Wednesday 1 February 2012 | By: Menaga Sathia

அரைத்துவிட்ட சாம்பார் /Araituvitta Sambhar

 தே.பொருட்கள்
துவரம்பருப்பு - 1கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 4
மணத்தக்காளிகீரை - 1 சிறிய கட்டு
வெங்காயம்.தக்காளி - தலா 1
புளிகரைசல் - 1/2 கப்
உப்பு+எண்ணெய் - தேவைக்கு

எண்ணெயில் வறுத்து பொடிக்க
காய்ந்த மிளகாய் - 2
மிளகு,சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
தனியா - 1 டேபிள்ச்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது

தாளிக்க
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4டீஸ்பூன்


செய்முறை
*மணத்தக்காளிக்கீரையில் இருக்கும் விதைகளை தனியாக எடுத்து வைக்கவும்.


*பருப்பை மஞ்சள்தூள்+பூண்டு+கீரை விதை சேர்த்து நன்கு குழைய வேகவைக்கவும்.
 *கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.வெங்காயம்+தக்காளியையும் நறுக்கவும்.
 *பொடிக்க கொடுத்துள்ளவைகளை நைசாக பொடிக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம்+தக்காளி+கீரை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் புளிகரைசல்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் பொடித்த பொடியிலிருந்து 1டேபிள்ஸ்பூன் +வேகவைத்த பருப்பை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.

பி.கு

*எந்த கீரை வேண்டுமானாலும் சேர்க்கலாம்.கீரைக்கு பதில் விரும்பிய காய்களும் சேர்த்து செய்யலாம்.

19 பேர் ருசி பார்த்தவர்கள்:

Aarthi said...

This looks awesome..Yummy Recipe

Aarthi
http://www.yummytummyaarthi.com/

Asiya Omar said...

மணத்தக்காளி சேர்த்து அரைத்து விட்ட சாம்பார்,ருசி அருமையாக இருக்கும்.

ராஜி said...

சாம்பாருக்கு நன்றி

Sangeetha M said...

keerai sambar in a different way, nice recipe...will try it next time!!

Spicy Treats
OnGoing Event ~ Show Me Your HITS~Healthy Delights

Sowmya said...

yummy sambar..looks delicious!

ஸாதிகா said...

அரைத்து விட்ட சாம்பார் இதுவரை சமைத்ததில்லை.ரெஸிப்பிக்கு நன்றி மேனகா.

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்புக்கு நன்றி மேனகா. எந்தக் கீரையும் சேர்க்கலாம் என்பதும் நன்று.

சாந்தி மாரியப்பன் said...

சாம்பார் அசத்தலா இருக்கு. வீட்ல பொன்னாங்கண்ணி எக்கச்சக்கமா வளர்ந்துருச்சு. எப்படித் தீர்க்கலாம்ன்னு யோசிச்சிட்டிருந்தேன். இடுகை போட்டு உதவியதுக்கு நன்னி :-))

Priya dharshini said...

My fav sambar,even i have posted similar one.

Gayathri Kumar said...

Keerai sambar combo arumai...

Jaleela Kamal said...

மிக அருமை

எனக்கு பொடி போட்டு செய்வதை விட அரைத்து விட்டு செய்வது ரொம்ப பிடிக்கும்

Niloufer Riyaz said...

sambar with greens looks delicious!!

Priya Suresh said...

Omg, wat a flavourful sambhar, pakkave aasaiya irruku..

Raks said...

Garlic in sambar sounds really interesting, nice recipe!

Mahi said...

மணத்தக்காளி கீரையில் குழம்பு செய்ததில்லை,பொரியல் மட்டுமே செய்வது வழக்கம். இது புதுசா இருக்குங்க. நல்லா இருக்கு சாம்பார்.

MyKitchen Flavors-BonAppetit!. said...

Luks so yumm.Really awesome Sambar Dear.

george said...

looks delicious...

www.lazzykitchen.com

Anonymous said...

wow manathakkali keerai and arachi vitta sambhar.. what a combo

Hema said...

Manathakkali keerai sambar, should've tasted delicious, waiting to go to India to have it..

01 09 10