Thursday 19 March 2009 | By: Menaga Sathia

எலுமிச்சை ஊறுகாய்



எனக்கு ஊறுகாய் இல்லாமல் சாப்பாடே பிடிக்காது.அதுவும் எங்க அம்மா போடுகிற ஊறுகாய் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.எங்கம்மா செய்யும் முறையில் நான் போட்ட ஊறுகாய்.

தே.பொருட்கள்:

எலுமிச்சை பழம் - 10
காய்ந்த மிளகாய் - 100 கிராம்
உப்பு - 10 டேபிள்ஸ்பூன்[ரொம்ப கரிக்கனும்,குறைவாக இருந்தால் அதிகமாக போடவும்]
நல்லெண்ணெய் - 100 கிராம்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 10[கீறவும்]
இஞ்சி - சிறு துண்டு[பொடியாக கட் செய்யவும்]

செய்முறை:

* பழத்தை கழுவித் 4 காக கட்செய்யவும்.

*உப்பை லேசாக வெறும் கடாயில் வதக்கவும்.[அப்போ தான் ஊறுகாய் மேலே வெள்ளையாக இல்லாமல் இருக்கும்,நீண்ட நாள் கெடாது].

*பிளாஸ்டிக்,கண்ணாடி பாட்டில் அல்லது பீங்கான் ஜாடியில் கட் செய்த பழத்தை போட்டு அதுல் ஒரு சில கட் செய்த பழத்தை பிழியவும்.வருத்த உப்பு போட்டு லேசாக குலுக்கவும்.பச்சைமிளகாய் ,இஞ்சி போட்டு தினமும் குலுக்கி விடவும்.

* 10 அல்லது 15 நாட்கள் ஊறியதும் தாளிக்கலாம்.

*எண்ணெயை காயவைத்து ஆறவிடவும்.

*கடுகு+வெந்தயம் வெறும்கடாயில் லேசாக வறுக்கவும்.

*பின் மிளகாய் +கடுகு+வெந்தயம் மிக்ஸியில் அரைக்கவும்.[மிளகாயை வறுக்ககூடாது]

*அரைத்ததூள்+எண்ணெயை ஊறுகாயில் போட்டு நன்கு கலக்கவும்.

*இப்போ சுவையான ஊறுகாய் தயார்.

6 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

ஊறுகாய் கூட நீங்க செய்விங்களா? எனக்கும் ஊறுகாய் என்றால் ரொம்ப பிடிக்கும்.. ஆனால் வீட்டில் போடுவதில்லை. மாங்காய் ஊறுகாய் தான் பிடிக்கும்.. இதே போல் மாங்காயில் போடலாமா?

Menaga Sathia said...

பாயிசா உங்களுக்கும் பிடிக்குமா,கடையில் வாங்கும் எலுமிச்சை ஊறுகாய் கசக்குதுப்பா அதான் நான் வாங்க மாட்டேன்.மாங்காயிலும் இதே மாதிரி போடலாம்.காயை கழுவி பெரிய துண்டுகளாக வெட்டி காட்டன் துணிகளில் துடைத்த பிறகு 1 நாள் உப்பில் ஊறவைத்து தாளிக்கலாம்.

Unknown said...

ரொம்ப நன்றிப்பா

பொன் மாலை பொழுது said...

சகல விதமான ஊறுகாய்களை தவிர்ப்பது நல்லது. ருசிக்காக சாப்பிட ஆரம்பித்து பின்னர் வம்பில் முடிகிறது. ஊறுகாய்கள் பெரும்பாலும் அதிக உப்புடனே தயார்செய்யபடுவதால் உப்பின் அளவு நமக்கு தேவைக்கு அதிகமாக உடலில் சேர்வதால் இரத்த அழுத்தம் மிக எளிதாக உயருகிறது. மருத்தவர்களின் இடைவிடாத எச்சரிக்கை இது.

Chef.Palani Murugan, said...

உண்மைதான். கக்கு - மாணிக்கம் அவர்களே ஊறுகாயை ஊறுகாய் அள‌வுதான் சாப்பிட‌வேண்டும்.

Menaga Sathia said...

நன்றி சகோ!! நீங்கள் சொல்வது சரிதான்.தமிழர்களுக்குதான் நாக்கு ருசி அதிகமாச்சே..ஆசை யாரைவிட்டது.இருந்தாலும் அளவோடுதான் சாப்பிடுவது...

நன்றி செஃப்!!

01 09 10