Friday 29 May 2009 | By: Menaga Sathia

தக்காளி புதினா சட்னி/Tomato Mint Chutney


இது என்னுடைய 50 வது பதிவு!!.தொடர்ந்து பார்த்து ரசித்து,பின்னூட்டம் குடுத்த அனைத்து தோழர்,தோழிகளுக்கும் என் மனமார்ந்த நன்றி!!.

தே.பொருட்கள்:

தக்காளி - 2
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
கா.மிளகாய் - 4
பூண்டுப்பல் - 5
இஞ்சி - சிறு துண்டு
புதினா - சிறிது
கொத்தமல்லித்தழை - சிறிது விருப்பப்பட்டால்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

கடுகு+உளுத்தம்பருப்பு - 11/2 டீஸ்பூன்
எண்ணெய் - 3/4 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
பெருங்காயம் - வாசனைக்கு

செய்முறை:


* புதினா,கொத்தமல்லித்தழைகளை அலசி வைக்கவும்.

*தக்காளி,பூண்டு,இஞ்சி இவைகளை நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை வதக்கி தனியாக வைக்கவும்,பின் இஞ்சி+பூண்டு+ தக்காளியை போட்டு 10 நிமிடம் வதக்கவும்.

*வதங்கியதும் புதினா,கொத்தமல்லி தழைகளைப் போட்டு வதக்கி,கடைசியாக தேங்காய்த்துறுவலை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி எடுக்கவும்.

*ஆறியதும் மிக்ஸியில் உப்பு சேர்த்து தன்ணீர் விடாமல் அரைக்கவும்.

*பின் தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து சட்னியில் கொட்டவும்.

பி.கு:புளிப்பு இன்னும் வேண்டுமானால் தக்காளியை அதிகமாக போடலாம்.

8 பேர் ருசி பார்த்தவர்கள்:

GEETHA ACHAL said...

மிகவும் நன்றாக இருக்கின்றது மேனகா. பார்க்கவே ஆசையாக இருக்கு....இதனை பார்த்தவுடனே இட்லி அல்லது தோசையுடன் சாப்பிட ஆசையாக இருக்கு...இனிமேல் தான் இட்லிக்கு அரைக்க வேண்டும்...

உங்களுடைய 50 பதிவிற்கு வாழ்த்துகள்...தொடருங்கள் உங்கள் பயணத்தினை...

கண்ணா.. said...

என் தளத்திற்கு வருகை தந்ததற்கு நன்றி

குறிப்புகள் எல்லாம் பாக்க நல்லாதான் இருக்கு....

ம்...இந்த வாரம் முயற்சி செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்..

Malini's Signature said...

50 பதிவிற்கு வாழ்த்துகள்... அசத்துங்கப்பா :-)

Menaga Sathia said...

செய்து பாருங்க கீதா,எனக்கு ரொம்ப பிடித்த சட்னி இது.தங்கள் வாழ்த்திற்க்கு,கருத்திற்க்கும் மிக்க நன்றி கீதா!!

வாங்க கண்ணா,தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,செய்து பார்த்துட்டு சொல்லுங்க..

தங்கள் வாழ்த்திற்க்கு மிக்க நன்றி ஹர்ஷினி அம்மா!!

Unknown said...

50வது பதிவிற்க்கு வாழ்த்துக்கள் மேன்னகா.. மேலும் மேலும் நிறைய குறிப்புகள் கொடுங்க

Menaga Sathia said...

தங்கள் வாழ்த்திற்க்கு மிக்க நன்றி பாயிசா!!

Amma said...

Hi Menaka,
I am Mrs.priya from small town in Coimbatore Dt of T.nadu.Today morning i tried this tomato mint chutney and really it was so good.Very nice taste.But it was not enough for my family.What should i do to get more chutney?
either double the ingredients or only tomato and coconut.Pl clarify this.And another thing long back ago i tried ven pongal and it was so super.But when i click the link nowadays it was not working.Pl say how to search easily ur recipes.when i click sulabamaha theairu saiya it does not work.pl explain.Expecting your reply

Menaga Sathia said...

@ப்ரியா

செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ப்ரியா...சட்னி நிறைய வேண்டுமானால் அளவுகளை இரட்டிப்பாக சேர்த்து செய்து பாருங்கள்..தக்காளி அல்லது தேங்காய் மட்டும் அதிகம் சேர்த்தால் சுவையில் வித்தியாசம் இருக்கும்..

வெண்பொங்கல் செய்து பார்த்தமைக்கும் நன்றிங்க..நான் லிங்க் க்ளிக் செய்து பார்த்து சரியாக இருக்கு.நீங்க ரெசிபி தேடவேண்டுமெனில் சுலபமாக தெர்வு செய்ய பாக்ஸில் பார்க்கவும் அல்லது கூகிள் தேடலில் என் ப்ளாக் மேலே இருக்கு அதில் டைப் செய்து தேடி பாருங்க....

வெண்பொங்கல் ரெசிபி க்ளிக் செய்து பார்த்து சொல்லுங்க சரியாக லிங்க் கொடுத்திருக்கேனா என்று பார்க்கிற்ன்,தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்..

01 09 10