Tuesday 30 September 2014 | By: Menaga Sathia

சோள சுண்டல் / SORGHUMN( JOWAR ) SUNDAL | NAVARATHRI RECIPES

சோளம் - இது ஒரு புல்வகையை சேர்ந்த தாவரம் . சிறுதாணியங்களில் ஒருவகை .இதனை அரிசிக்கு பதில் சாதம் போல வேகவைத்து சாப்பிடலாம்.

இதில் ரொட்டி,கஞ்சி,கூழ்,இட்லி தோசை,சாதம்,சப்பாத்தி என நிறைய செய்யலாம்.

இதில் மாவு சத்து,நார்சத்து அதிகம் உள்ளது.குளுட்டான் என்னும் வேதிப்புருள் இதில் இல்லை.கோதுமையில் உள்ள புரோட்டீனை விட சோளத்தில்  அதிகம் இருக்கு.

சர்க்கரையை குறைக்கும் தன்மை கொண்டதால் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.பீட்டா கரோட்டீன் அதிகம் உள்ளதால் கண்குறைபாடை சரி செய்யும்.

இதில் புரதம்,கொழுப்பு சத்து,இரும்புசத்து,கால்சியம்,மாவுசத்து,பீட்டா கரோட்டின் என நிறைய சத்துக்கள் இருக்கு.

இதில் சுண்டல் செய்வதை பார்க்கலாம்.

தே.பொருட்கள்

சோளம் -1 கப்
உப்பு - தேவைக்கு
தேங்காய் துறுவல் -1 டேபிள்ஸ்பூன்
துருவிய கேரட்+மாங்காய் - தலா 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க
எண்ணெய் -1டீஸ்பூன்
கடுகு + உளுத்தமபருப்பு - தலா 1/2டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
கறிவேப்பிலை -சிறிது
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்

செய்முறை

*சோளத்தை முதல்நாள் இரவே ஊறவைக்கவும்.

 *மறுநாள் குக்கரில் சோளம்+உப்பு+முழ்குமளவு நீர் சேர்த்து 7- 8 விசில் வரை வேக வைத்து நீரை வடிக்கவும்..

 *பின் கடாயில் என்னெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
 *கேரட்+மாங்காய்துறுவலை சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி வேகவைத்த சோளத்தை சேர்த்து கிளறவும்.

 *பின் தேங்காய்துறுவலை சேர்த்து கிளறி இறக்கவும்.
பி.கு

சோளம் வேக நீண்ட நேரம் ஆகும். 7 விசில் வரை வேகவில்லை எனில் மேலும் 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

3 பேர் ருசி பார்த்தவர்கள்:

Hema said...

I have cooked only sorghum flour, sundal looks delicious..

Priya Suresh said...

Very healthy sundal, yennaku oru cup venum.

'பரிவை' சே.குமார் said...

படங்களுடன் விளக்கம் அருமை.

01 09 10