Thursday 13 November 2014 | By: Menaga Sathia

முதலூர் மஸ்கோத் அல்வா | MUDHALUR MUSCOTH HALWA | TAMILNADU SPL

print this page PRINT IT 
முதலூர் என்பது தூத்துக்குடியில் இருக்கும் ஒரு கிராமம்.இங்கு இந்த மஸ்கோத் அல்வா மிக பிரபலம்.



தேங்காய்பாலில் செய்வதால் இதனை அதிகநாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தமுடியாது.

இந்த அல்வாவின் பெயர் காரணம் வளைகுடா நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் தேங்காய்பாலில் இந்த அல்வா செய்வதால் காலபோக்கில் இது மஸ்கோத் அல்வா என அழைக்கபடுகிறது.

இந்த அல்வா செய்ய மிக பொறுமை தேவை.1/2 கப் மைதா போட்டு செய்ததில் எனக்கு கிட்டதக்க 55 நிமிடங்கள் ஆனது.

தயாரிக்கும் நேரம் - 55 நிமிடங்கள்

தே.பொருட்கள்

மைதா -1/2  கப்
தேங்காய் -1
சர்க்கரை - 1 1/2 கப்
முந்திரிதுண்டுகள் -10

செய்முறை

*முதல்நாளே மைதாவை நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசையவும்.


*பின் அதில் 3 கப் வரை நீர் சேர்த்து பிசையவும்.மைதாவிலிருந்து பால் வரும்.

*இதனை  வேறொரு பாத்திரத்தில் வடிகட்டி அப்படியே வைக்கவும்.

*மறுநாள் மேலோடு இருக்கும் நீரை வடிகட்டி பாலை மட்டும் பயன்படுத்தவும்.

*தேங்காயை துருவி 3 கப் வரை கெட்டிப்பால் எடுக்கவும்.

*அடிகனமான பாத்திரத்தில் தேங்காய்ப்பால்+சர்க்கரை+முந்திரிதுண்டுகள்+மைதாபால் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலக்கவும்.


*இப்படியே தொடர்ந்து கைவிடாமல் கலக்கிக்கொண்டே இருக்கவும்.

* தேங்காய்ப்பால் சுண்டி அதிலிருந்து எண்ணெய் வந்து அல்வா  வேக சரியாக இருக்கும்.

*அல்வா வெந்து கலவை பந்து போல சுருண்டு வரும் போது தட்டில் கொட்டி துண்டுகள் போட்டோ அல்லது அப்படியே பயன்படுத்தலாம்.


4 பேர் ருசி பார்த்தவர்கள்:

மனோ சாமிநாதன் said...

ரொம்பவும் அருமையாக மஸ்கோத் அல்வா செய்முறையை விளக்கியிருக்கிறீர்கள் மேனகா! இளம் வயதில் செய்து பார்த்திருக்கிறேன். தற்போது தஞ்சை வரைக்கும் கூட கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள்!

Unknown said...

Muscoth halwa looks delicious....beautifully explained

'பரிவை' சே.குமார் said...

மஸ்கோத் அல்வா மிகவும் சுவையாக இருக்கும்... கேரளாவில் இருந்து நண்பர் கொண்டு வந்து சாப்பிட்டிருக்கிறேன்... செய்முறை அருமை.

Minsaara thailam said...

மைதா பயன்படுத்தக் கூடாது என்று கூறுகிறார்களே...? கோதுமை மாவு 1 கப் தேங்காய்பால் 2 கப் சர்க்கரை 1.5 கப் பயன்படுத்தி இந்த அல்வா செய்தேன். சரியாக வரவில்லை. களி போன்று இருந்தது.

01 09 10