ் said...

yummy adai very nice

malarvizhi said...

aahaaa arputham.puthiya muyarchi. pakirvukku nanri.

சிங்கக்குட்டி said...

கலக்குங்க மேனகா :-)

suvaiyaana suvai said...

adi looks yummy!!

Menaga Sathia said...

நன்றி இமா!!

நன்றி சாரு அக்கா!!

Menaga Sathia said...

நன்றி மலர்விழி!!

நன்றி சிங்கக்குட்டி!!

Padma said...

Adai looks yummy and also healthy.

M.S.R. கோபிநாத் said...

வடை மாவை அடை மாவாக்கிய பெருமை உங்களையே சேரும் மேனகா. அடைக்கு அவியல் தான் நல்ல காம்பினேஷன்னு சொல்லுவாங்க. நீங்க என்னெல்லாம் சைட்டிஷ் பண்ணுவீங்க?

வேலன். said...

இம்....இதுவும் ந்ல்லாதான் இருக்கு..

வாழ்க வளமுடன்,
வேலன்.

Unknown said...

Nice way to use up the leftover vadai maavu!Healthy one.

S.A. நவாஸுதீன் said...

அடடா மிஞ்சிப்போச்சேன்னு கவலைப்படாம அட போட வைக்கும் அருமையான் ஈசி அடை. ஹ்ம்ம். நல்லா இருக்கு.

R.Gopi said...

//வடை மாவு மீதமாகிவிட்டது.அதை திரும்பவும் வடை சுட்டு சாப்பிட பிடிக்காமல் அடை சுட்டு சாப்பிட்டேன்.செய்வதற்க்கும் ரொம்ப ஈஸி.நன்றாகவும் இருந்தது.//

ஓஹோ... இதுதான் “வடை ஈஸி அடை” ஆன கதையா?? பேஷ்... பேஷ்... சொல்றதுல கூட என்னா ரைமிங்பா.... சூப்பர்....

சரி... இதுக்கு என்ன சைட் டிஷ் நல்லா இருக்கும்... அதையும் சொல்லுங்க....

SUFFIX said...

ம்ம்ம் நல்ல ஐடியா, நல்லாவும் இருக்கு.

Menaga Sathia said...

நன்றி பத்மா!!

நன்றி சகோ!!//அடைக்கு அவியல் தான் நல்ல காம்பினேஷன்னு சொல்லுவாங்க. நீங்க என்னெல்லாம் சைட்டிஷ் பண்ணுவீங்க?//நீங்க சொல்வது போல் அவியல்தான் பெஸ்ட்.நான் எப்போழுதும் தே.சட்னி தான் செய்வேன்.

Menaga Sathia said...

நன்றி வேலன் சார்!!

நன்றி திவ்யா!!

Menaga Sathia said...

நன்றி சகோ!!


நன்றி கோபி!!//ஓஹோ... இதுதான் “வடை ஈஸி அடை” ஆன கதையா?? பேஷ்... பேஷ்... சொல்றதுல கூட என்னா ரைமிங்பா.... சூப்பர்....//ஹா...ஹா
//இதுக்கு என்ன சைட் டிஷ் நல்லா இருக்கும்... அதையும் சொல்லுங்க....//அவியல் மற்றும் தே.சட்னி ரொம்ப நல்லாயிருக்கும் கோபி.

Menaga Sathia said...

நன்றி சகோ!!

அன்புடன் மலிக்கா said...

வடையாலும் அடையானாலும் நான் நல்லா சாப்பிடுவேன்பா. சூப்பர் குறிப்பு மேனகா..

Padhu Sankar said...

Nice recipe with left over vadai batter.Very interesting!
http://padhuskitchen.blogspot.com/

Jaleela Kamal said...

உளுந்து அடை கீரையும் ம்ம் ரொம்ப சத்தான ரெசிபி

Jaleela Kamal said...

ஓ பட்டாணி அடையா

Menaga Sathia said...

//வடையாலும் அடையானாலும் நான் நல்லா சாப்பிடுவேன்பா.//என்னை மாதிரின்னு சொல்லுங்க.நன்றி மலிக்கா.

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி பது!!

Menaga Sathia said...

ஆமாம் அக்கா,பட்டாணி அடை தான்.நன்றி ஜலிலாக்கா!!

geetha said...

மேனு,
அடை உண்மையிலேயே ரொம்ப சூப்பராய் இருக்கு போட்டோவில். ஆனா ஒரு வருத்தம் என்னன்னா எங்க வீட்டில் வடை மாவெல்லாம் மீதமாகறதே இல்லை.
இனி இதற்காகவே அதிகமா அரைக்கனும்போல தோணுது!

Priya Suresh said...

Wow easy adai, ithukagave next time vada maavu athigama araikanam...arumai..

Menaga Sathia said...

//மேனு,
அடை உண்மையிலேயே ரொம்ப சூப்பராய் இருக்கு போட்டோவில். ஆனா ஒரு வருத்தம் என்னன்னா எங்க வீட்டில் வடை மாவெல்லாம் மீதமாகறதே இல்லை.
இனி இதற்காகவே அதிகமா அரைக்கனும்போல தோணுது!// ஹா ஹா அப்போ இதுக்காவே அதிகமா அரைத்து செய்து பாருங்க கீதா.ரொம்ப நல்லாயிருக்கும் இந்த வடை மாவில் செய்த அடை.நன்றி கீதா!!

நன்றி ப்ரியா!!

ஆன்மீக மணம் வீசும் said...

மேனகா எப்படி இருக்கீங்க?
குட்டிப் பொண்ணு எப்படி இருக்கா/

எங்கம்மா சொல்லுவாங்க:
‘கணவன் ஊருக்குப் போயிட்டதால மனைவி சொன்னாளாம். அடை எதுக்குன்னு வடையா தட்டி தின்னுட்டேன், நெய்யை உருக்குவானேன்னு விழுதா போட்டுண்டுட்டேன்னு.’

உங்க இந்த அடையைப் பார்த்ததும் அம்மா சொன்னதுதான் ஞாபகம் வந்தது.

பார்க்க ரொம்ப நல்லாவே இருக்கு உங்க அடை.

அப்புறம் இந்தியாவுக்கு வர எண்ணம் இருக்கா? எப்ப வரப் போறீங்க.

அன்புடன்
ஜெமாமி

01 09 10