Friday 27 March 2009 | By: Menaga Sathia

கோதுமை ரவை உப்புமா / Cracked Wheat Rava Upma



தே.பொருட்கள்:

கோதுமைரவை - 2 கப்
வெங்காயம் - 1 சிறியது
தேங்காய் துருவல் - 1/2 கப்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு+உ.பருப்பு = 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
காய்ந்த மிளகாய் - 3

செய்முறை:


* ரவையை வெறும் கடாயில் வாசனை வரும்வரை வறுக்கவும்.

*வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் 1 கப் ரவைக்கு 2 கப் தண்ணீர் அளவுக்கு,4 கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.

*நன்கு கொதித்ததும் வறுத்த ரவையை போட்டு கிளறவும்.

*தண்ணீர் நன்கு வற்றி வரும் போது தேங்காய்துறுவலைப் போட்டு கிளறி மூடி போட்டு அடுப்பை அணைக்கவும்.

*10நிமிடம் கழித்து திறந்துப் பார்த்தால் உப்புமா நன்கு பொலபொலவென இருக்கும்.

பி.கு:
இந்த உப்புமாவிற்கு வெங்காயமும்,தேங்காயும் அதிகமா இருந்தால் இன்னும் சுவையா இருக்கும்.இதர்க்கு தொட்டுக் கொள்ள சின்ன வெங்காய காரசட்னி சூப்பராயிருக்கும்.எனக்கு மிகவும் பிடித்த உப்பமா இது.

3 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

நன்றாகவும் ஈசியாகவும் இருக்கு மேனகா..

GEETHA ACHAL said...

மிகவும் அருமையாக இருக்கின்றது மேனகா. நான் இதுவரை தேங்காய் சேர்த்து செய்தது இல்லை. புது விதமாக இருக்கின்றது. கண்டிப்பாக செய்து பார்க்க வேண்டிய குறிப்பு.
அன்புடன்,
கீதா ஆச்சல்

Menaga Sathia said...

பாயிசா,கீதா ஆச்சல் தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!!!

01 09 10