Monday, 20 June 2011 | By: Menaga Sathia

பாகற்காய் வறுவல் / Bittergourd Varuval

தே.பொருட்கள்:
பாகற்காய் - 1/4 கிலோ
வெங்காயம் - 1
மிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

வறுத்து பொடிக்க:
கடலைப்பருப்பு - 1/2 டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
*பாகற்காய்+வெங்காயத்தை நறுக்கவும்.வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை கரகரப்பாக பொடிக்கவும்.

*கடாயில் நறுக்கிய பாகற்காய்+வெங்காயம்+உப்பு+மிளகாய்த்தூள் சேர்த்து தேவையானளவு நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*பாகற்காய் வெந்ததும் நன்கு சுருள கிளறி பொடித்த பொடியை தூவி இறக்கவும்.
Thursday, 16 June 2011 | By: Menaga Sathia

வெந்தய ரசம் / Vendaya Rasam

தே.பொருட்கள்

புளிகரைசல் - 2 கப்
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
நசுக்கிய பூண்டுப்பல் - 3
கீறிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நருக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க
கடுகு - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கரிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - சிறிது
காய்ந்த மிளகாய் - 2

செய்முறை
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து பூண்டுப்பல்+பச்சை மிளகாய்+வெங்காயம்+தக்காளி+சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் மஞ்சள்தூள்+புளிகரைசல்+உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

*பின் மிளகுத்தூள் சேர்த்து 5 நிமிடம் கழித்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
Wednesday, 15 June 2011 | By: Menaga Sathia

நூல்கோல் குருமா / Kohlrabi(German Turnip) Kurma

தே.பொருட்கள்

நூல்கோல் - 2 சிறியது
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

எண்ணெயில் வதக்கி அரைக்க

வெங்காயம் - 1
தக்காளி - 1 சிறியது
பச்சை மிளகாய் - 3
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்

அரைக்க
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
கசகசா,சோம்பு - தலா 1/2 டீஸ்பூன்

தாளிக்க
கிராம்பு - 3
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

*எண்ணெயில் வதக்கி அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைக்கவும்.தேங்காயுடன் சோம்பு+கசகசா மட்டும் வறுத்து நைசாக அரைக்கவும்.

*பாத்திரத்தில் நூல்கோலை தோல் சீவி துண்டுகலாகி மஞ்சள்தூள்+உப்பு சேர்த்து வேகவிடவும்.

*காய் வெந்ததும் வெங்காயவிழுது+தேங்காய் விழுது சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்.

*கடைசியாக தாளித்து சேர்க்கவும்.

Monday, 13 June 2011 | By: Menaga Sathia

பரங்கிப்பேட்டை பிரியாணி / Parankipettai Biryani

ஆசியா அக்காவின் குறிப்பை பார்த்து செய்தது.மிக நன்றாக இருந்தது.நன்றி ஆசியாக்கா!!

இந்த பிரியாணிக்கு வெள்ளை மிளகு,சோம்பு,சீரகம்,ஏலம்,பட்டை ,கிராம்பு,கசகசா சேர்த்து செய்யும் பொடிதான் முக்கியமானது.இஞ்சியை விட பூண்டு அதிகமா இருக்கவேண்டும்.

இந்த பொடியை தாள்ச்சா,மட்டன் வறுவலுக்கும் பயன்படுத்தலாம்.நான் வெள்ளை மிளகுக்கு பதில் கறுப்பு மிளகுதான் பயன்படுத்தியுள்ளேன்.

தே.பொருட்கள்
பாஸ்மதி - 4 கப்
மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2 பெரியது
தக்காளி  - 2 பெரியது
இஞ்சி - 1 பெரியதுண்டு
முழுபூண்டு - 2
புதினா,கொத்தமல்லிதழை - தலா 1/2 கட்டு
பச்சை மிளகாய் - 3
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தயிர் - 125 கிராம்
எலுமிச்சைசாறு - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
பட்டை - 1துண்டு
கிராம்பு - 3
ஏலககய் - 3
பிரியாணி இலை - 4

வறுத்து பொடிக்க

மிளகு - 1 டீஸ்பூன்
பட்டை - 1 சிறுதுண்டு
ஏலக்காய் - 4
கிராம்பு - 4
சோம்பு - 2 டீஸ்பூன்;
சீரகம் - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்

செய்முறை

*வெங்காயம்+தக்காளி நறுக்கவும்.இஞ்சி பூண்டு அரைக்கவும்.அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.

*மட்டனை சுத்தம் செய்து சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது,தயிர் சேர்த்து குக்கரில் 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+ வறுத்து பொடித்த பொடியில் 1 டேபிள்ஸ்பூன் சேர்த்து சிறுதீயில் வதக்கவும்.

*பின் தக்காளி+பச்சை மிளகாய்+புதினா கொத்தமல்லி+மீதமுள்ள மிளகாய்த்தூள்+வேகவைத்த கறி  சேர்த்து வதக்கவும்.

*கறிவேகவைத்த நீரை சேர்த்து 6 கப் நீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

*கொதிக்கும் போது உப்பு+அரிசி சேர்த்து வேகவிடவும்.

*நீர் சுண்டி வரும் போது நெய்யை ஊற்றி 190°C முற்சூடு செய்த அவனில் 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.

பி.கு
எனக்கு இந்த முறையில் செய்வதுதான் நன்றாக வரும்.அவரவர் விருப்பம்போல் சாதத்தை தனியாக வடித்தும் தம் போட்டு செய்யலாம்.
Wednesday, 8 June 2011 | By: Menaga Sathia

தால் மக்கானி / Dhal Makkani

தே.பொருட்கள்:

கடலைப்பருப்பு,ராஜ்மா - தலா 1/4 கப்
கறுப்பு உளுந்து - 1/4 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய இஞ்சி+பூண்டு = சிறிதளவு
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
ப்ரெஷ் க்ரீம் - 1/4 கப்
உப்பு+ எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:

*பருப்பு வகைகளை ஒன்றாக 6 மணிநேரம் ஊறவைத்து நன்கு கழுவி உப்பு+பச்சை மிளகாய்+இஞ்சி பூண்டு + நீர் சேர்த்து குக்கரில் குழைய வேகவைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம்+தக்காளி சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.

* பின் மிளகாய்த்தூள் + சீரகத்தூள்+சிறிதளவு ப்ரெஷ் க்ரீம் சேர்த்து நன்கு வதக்கி வேகவைத்த பருப்புகளை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

*பரிமாறும் போது ப்ரெஷ் க்ரீம் விட்டு பரிமாறவும்.சப்பாத்தி+நாணுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.
Tuesday, 7 June 2011 | By: Menaga Sathia

நீலகிரி மட்டன் குருமா / Nilgris Mutton Kurma

தே.பொருட்கள்

மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி - 1 சிறுதுண்டு
பூண்டு - 10பல்
பச்சை மிளகாய் -3
தனியாத்தூள் - 3 டீஸ்பூன்
தயிர் - 250 கிராம்
வேகவைத்த உருளைக்கிழங்கு - 2
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

அரைக்க
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - 1 கட்டு

தாளிக்க
பட்டை - 1 துண்டு
கிராம்பு -3
பிரியாணி இலை - 2
ஏலக்காய் -3

செய்முறை

*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.தயிரில் மட்டனை 1/2 மணிநேரம்  ஊறவைக்கவும்.

*வெங்காயம்+தக்காளி+ப.மிளகாய்+இஞ்சி பூண்டு இவை அனைத்தையும் தனித்தனியாக கொரகொரப்பாக அரைக்கவும்.

*குக்கரில் எண்ணெய்விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து அரைத்த வெங்காயம்+இஞ்சி பூண்டு+பச்சை மிளகாய்+தக்காளி+தனியாத்தூள்+மட்டன்+உப்பு ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*தேவையானளவு  நீர் விட்டு 3  விசில் வரை வேகவைக்கவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் அரைத்த தேங்காய் விழுது+உருளை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்கவைத்து இறக்கவும்.
Wednesday, 1 June 2011 | By: Menaga Sathia

ரவா தோசை / Rava Dosai

 தே.பொருட்கள்
ரவை - 1 கப்
அரிசி மாவு - 3/4 கப்
மைதா - 1/4 கப்
புளித்த மோர் - 1/2 கப்
துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பொடித்த மிளகு+சீரகம் - தலா 1 /2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய்(அ)நெய் = தேவைக்கு

செய்முறை
*மேற்கூறிய பொருட்களில் வெங்காயம்+எண்ணெய் தவிர அனைத்தையும் ஒன்றாக கலந்து தோசைமாவு பதத்தைவிட நீர்க்க கரைக்கவும்.

 *தோசைக்கல்லில் எண்ணெய் தடவி வெங்காயத்தை தூவி விடவும்.
 *மாவை கையால் தண்ணீர் தெளிப்பதுப்போல் இடைவெளி இல்லாமல் தெளித்து எண்ணெய்(அ)நெய் ஒரங்களில் ஊற்றவும்.
*வெந்ததும் 2ஆக மடித்து சட்னி,சாம்பாருடன் பரிமாறவும்.தோசையை திருப்பி போடக்கூடாது.
01 09 10