Thursday 13 September 2012 | By: Menaga Sathia

கசகசா பாயசம் /Poppy seeds Payasam

*கசகசா உணவில் சேர்த்துக் கொள்வது மிக நல்லது.இதை பேக்கிங் மற்றும் சாலட் செய்ய பயன்படுத்தபடுகிறது.இதில் இரும்புசத்து,நார்சத்து,பாஸ்பரஸ்,Thiamine,Riboflavin,Vitamin B,Omega -3 இருக்கிறது.

*ஒரு டீஸ்பூன் கசகசாவில் 13கிராம் கலோரி இருக்கிறது. டயட்டில் இருப்பவர்கள் உணவில் முந்திரிக்கு பதில் கசகசா சேர்த்து க்ரேவி செய்யலாம்.

*க்ரேவி கெட்டியாக வருவதற்க்கு 1 டேபிள்ஸ்பூன் அளவு சேர்த்தால் போதும்.இதில் கறுப்பு மற்றும் வெள்ளை என இருவகை இருக்கிறது.

*கறுப்பு கசகசா பேக்கிங் மற்றும் சாலட்களுக்கும்,வெள்ளை கசகசா சமையலுக்கும் பயன்படுத்தபடுகிறது.

*இதில் அதிகளவு  கால்சியம் இருப்பதால் எலும்புக்கும்,பற்களுக்கும் மிக நல்லது.

*இதில் அதிகளவு Morphine   இருப்பதால் கர்ப்பகாலத்தில் கசகசா சாப்பிடுவதை தவிர்க்கவும்.போதை பொருட்கள் செய்ய பயன்படுத்துவதால் இது சிலநாடுகளில் தடைசெய்யபட்டுள்ளது.

*இதன் எண்ணெயிலிருந்து சோப்பு மற்றும் வார்னிஷ் தயாரிக்கபடுகிறது.
அதிகளவு நார்சத்து இருப்பதால் இரத்த அழுத்தம்,டயாபட்டீஸ்க்கு மிக நல்லது.இதயநோய் வராமல் தடுக்கும் தன்மையுள்ளது.


*இதில் Linoleic Acid இருப்பதால் இதன் எண்ணெய் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கிறது

கசகசா பாயாசம் கர்நாடாகவின் பிரபலமான பாயாசம்.இவ்வளவு நன்மைகள் இருக்கும் கசகசாவில் இங்கே பார்த்து நான் செய்த பாயாசம்.

முதன்முறையாக செய்ததால் கொஞ்சம் தயக்கமாகதான் இருந்தது எப்படி இருக்குமோன்னு,செய்து சுவைத்தபின் தான் தெரிந்தது அதிகளவில் செய்திருக்கலாம்னு ......

தே.பொருட்கள்

கசகசா - 2 டேபிள்ஸ்பூன்
ஒட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1/2 கப்
பால் - 3 கப்
சர்க்கரை = 5 - 6  டேபிள்ஸ்பூன்

செய்முறை

*கசகசாவை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வருத்து ஆறவைக்கவும்.

*ஆறியதும் இதனுடன் +துருவிய தேங்காய்+ஒட்ஸ் +சிறிது பால் சேர்த்து நைசாக அரைக்கவும்.

*பாத்திரத்தில் மீதமுள்ள பாலை கொதிக்கவிடவும்.கொதித்ததும் அரைத்த விழுதை சேர்த்து கைவிடாமல் பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.

*பின் சர்க்கரை சேர்த்து கொதித்த  பின் இறக்கவும்.

பி.கு
*இதனை வெல்லம்/நாட்டு சர்க்கரை சேர்த்தும் செய்யலாம்.இந்தளவு இனிப்பு சரியாக இருக்கும்,விரும்பினால் அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.

*விரும்பினால் வறுத்த முந்திரி,திராட்சை சேர்க்கலாம்.அது சேர்க்காமலே மிக நன்றாக இருந்தது.

*ஒரிஜினல் ரெசிபியில் கசகசாவுடன் ஊறவைத்த அரிசி சேர்த்து அரைப்பார்கள்.அதற்க்கு பதில் நான் ஒட்ஸ் சேர்த்து செய்துள்ளேன்.

*அரிசிக்கு பதில் அரிசிமாவு/ ப்ரவுன் அரிசி/ ப்ரவுன் அரிசிமாவு சேர்த்து செய்யலாம்.

16 பேர் ருசி பார்த்தவர்கள்:

MARI The Great said...

விரிவான செய்முறை விளக்கத்திற்கு நன்றி சகோ!

Easy (EZ) Editorial Calendar said...

மிகவும் அருமையான மருத்துவ குறிப்பு ......... உங்கள் பகிர்வுக்கு வாழ்த்துகள்........


நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

சி.பி.செந்தில்குமார் said...

>>எப்படி இருக்குமோன்னு,செய்து சுவைத்தபின் தான் தெரிந்தது அதிகளவில் செய்திருக்கலாம்னு ..

நீங்களே செஞ்சு நீங்களே நல்லாருக்குன்னு சொன்னா செல்லாது செல்லாது, ஆத்துக்காரர் இன்னா சொன்னார்?

Akila said...

Wow it's very interesting one... Wanna try out surely

ராமலக்ஷ்மி said...

சுவையான குறிப்பு. இதுவரை செய்ததில்லை கர்நாடகத்தில் இருந்தும். அவசியம் செய்து ருசிக்கிறேன். நன்றி மேனகா.

Priya Suresh said...

Naanum ungala pola than first time seitha pothu yeppadi irrukumo'nu konjama panninen,pinnadi than ithoda taste terinchi ippo adikadi festival timela seivathu undu. Love this payasam.

Prema said...

Innovative payasam,luks delicious...

Hema said...

Thought so, original recipela oats irundada endru, very healthy addition Menaga, bookmarked this..

Jayanthy Kumaran said...

any left over there...
very inviting..:)
Tasty Appetite

GEETHA ACHAL said...

Healthy and tempting payasam...

Sangeetha M said...

this is new n interesting, my mom makes halwa with it...payasam sounds delicious n healthy..will try it sometime, thanks for sharing!

Shama Nagarajan said...

delicious payasam

hotpotcooking said...

adding oats is different and looks delicious.

திண்டுக்கல் தனபாலன் said...

கசகசா விலையை நினைத்தால் தான் பயமாக இருக்கு...

எளிதான குறிப்பிற்கும், பயன் தரும் விளக்கத்திற்கும் நன்றி...

Divya A said...

Yummilicious payasam :)
Today's Recipe ~ Spicy Bitter Gourd Stir Fry / Pavakkai Poriyal
You Too Can Cook Indian Food Recipes

Asiya Omar said...

பாயாசம் அருமையாக இருக்கு.

01 09 10