Showing posts with label கோகுலாஷ்டமி ஸ்பெஷல். Show all posts
Showing posts with label கோகுலாஷ்டமி ஸ்பெஷல். Show all posts
Tuesday, 7 August 2012 | By: Menaga Sathia

கை முறுக்கு /Kai Murukku

 இந்த வருட கிருஷ்ண ஜெயந்தி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்.அதற்காக ஸ்பெஷலா செய்யனும்னு நினைத்த போது கை முறுக்கு செய்ய ஆசை வந்துடுச்சு.முதன்முதலாக முயற்சி செய்தது.பல யூடியூப் வீடியோகளை பார்த்து முயற்சி செய்தது.ஷேப் சரியாக வரவில்லை ஆனாலும் இனி அடிக்கடி செய்யும்போது சரியா வந்துடும்னு நினைக்கிறேன்...

முதல் முறையாக செய்ததால் 1/2 கப் அரிசியில் மட்டும் செய்து பார்த்தேன்.

தே.பொருட்கள்

பச்சரிசி -1/2 கப்
வறுத்தரைத்த உளுத்தமாவு - 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
எள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் -பொரிக்க

செய்முறை

*அரிசியை கழுவி 1/2 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.

*துணியில் ஈரம் போக உலர்த்தி,மிக்ஸியில் மாவாக நைசாக அரைக்கவும்.

*அதனுடன்  மேற்கூறிய பொருட்களில் எண்ணெய் நீங்கலாக அனைத்தையும் ஒன்றாக கலந்து கெட்டியாக தேவையான நீர் சேர்த்து பிசையவும். 
 *சிறு உருண்டை அளவில் மாவை எடுத்து பேப்பரில், பாட்டில் மேல்மூடி வைத்து மாவை முறுக்கி வட்டமாக சுற்றி விடவும்.

 *சிறிது நேரம் உலரவைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பி.கு

*இந்த முறுக்கிற்கு அரிசிமாவை ஈரபதமாகதான் பயன்படுத்த வேண்டும்.மாவை வறுக்ககூடாது.

*1/2 கப் அரிசியில் 1 கப் அளவிற்க்கு அரிசிமாவு வரும்.

*நெய் பயன்படுத்தினால் முறுக்கு சிவந்துவிடும்,அதனால் முறுக்கிற்கு எப்போழுதும் வெண்ணெயை பயன்படுத்தவும்.

*தேங்காய் எண்ணெய் சிறிது சேர்ப்பதால் நன்கு வாசனையுடன் இருக்கும்.

*மாவை சுற்றும்போது கையில் எண்ணெய் தடவி சுற்றினால் ஈசியாக சுற்ற வரும்.

*நான் ரெடிமேட் உளுத்தமாவு பயன்படுத்தியிருக்கிறேன்.உளுத்தமாவு இல்லையெனில் உளுந்தை வெறும் கடாயில் வாசனை வறும் வரை வறுத்து நைசாக பொடிக்கவும்.
01 09 10