இட்லி செய்ய தே.பொருட்கள்
கார்ன்மீல்(சோளரவை) - 2 கப்
பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்
தயிர் - 1 கப்
பொடியாக நறுக்கிய கேரட்+பீன்ஸ் - தலா 1/4கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க
கடுகு+ உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 3/4 டீஸ்பூன்
செய்முறை
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து நறுக்கிய காய்களை சேர்த்து நன்கு வதக்கவும்.
*வதங்கியதும் கார்ன்மீல் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
*ஆறியதும் தயிர்+உப்பு+பேக்கிங் சோடா +தேவையான நீர் சேர்த்து கரைத்து 30 நிமிடங்கள் வைத்திருந்து இட்லிகளாக சுட்டெடுக்கவும்.
பச்சை பட்டாணி குருமா
தே.பொருட்கள்
ப்ரோசன்/ ப்ரெஷ் பட்டாணி - 1 கப்
தேங்காய் துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
எண்ணெயில் வதக்கி அரைக்க
நறுக்கிய வெங்கயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
காய்ந்த மிளகாய் - 4/5
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டுப்பல் - 4
செய்முறை
*வதக்கி அரைக்க கொடுத்துள்ள பொருட்களுடன் தேங்காய்+பொட்டுக்கடலை சேர்த்து நைசாக அரைக்கவும்.
*குக்கரில் எண்ணெய் விட்டு சோம்பு சேர்த்து தாளித்து பட்டாணி+அரைத்த விழுது+உப்பு+தேவையான நீர் சேர்த்து 2 விசில் வரை வைத்து இறக்கவும்.
14 பேர் ருசி பார்த்தவர்கள்:
Wow very yummy n healthy
>>வதக்கி அரைக்க கொடுத்துள்ள பொருட்களுடன் தேங்காய்+பொட்டுக்கடலை சேர்த்து நைசாக அரைக்கவும்.
நைசாகன்னா எப்படி?யாருக்கும் தெரியாம நைஸா அரைக்கனுமா? ஹி ஹி
Another Kids delight recipe....
Both idli and kurma makes me hungry.
இரண்டும் அருமையான குறிப்புகள் மேனகா. மிக்க நன்றி.
New idea, paarka supera irukku..
I too have tried this corn idli, kurma supera irukku
இட்லியைவே வழக்கமாக இல்லாமல் புதுசா...குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
yummy nice and easy....
புது ஐடியாவா இருக்கே...
Nice recipe...super kurma to go with idly/dosa...
Spicy Treats
அருமையான குறிப்பு...
புதுமையான சத்துள்ள ரெசிபி..கலர்புல்லா இருக்குங்க..
வித்தியாசமான ரெஸிப்பி மேனகா.
Post a Comment