Thursday 10 July 2014 | By: Menaga Sathia

வெண்ணெய்ப் புட்டு / Vennai Puttu | Rice Halwa

தே.பொருட்கள்

புழுங்கலரிசி  -1 கப்
வெல்லம்- 3/4 கப்
ஏலக்காய்த்தூள்- 1/2 டீஸ்பூன்
உப்பு -1 சிட்டிகை
கடலைப்பருப்பு -1கைப்பிடி

செய்முறை
*புழுங்கலரிசியை 1 மணிநேரம் ஊறவைத்து நைசாகவோ அல்லது கொரகொரப்பாகவோ இல்லாமல் அரைக்கவும்.ரவை பதத்தில் அரைக்கவும்.

*கடலைப்பருப்பை 3/4 பதத்தில் வேகவைத்து நீரைவடிக்கவும்.

*வெல்லத்தில் சிறிதளவு நீர்வைத்து கரைந்ததும் வடிகட்டவும்.

*வெல்லத்தின் நீரோடு சேர்த்து கூடுதலாக நீர் 2 கை அளவில் வைக்கவும்.அதாவது 1 கப் அரிசிக்கு 2 கப் நீர் வைக்கவும்.

*வெல்லநீர் +உப்பு சேர்த்து கொதிக்கும் போது வேகவைத்த கடலைப்பருப்பு+அரிசிமாவை சேர்த்து சிறுதீயில் கைவிடாமல் கிளறவும்.

*மாவு கெட்டியாகி கையால் தொட்டால் ஒட்டமல் வரும் பதத்தில் வரும் ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.

*இதனை நெய் தடவிய தட்டில் கொட்டு சமப்படுத்தி ஆறியதும் துண்டுகள் போட்டோ அல்லது அப்படியே எடுத்தும் பரிமாறலாம்.

பி.கு

*மாவு சேர்த்து கிளறும் சிறுதீயில் கிளறவும்,இல்லையெனில் அடிபிடிக்கும்.

4 பேர் ருசி பார்த்தவர்கள்:

great-secret-of-life said...

this is new to me.. looks good

Kurinji said...

easy and yummy recipe...

Hema said...

Vennai puttu looks delicious, had it a couple of times, never tried making it..

Priya Suresh said...

Pakkathula irruntha nalla irrukum, vennai puttu yen paatiyoda signature dish.

01 09 10