Sunday 31 January 2010 | By: Menaga Sathia

ரவை கொழுக்கட்டை


கொழுக்கட்டையை நாம் அரிசிமாவில் தான் செய்வோம்.அதே மாதிரி ரவையில் செய்தால் ரொம்ப நல்லாயிருக்கும்.இந்த குறிப்பு என் அத்தையிடம் (அண்ணியின் அம்மா) கற்றுக்கொண்டது.

தே.பொருட்கள்:
ரவை - 1/2 கப்
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
எள் - 1டேபிள்ஸ்பூன்
பாசிப்பருப்பு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்

செய்முறை :

*சர்க்கரை,ஏலக்காய்த்தூளை தவிர அனைத்தையும் வெறும் கடாயில் வாசனைவறும் வரை வறுக்கவும்.

*பின் அதனுடன் சர்க்கரை+ஏலக்காய்த்தூள் கலந்து வெந்நீர் தெளித்து கொழுக்கட்டைபிடிக்கும் பதத்துக்கு பிசையும்.

*லேசாக நீர் தெளித்து பிசையவும்.தண்ணீர் தெளித்து பிசையும் போது சர்க்கரை இளகி நீர்த்துவிடும்.கவனமாக பிசையவும்.

*பிசைந்தமாவை கொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

31 பேர் ருசி பார்த்தவர்கள்:

அண்ணாமலையான் said...

சுவையான கொழுக்கட்டை

Shama Nagarajan said...

yummy delicious recipe....

ஸாதிகா said...

ரவாவில் கொழுக்கட்டை!!அசத்துகிறீர்கள் மேனகா.

Unknown said...

சுவையான ரவை கொழுக்கட்டை.. செய்துபார்கணும்..

Mahi said...

ரவை கொழுக்கட்டையா? புதுசா இருக்கு மேனகா..செய்து பார்க்கிறேன்.

R.Gopi said...

//கொழுக்கட்டையை நாம் அரிசிமாவில் தான் செய்வோம்.அதே மாதிரி ரவையில் செய்தால் ரொம்ப நல்லாயிருக்கும்.//

நான் கூட அதையே தான் நினைத்தேன்... இது என்ன புது மாதிரியான ரெசிப்பி என்று... மேனகா தருவது என்றுமே புது புது ரெசிப்பி தானே...

//*பிசைந்தமாவை கொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.//

கிடைக்குமா?? ஆவலுடன் காத்திருக்கிறேன்... புது ரெசிப்பி கொழுக்கட்டை கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்லி விட போகிறேன்...

அட்டகாசமான ரெசிப்பிகளுடன் தொடர்ந்து அசத்துங்கள் மேனகா....

S.A. நவாஸுதீன் said...

ஆகா! சூப்பரா இருக்கே.

Thenammai Lakshmanan said...

சுப்பரா இருக்கு கொழுக்கட்டை ..சாப்பிடக் கிடைக்குமா மேனகா..

Jaleela Kamal said...

ரொம்ப அருமையாக இருக்கு, இனிப்பு ரவை கொழுக்கட்டை

பித்தனின் வாக்கு said...

ஆகா சூப்பர். அருமை. கொளுக்கட்டையில் கடலைப் பருப்பு இருப்பது போல இருக்கு.ஆனால் பொருட்களில் போடவில்லை. இதே முறையில் இஞ்சி,மிளகாய் போட்டு காரக் கொளுக்கட்டை பண்ணினாலும் சூப்பராக இருக்கும் என நினைக்கின்றேன்.அந்த தட்டில் உள்ள கொளுக்கட்டை முழுதும் எனக்கு ரிசவ் பண்ணிவிட்டு அனுப்பி விடுங்கள். யாருக்கும் பங்கு கிடையாது. நன்றி.

Thenammai Lakshmanan said...

காராமணி சுண்டல்
வெங்காயத்தாள் வடை
தக்காளிச் சட்னி
ஓட்ஸ் சாண்ட்விச்
கொள்ளு சுண்டல்
ஈஸி அடை எல்லாமே அருமை மேனகா

Menaga Sathia said...

நன்றி அண்ணாமலையான்!!

நன்றி ஷாமா!!

Menaga Sathia said...

நன்றி ஸாதிகா அக்கா!!

செய்து பாருங்கள்.அரிசி கொழுக்கட்டைவிட ரவை கொழுக்கட்டை நல்லாயிருக்கும்.நன்றி பாயிஷா!!

Menaga Sathia said...

செய்து பார்த்து சொல்லுங்கள்.நன்றி மகி!!

Menaga Sathia said...

////கொழுக்கட்டையை நாம் அரிசிமாவில் தான் செய்வோம்.அதே மாதிரி ரவையில் செய்தால் ரொம்ப நல்லாயிருக்கும்.//

நான் கூட அதையே தான் நினைத்தேன்... இது என்ன புது மாதிரியான ரெசிப்பி என்று... மேனகா தருவது என்றுமே புது புது ரெசிப்பி தானே...//நன்றி கோபி!!

//கிடைக்குமா?? ஆவலுடன் காத்திருக்கிறேன்... புது ரெசிப்பி கொழுக்கட்டை கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்லி விட போகிறேன்...//உங்களுக்கு இல்லாததா.எடுத்துக்குங்க கோபி இல்லைன்னா பார்சல் அனுப்புகிறேன்.


//அட்டகாசமான ரெசிப்பிகளுடன் தொடர்ந்து அசத்துங்கள் மேனகா....//தங்களின் அன்பான ஊக்கத்திற்க்கு மிக்க சந்தோஷம்+நன்றி!!

Menaga Sathia said...

நன்றி சகோ!!


//சுப்பரா இருக்கு கொழுக்கட்டை ..சாப்பிடக் கிடைக்குமா மேனகா..//தேனக்கா உங்களுக்கு இல்லாததா.வாங்க செய்து தருகிறேன்.நன்றி அக்கா!!

Menaga Sathia said...

நன்றி ஜலிலாக்கா!!

Menaga Sathia said...

//ஆகா சூப்பர். அருமை. கொளுக்கட்டையில் கடலைப் பருப்பு இருப்பது போல இருக்கு.ஆனால் பொருட்களில் போடவில்லை. //கடலைப்பருப்பு உல்லைங்க அது பாசிபருப்பு.

//இதே முறையில் இஞ்சி,மிளகாய் போட்டு காரக் கொளுக்கட்டை பண்ணினாலும் சூப்பராக இருக்கும் என நினைக்கின்றேன்//நிச்சயம் சூப்பராகதானிருக்கும்.நான் காரம் போட்டு செய்ததில்லை.

//அந்த தட்டில் உள்ள கொளுக்கட்டை முழுதும் எனக்கு ரிசவ் பண்ணிவிட்டு அனுப்பி விடுங்கள். யாருக்கும் பங்கு கிடையாது. நன்றி.//அடக்கடவுளே கோபி,தேனக்கா பதிவுகளுக்கு முன்னாலேயே பதிவு போட்டு ரிசர்வ் செய்திருக்கலாமே.ம்ம் இப்ப என்ன பண்றது.ஒ கே பங்கை 3 பாகமா பிரித்து எல்லோருக்கும் கொடுத்துடுவோம்.சந்தோஷம் தானே சுதா அண்ணா.நன்றி தங்கள் கருத்துக்கு!!

Menaga Sathia said...

//காராமணி சுண்டல்
வெங்காயத்தாள் வடை
தக்காளிச் சட்னி
ஓட்ஸ் சாண்ட்விச்
கொள்ளு சுண்டல்
ஈஸி அடை எல்லாமே அருமை மேனகா// நன்றி அக்கா!!

Vijiskitchencreations said...

சூப்பர் ரெசிப்பி. செய்துட வேண்டியது தான்.

suvaiyaana suvai said...

அசத்துரீங்க‌!!!

M.S.R. கோபிநாத் said...

ரவா கொழுக்கட்டை சூப்பர் மேனகா.

Priya Suresh said...

Rava kozhukattai supera irruku Menaga, different kozhukattai will try out..

பனித்துளி சங்கர் said...

உங்களின் ஒவ்வொரு பதிவும் அற்புதம் . வாழ்த்துக்கள்
அப்படியே எனக்கும் இரண்டு ரவை கொழுக்கட்டை அனுப்பி வைத்துவிடுங்கள் .

என்னுடைய முகவரி http://wwwrasigancom.blogspot.com/

Menaga Sathia said...

நன்றி விஜி!!

நன்றி சுஸ்ரீ!!

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

//உங்களின் ஒவ்வொரு பதிவும் அற்புதம் . வாழ்த்துக்கள்
அப்படியே எனக்கும் இரண்டு ரவை கொழுக்கட்டை அனுப்பி வைத்துவிடுங்கள் .//உங்களின் அன்பான வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி சங்கர்!!

2 என்ன அனைத்து கொழுக்கட்டைகளும் பார்சல் அனுப்புகிறேன்...

Nithu Bala said...

Yummy..new here and nice to see lot of recipes..happy to follow you dear..drop in sometime @ my blog too..

Menaga Sathia said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நிது பாலா!!

மாதேவி said...

ரவை கொழுக்கட்டை நன்றாக இருக்கிறது மேனகா.

Menaga Sathia said...

நன்றி மாதேவி!!

01 09 10