Monday 28 May 2012 | By: Menaga Sathia

முருங்கைக்காய் தொக்கு /Drumstick Thokku

 நல்ல சதைப்பற்றான,இளசான முருங்கைக்காயில் செய்தால் அபாரமான சுவையில் இருக்கும் இந்த தொக்கு.சாதம்,இட்லி,தோசை அனைத்திற்க்கும் ஏற்றது.சுவையான குறிப்பு தந்த திருமதி.மனோ அவர்களுக்கு மிக்க நன்றி!!

தே.பொருட்கள்

முருங்கைக்காய் - 3
புளி - 1 எலுமிச்சை பழளவு
பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் - 1 கப்
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
வறுத்து பொடித்த வெந்தயத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

*முருங்கைக்காய்களை துண்டுகளாகி ஒரு பாத்திரத்தில் போட்டு,குக்கரில் வைத்து 2 விசில் வரை வேகவைக்கவும்.

*ஆறியதும் சதைப்பகுதியை வழித்தெடுத்து சின்ன வெங்காயத்துடன் கலந்து வைக்கவும்.

*புளியை சிறிது தண்ணீரில் கெட்டியாக கரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காய முருங்கைகலவையை போட்டு பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்கவும்.

*வதங்கியதும் புளிகரைசல்+மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள்+உப்பு சேர்த்து சிறுதீயில் கொதிக்கவிடவும்.

*பின் வெந்தயத்தூள்+பெருங்காயத்தூள் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

16 பேர் ருசி பார்த்தவர்கள்:

Sangeetha Nambi said...

U have great patience to prepare this healthy dish...

சி.பி.செந்தில்குமார் said...

kilari? or kalari? hi hi

Lifewithspices said...

wow too good

Priya Suresh said...

Wat a healthy thokku, supera irruku, sangeetha sollura madhri romba poruma ungaluku.

Akila said...

Wow never heard of this.... Would love to try it ... Pakkave supera iruku

'பரிவை' சே.குமார் said...

வித்தியாசமான முருங்கைத் தொக்கு...
செய்முறையும் எளிதாக தெரிகிறது.

Sangeetha M said...

any left over?!looks too tempting dear...my grand mom used to make this during drumstick season. we just love it a lot...
Spicy Treats

Raks said...

Looks super tempting, nice recipe!

Shanavi said...

Adding tamarind is new to me in this thokku..Will try ..Thanx for sharing dear

மனோ சாமிநாதன் said...

முருங்கைக்காய் தொக்கு நன்றாய் வந்திருக்கிறது. புகைப்படமும் நன்றாக இருக்கிறது மேனகா! முருங்கைக்காய் மட்டும் இளசாய், நல்ல சுவையுடன் இருப்பது முக்கியம்!

Jayanthy Kumaran said...

very new & interesting recipe
Tasty Appetite

Kanchana Radhakrishnan said...

வித்தியாசமான முருங்கைத் தொக்கு... நன்றாக இருக்கிறது.

சாராம்மா said...

dear menaga,

how r u? how is shivani& ur hus?
how is ur health? i have lost ur number. if u have time call me.

anita

Hema said...

Ayyo, paarkave supera irukku, btw I am in Pondy rt now, amma veedu.

Mahi said...

Lip smacking thokku! :P

மாதேவி said...

சுவையான தொக்கு.

01 09 10