Monday 10 November 2014 | By: Menaga Sathia

சம்பா சாதம் & சிதம்பரம் கொத்சு / SAMBA SADHAM & CHIDAMBARAM KOTSU | CHIDAMBARAM NADARAJAR KOIL SPL

சம்பா சாதம் + கத்திரிக்காய் கொத்சு இவையிரண்டும் சிதம்பரம் நடராஜர் கோவிலில்  இறைவனுக்கு படைக்கபடும் முக்கிய பிரசாதம்.

சம்பா சாதம் என்பது உதிரியாக வடித்த சாதத்தில் நெய்யில் தாளித்த மிளகுத்தூள்+கறிவேப்பிலை இவைகளை சாதத்தில் போட்டி கிளறி செய்வது.

கத்திரிக்காய் கொத்சு என்பது சிறிய கத்திரிக்காயை நறுக்கி எண்ணெயில் வதக்கி பின் புளிகரைசல்+கொத்சு பொடி சேர்த்து செய்வது.கோவில் தீட்ஷீதர்கள் இதில் வெங்காயம் சேர்க்க மாட்டாங்க.இது கோவிலில் செய்யும் முறை.

சிதம்பரம் சென்றால் உடுப்பி விலாஸ் ஹோட்டல் கொத்சு சாப்பிட யாரும் மறக்காதீங்க,பொங்கல் + இட்லியுடன் சாப்பிட சூப்பர்.

சம்பா சாதத்தில் கொத்சு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும் என கேள்விபட்டதோடு சரி.முகநூலில் பானுமதி மாமியிடம் குறிப்பினை கேட்டு செய்தேன்.அதோடு அவர்கள் தொட்டு கொள்ள மசால் வடை சூப்பர்னு சொல்ல நானும் அதே காம்பினேஷனில் செய்தேன் நன்றாக இருந்தது.நன்றி மாமி !!

மாமி சொல்லிய குறிப்பில் வெங்காயம் சேர்க்க சொல்லியிருந்தாங்க.ஆனால் நான் சேர்க்கவில்லை.

நான் செய்திருக்கும் கொத்சு,கத்திரிக்காயை சுட்டு செய்திருக்கேன்,ஆனால் கோவிலில் செய்யும் கொத்சுவில் சிறிய கத்திரிக்காயை எண்ணெயில் வதக்கி செய்வாங்க.

சம்பா சாதம் செய்ய தே.பொருட்கள்

உதிரியாக வடித்த சாதம் - 2 கப்
ப்ரெஷ் மிளகுத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*கடாயில் நெய் விட்டு மிளகுத்தூள்+கறிவேப்பிலை  சேர்த்து தாலித்து சாதம்+உப்பு சேர்த்து கிளறவும்.


*விரும்பினால் தாளிக்கும் போது முந்திரிப்பருப்பு சேர்க்கலாம்.

சிதம்பரம் கொத்சு

தே.பொருட்கள்

பெரிய கத்திரிக்காய் -1
புளிகரைசல் - 1 கப்
உப்பு - தேவைக்கு

தாளிக்க 
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு  - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து

கொத்சு பொடி செய்ய

காய்ந்த மிளகாய் -2
தனியா - 2 டீஸ்பூன்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்

செய்முறை
*பொடிக்க கொடுத்துள்ளவைகளை நல்லென்ணெயில் வறுத்து பொடிக்கவும்.

*கத்திரிக்காயில் எண்ணெய் தடவி அவன் அல்லது அடுப்பில் சுட்டு ஆறியதும் தோலுரித்து நன்கு மசிக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து புளிகரைசல்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்கு புளிவாசனை போனதும் மசித்த கத்திரிக்காய்+பொடித்த பொடியை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவைத்து இறக்கவும்.

பி.கு
 *வெங்காயம் சேர்க்க விரும்புபவர்கள் சின்ன வெங்காயத்தினை தாளித்த பிறகு சேர்த்து வதக்கி புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

*இந்த கொத்சு பொங்கல்,இட்லி+அரிசி உப்புமாவுக்கு பெஸ்ட் காம்பினேஷன்.




11 பேர் ருசி பார்த்தவர்கள்:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அருமையான செய்முறை விளக்கம் பகிர்வுக்கு நன்றி Noteஎடுச்தாச்சி அம்மாவிடம் கொடுத்து செய்து பார்க்கலாம்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

GEETHA ACHAL said...

Nice post...I too made this same combination 2 weeks back and will post soon...

Your pics make me make it again...

Sangeetha Nambi said...

New dish to me !

Kurinji said...

nice combo...

மனோ சாமிநாதன் said...

சிதம்பரம் கொத்சும் சம்பா சாதமும் சூப்பர் மேனகா!

'பரிவை' சே.குமார் said...

இதை கத்திரிக்காய் கோஸ்மல்லி என்று எங்கள் பக்கம் செய்வார்கள். அம்மா கத்திரிக்காயை சுட்டு பிசைந்து செய்து இட்லிக்கு கொடுப்பார்கள். மிகவும் அருமையாக இருக்கும்.

Priya said...

samba sadam peru super ah iruke.Neenga peru vacheengala ?Kosthum arumai

Lifewithspices said...

sama combination..

mullaimadavan said...

Nice post, ennakku konjam prasadam...

Asiya Omar said...

சிம்ப்ளி சூப்பர் மேனகா.

sangeetha senthil said...

பார்க்கும் போதே சாப்பிடத்தூண்டுதே ...அருமையா இருக்குங்க

01 09 10