Sunday 20 March 2011 | By: Menaga Sathia

போட்டி(ஆட்டுக்குடல்)குருமா/ Aattu Kudal(Potti) Kurma

தே.பொருட்கள்

போட்டி - 1
கத்திரிக்காய் - 5 சிறியது
அரிந்த வெங்காயம் - 1
அரிந்த தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 கைப்பிடி
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தனியாத்தூள்,வரமிளகாய்த்தூள் - தலா 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்

தாளிக்க
பட்டை - 1 சிறுதுண்டு
பிரியாணி இலை - 2
கிராம்பு - 4
கறிவேப்பிலை- சிறிது

செய்முறை
* போட்டியை சுத்தம் செய்து சுடுநீரில் நன்கு அலசவும்.தேங்காயை நன்கு மைய அரைக்கவும்.

*குக்கரில் போட்டி+கடலைப்பருப்பு+சிறிது உப்பு+சிறிது இஞ்சி பூண்டு விழுது+சிறிது நீர் சேர்த்து 4 விசில் வரை வேகவைக்கவும்.

*ஆறியதும் போட்டி வேகவைத்த நீரை ஊற்றிவிட்டு கடலைப்பருப்பை எடுத்து வைக்கவும்.கறியை சிறுதுண்டுகளாக வெட்டவும்.கத்திரிக்காயை பொடியாக வெட்டவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது+தூள் வகைகள்+கத்திரிக்காய்+வேகவைத்த கறி+உப்பு அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் தேவையான நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.கத்திரிக்காய் வெந்ததும் தேங்காய் விழுது சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவைத்து இறக்கவும்.

*இட்லி,தோசைக்கு பெஸ்ட்  காம்பினேஷன்...

19 பேர் ருசி பார்த்தவர்கள்:

Priya Suresh said...

Potti kurma saapite naal achu..aama potti yenna vanguninga Menaga..Thamizh kadailaya??

Asiya Omar said...

நல்லாயிருக்கு மேனகா,ஊரில் இருக்கும் பொழுது செய்வது உண்டு.

Unknown said...

Enga amma seyvaanga.romba nalla irukkum nuninaikkiren.Bcoz i dont like the smell of cleaning this.Looks delicious.

vanathy said...

நான் இந்த ஐட்டம்ஸ் சமைத்து பழக்கம் இல்லை. நல்லா இருக்கு உங்க ரெசிப்பி.

சிநேகிதன் அக்பர் said...

பொதுவாக குடல் கறி வீட்டில் செய்தால் மட்டுமே சாப்பிடுவேன். நல்ல ரெசிப்பி.

Sarah Naveen said...

that looks so yumm!!! perfect with rice n roti..

ஸாதிகா said...

அட..மேனகா,போட்டி கூட சமைப்பீர்களா?இந்த குழம்பில் கொழுகட்டைஅக்ளை போட்டு வேக வைத்து எடுத்தால் சூப்பர் தக்கடி.அது எனக்கு மிகவும் பிடித்த ஐட்டம்.

Jayanthy Kumaran said...

completely a new recipe to me..sounds delicious..
Tasty appetite

GEETHA ACHAL said...

ரொம்ப நல்லா இருக்கு மேனகா...அம்மா செய்வாங்க...சாப்பிட மட்டும் தான் தெரியும் எனக்கும்...இதற்கு கூடவே இட்லி / தோசை படமும் சேர்த்து இருந்தால் பார்த்தாவது பசி தீர்த்து கொண்டு இருப்பேன் அல்லவா...

Pushpa said...

My mom used to make this,looks delicious.

'பரிவை' சே.குமார் said...

நல்லா இருக்கு உங்க ரெசிப்பி.

Suhaina said...

i am not able to read ur posts..pls add in a language translator in ur blog...all ur recipes look yummy..

Anonymous said...

டும்டும்...டும்டும்...
இப்படியுமா?
நாக்கில் எச்சில் ஊறவைப்பது?

குறை ஒன்றும் இல்லை !!! said...

யாருக்கு யாருங்க போட்டி ?

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!! எங்க அண்ணா வீட்டில்,அவங்க வாங்கியதில் எனக்கு பாதி கொடுத்தாங்க.லா கூர்னவ் தமிழ் கடையில்தான் வாங்கினாங்க...

நன்றி ஆசியா அக்கா!!

நன்றி சவீதா!! ஆமாம் சிலருக்கு அந்த ஸ்மெல் பிடிக்காதுதான்..

நன்றி வானதி!!

Menaga Sathia said...

நன்றி அக்பர்!!

நன்றி சாரா!!

நன்றி ஸாதிகா அக்கா!! நானும் தக்கடி செய்யனும்னுதான் நினைக்கிறேன்,முடியமாட்டேங்குது..

நன்றி ஜெய்!!

Menaga Sathia said...

நன்றி கீதா!! தோசையுடன் வைத்து எடுக்க மறந்துட்டேன்பா..

நன்றி புஷ்பா!!

நன்றி சகோ!!

நன்றி சுகைனா!!

Menaga Sathia said...

நன்றி நையாண்டி மேளம்!!

வாங்க ராஜ்,ரொம்ப நாளாச்சு..எப்படி இருக்கீங்க..ஹா ஹா இது அரசியல் இல்லைங்கோ,சமையல்...

cheena (சீனா) said...

அன்பின் மேனகா - நல்லாத்தான் இருக்கும் - செய்யச் சொல்லுவோம் - நட்புடன் சீனா

01 09 10