Wednesday 21 October 2009 | By: Menaga Sathia

கொத்தவரங்காய் பொரியல்

தே.பொருட்கள்:

கொத்தவரங்காய் - 1/2 கிலோ
வெங்காயம் -1 சிறியது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது

அரைக்க:

தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
பச்சை மிளகாய் -4
சீரகம் - 1 டீஸ்பூன்

செய்முறை :

* கொத்தவரங்காயை பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து வேகவைத்து நீரை வடிகட்டி வைக்கவும்.

*அரைக்க குடுத்துள்ளவைகளை அரைக்கவும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவகைகளை தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

*பின் வெந்த காயை கொட்டி,அரைத்தமசாலாவுடன் சிறிது நீர் சேர்த்து கிளறவும்.

*நீர் சுண்டிய பின் நன்கு கிளறி இறக்கவும்

26 பேர் ருசி பார்த்தவர்கள்:

UmapriyaSudhakar said...

பொரியல் நல்லா இருக்குப்பா. நேத்து தான் இதே காய் புளி சேர்த்து செய்தேன். எனக்கு அவ்வளவாக பிடிக்கல. உங்க முறையிலும் செய்துப்பார்க்கிறேன்.

இராகவன் நைஜிரியா said...

கொத்தவரங்காய்...

பார்த்து 1 வருஷம் 6 மாசம் ஆச்சு. என்னாப் பண்றது.. படத்தைப் பார்த்து நாக்கு சப்புக் கொட்டிக்க வேண்டியதுதான்...

கொத்தவரங்காய் பொரியலை விட எனக்கு கொத்தவரங்காய் பருப்பு உசிலியும், பொரிச்சக் கூட்டும் ரொம்ப பிடிக்கும். (இதுக்குப் பேரு சுய தம்பட்டம் அப்படின்னு சொல்லுவாங்க)

Priya Suresh said...

Again my favourite dish..sadham, boiled egg, kuda intha poriyal pothum yennaku:)

தமிழ் நாடன் said...

அருமை! அருமை! இந்த வாரம் செஞ்சு பார்த்திடுவோம். அம்மினி இல்லாத நேரத்துல உங்க குறிப்புகள் கைகொடுக்குது.

கோழி மஞ்சூரியன் உங்கள் குறிப்பை பார்த்து தீபாவளிக்கு என் கொரிய நண்பர்களுக்கு செஞ்சு கொடுத்தேன். ஆகா ஓகோன்னு ஒரே பாராட்டுதான் போங்க! அவை அனைத்தும் உங்களுக்கே சேரட்டும்.

ஜெட்லி... said...

இந்த மாதிரி பொரியல் பார்த்து வெகுநாளாகி விட்டது...
எங்க வூட்ல டெய்லியும் அப்பளம் தான்....:))

S.A. நவாஸுதீன் said...

எங்க அம்மாவும் இதே முறையில்தான் செய்வாங்க. ரொம்ப நல்லா இருக்கும். அவங்களுக்கப்புறம் இப்போ அதெல்லாம் இல்லை.

Menaga Sathia said...

புளி சேர்த்து செய்வீங்களா எப்படி?இந்த முறையில் அல்லது உசிலி செய்து சாப்பிடுங்க நல்லாயிருக்கும்.நன்றி உமா!!

Menaga Sathia said...

//பார்த்து 1 வருஷம் 6 மாசம் ஆச்சு.// அதெப்படி அவ்வளவு கரெக்ட்டா சொல்றீங்க.

//கொத்தவரங்காய் பொரியலை விட எனக்கு கொத்தவரங்காய் பருப்பு உசிலியும், பொரிச்சக் கூட்டும் ரொம்ப பிடிக்கும். (இதுக்குப் பேரு சுய தம்பட்டம் அப்படின்னு சொல்லுவாங்க)// ஹா ஹா

நன்றி அண்ணா!!

Menaga Sathia said...

நீங்கள் சொல்லும் காம்பினேஷக்கு சூப்பராயிருக்கும்ப்பா.நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

//செஞ்சு பார்த்திடுவோம். அம்மினி இல்லாத நேரத்துல உங்க குறிப்புகள் கைகொடுக்குது.//செய்து பார்த்து சொல்லுங்க ப்ரதர்!!

//கோழி மஞ்சூரியன் உங்கள் குறிப்பை பார்த்து தீபாவளிக்கு என் கொரிய நண்பர்களுக்கு செஞ்சு கொடுத்தேன். ஆகா ஓகோன்னு ஒரே பாராட்டுதான் போங்க! அவை அனைத்தும் உங்களுக்கே சேரட்டும்.//
அந்த பாராட்டெல்லாம் உங்களுக்கு தான் சொந்தம்.ஏன்னா அதை திறம்பட நன்றாக செய்தீங்களே.நண்பர்களிடம் நீங்க பாராட்டு வாங்கியதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியாக இருக்கு ப்ரதர்!!

செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி+சந்தோஷம்.

Menaga Sathia said...

//இந்த மாதிரி பொரியல் பார்த்து வெகுநாளாகி விட்டது...
எங்க வூட்ல டெய்லியும் அப்பளம் தான்....:))// ஏன் என்ன ஆச்சு ஜெட்லி?நீங்க சென்னைல தானே இருக்கிங்க.நன்றி ஜெட்லி!!

Menaga Sathia said...

//எங்க அம்மாவும் இதே முறையில்தான் செய்வாங்க. ரொம்ப நல்லா இருக்கும். அவங்களுக்கப்புறம் இப்போ அதெல்லாம் இல்லை.//இதுவும் எங்கம்மாவின் செய்முறை தான் ப்ரதர்.இங்க வாங்க சகோதரி நான் செய்து தரேன் உங்களுக்கு...நன்றி ப்ரதர்!!

suvaiyaana suvai said...

நான் இது வரை கொத்தவரங்காய் சாப்பிட்டதே இல்லை இங்கே ப்ரோஸன் தான் கிடைக்கும் ட்ரை பண்றேன்

M.S.R. கோபிநாத் said...

கொத்தவரங்காய் வாய்வு உபாதை ஏற்படுத்தும்னு சொல்லுவாங்க. உண்மையா?

Shama Nagarajan said...

one of my favourite poriayl...nice entry...please do participate in my first cooked food event...check my blog for details

Menaga Sathia said...

செய்து பாருங்கள் நன்றாகயிருக்கும்,நன்றி ஸ்ரீ!!

Menaga Sathia said...

//கொத்தவரங்காய் வாய்வு உபாதை ஏற்படுத்தும்னு சொல்லுவாங்க. உண்மையா?// எனக்கு தெரியல ப்ரதர்!!

தெரிந்தவர்கள் யாராவது பின்னூட்டத்தில் சொல்லுங்கள்...

Menaga Sathia said...

நன்றி ஷாமா!!

பித்தனின் வாக்கு said...

பொறியல் அருமை. இப்படி சும்மா சாப்பிட்டா கொஞ்சம் மதப்பு தட்டும். அதுவே பருப்பு உசிலியாக்கி சாப்பிட்டா சூப்பர். கொத்தவரங்காய் அதிகம் வாயுத்தன்மை உடையது உன்மை.
மூட்டுவலி, நெஞ்சு வலிக்காரர்கள் சாப்பிட்டால் கொஞ்சம் வலி அதிகம் ஆகும். வாயுத்தொல்லை இருப்பவர்கள் உருளைக்கிழங்கு, கொத்தவரங்காய் ஒதுக்குதல் நலம். இல்லாட்டி ஒரு பாட்டில் ஸ்பிரைட் வாங்கி பிரிஜ்ஜில் வைக்கவும். நன்றி.

ஜெட்லி... said...

சென்னை தான்.. அதனால் என்ன??
எங்க வீட்ல செய்யறதுக்கு கொஞ்சம்
கஷ்ட படுவாங்க அவ்வளவு தான்....

Menaga Sathia said...

உங்களின் விளக்கத்துக்கும்,கருத்துக்கும் நன்றி பித்தன்!!

கோபி ப்ரதர் இப்போ உங்கள் சந்தேகத்துக்கான பதில் கிடைத்துருச்சு.எனக்கும் இந்த விளக்கம் கிடைத்த மாதிரி ஆகிடுச்சி.உங்களுக்கும் என் நன்றி!!

Menaga Sathia said...

எனக்கும் இதுல உசிலி தான் ரொம்ப பிடிக்கும் ஜெட்லி.சில நேரம் சோம்பல்தனம் வந்துடுச்சுனா இப்படி செய்துடுவேன்.

//எங்க வீட்ல செய்யறதுக்கு கொஞ்சம்
கஷ்ட படுவாங்க அவ்வளவு தான்....//நம்மள மாதிரி நிறைய பேர் இருக்காங்க.அப்பாடா சந்தோஷமா இருக்கு...ஹி..ஹி..[ரொம்ப நல்ல எண்ணம்னு நீங்க நினைக்கறது புரியுது ஜெட்லி]

Jaleela Kamal said...

கொத்தவரங்காய் பொரியல் ரொம்ப பிரமாதம், வாயு தொல்லை ஏற்படும் என்றூ நினைப்பவர்கள், சோம்பு, (அ) பெருங்காயப்பொடி சேர்த்து சமைக்கனும்.

Menaga Sathia said...

தங்களின் கூடுதல் டிப்ஸ்க்கும்,கருத்துக்கும் நன்றி ஜலிலாக்கா!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

ம்ம்ம்.. நல்லா இருக்கும் போல இருக்கு!!!

Menaga Sathia said...

ஆமாம் ராஜ்,நன்றாக இருக்கும் செய்து பாருங்க.நன்றி தங்கள் கருத்துக்கு..

01 09 10