Monday 13 August 2012 | By: Menaga Sathia

நெல்லிக்காய் ரசம் /Gooseberry Rasam

காராசாரமான நெல்லிக்காய் ரசம் உடலுக்கு மிகவும் நல்லது.நன்றி ஏஞ்சலின்!!

தே.பொருட்கள்

நெல்லிக்காய் - 5
தக்காளி - 1
வேகவைத்த துவரம்பருப்பு - 1/2 கப்
ரசப்பொடி - 2 டீஸ்பூன்
சுக்குத்தூள் - 1 டீஸ்பூன்
நசிக்கிய பூண்டுப்பல் - 4
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லித்தழை - சிறிது
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கடுகு - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காயத்தூள் - சிறிது

செய்முறை

*நெல்லிக்காயை துருவிக்கொள்ளவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து தக்காளி+உப்பு+பூண்டுப்பல்+சுக்குத்தூள்+மஞ்சள்த்தூள்+தூவிய நெல்லிக்காய்  சேர்த்து வதக்கி 2 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்ததும் ரசப்பொடி+வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

21 பேர் ருசி பார்த்தவர்கள்:

Anonymous said...

புளி சேர்க்காத மாறுதலான ஆரோக்கியமான ரசம் !

Angel said...

மிக்க நன்றி மேனகா .உங்க கைப்பக்குவத்தில் ரசம் பார்க்கவே மிக அருமையா இருக்கு .

R.Punitha said...

Hi Menaga,

Goosberry rasam looks Great !!!

Perfect presentation :)

Keep on Dear...

www.southindiafoodrecipes.blogspot.in

Hema said...

I've tried thogayal with nellikkai, rasam sounds very interesting..

Unknown said...

நல்லா இருக்கு மேனகா

திண்டுக்கல் தனபாலன் said...

இதுவரை வீட்டில் செய்ததில்லை சகோதரி...

எளிதான குறிப்புகள்... மிக்க நன்றி....

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

சி.பி.செந்தில்குமார் said...

சின்ன நெல்லிக்காயா? பெரிய நெல்லிக்காயா? ஹி ஹி

Prema said...

wow am a gr8 fan of goose berry,will try this yummy rasam...

Raks said...

Nice recipe, very new to me!

இராஜராஜேஸ்வரி said...

சுவையான ரசமான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

அப்பாதுரை said...

இன்னிக்கு நெல்லிக்காய் ரசம் உங்க தயவில். நன்றி.

அப்பாதுரை said...

சிறப்பாக வந்தது.

R.Gopi said...

நெல்லிக்காய் ஊறுகாய் தான் கேள்விப்பட்டு இருக்கிறேன்....

நெல்லிக்காயில் ரசம் என்றதும் ஆச்சரியமாய் ரெசிப்பி பார்த்தேன்...

நன்றி மேனகா... முயற்சித்து விடுவோம்....

Menaga Sathia said...

@அப்பாதுரை

செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றிங்க....


'பரிவை' சே.குமார் said...

புதுவகையான ரசம்.

Rekha said...

looks so yummmy and tempting..
http://www.indiantastyfoodrecipes.com/

Unknown said...

velluthu katalam pola rasam :) nice one Menaga :)

Unknown said...

wow...very innovative rasam...pls collect ur award here http://priyasmenu.blogspot.in/2012/08/award.html

Mrs.Mano Saminathan said...

அருமையான, ஆரோக்கியமான ரசம் இது, மேனகா!

Kalyan Panja said...

looks so easy to prepare and delicious... mouthwatering!

Akila said...

wow this is truely amazing... love it...

Event: Dish Name Starts With N till August 31st
Learning-to-cook

Regards,
Akila

01 09 10