Sunday 25 October 2009 | By: Menaga Sathia

பகோடா வத்தல் / Pakoda Vathal

தே.பொருட்கள்:

ஜவ்வரிசி - 2 கப்
அரிசிமாவு -2 கப்
உப்பு - தேவைக்கு
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் -10
சோம்பு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
புதினா கொத்தமல்லி - தலா 1 கைப்பிடியளவு
இஞ்சி - 1 பெரிய துண்டு


செய்முறை:

*ஜவ்வரிசியை முதல்நாள் இரவே நீரில் ஊறவைக்கவும்.

*வெங்காயம்+பச்சை மிளகாய்+இஞ்சி+புதினா கொத்தமல்லி இவைகளை பொடியாக நறுக்கவும்.

*ஒரு கப்=4 கப் தண்ணீர் அளவு,ஒரு பாத்திரத்தில் 16 கப் தண்ணீர் வைத்து கொதிக்கவிடவும்.

*அரிசிமாவு+ஜவ்வரிசியை நன்கு கையால் பிசைந்து தண்ணீர் விட்டு கொஞ்சம் கரைத்துக் கொள்ளவும்.

*தண்ணீர் கொதித்ததும் பொடியாக அரிந்த பொருட்கள்+உப்பு+ஜவ்வரிசி+அரிசிமாவு சேர்த்து நன்கு துழவி விடவும்.மாவு நன்கு வெந்ததும் இறக்கவும்.

*வெயிலில் ஒரு காட்டன் துணியில் மாவை கொஞ்ச கொஞ்சமா கிள்ளி வைக்கவும்.

*மாலையில் நன்கு காய்ந்திருக்கும் அதை துணியின் மறுபக்கத்தில் தண்ணீர் தெளித்து வத்தலை எடுத்து காற்றோட்டமாக வைக்கவும்.

*பின் மறுநாள் நன்கு வெயிலில் காயவைத்து எடுக்கவும்.

*தேவையான போது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.பொரிக்கும் போது பகோடா பொரித்தது போல் வாசனையாக இருக்கும்.

பி.கு:

1. தண்ணிர் போதுமானதா இல்லையெனில் சிறிது வெந்நீர் சேர்க்கவும்.குளிர்ந்த நீர் சேர்க்ககூடாது,சேர்த்தால் வத்தல் விண்டுபோய்விடும்.
2. மாவு வெந்ததா எனபார்க்க கையில் தண்ணிர் தோட்டு மாவு தொட்டுப் பார்த்தால் கையில் ஒட்டக்கூடாது.
3. வத்தலில் எப்போதும் உப்பு குறைவா போடவும்.வாயில் வைத்து பார்க்கும்போது போதுமானதா இருக்காதமாதிரி இருக்கும்,ஆனால் காய்ந்த பின் எண்ணையில் பொரித்து சாப்பிட்டால் சரியா இருக்கும்.

19 பேர் ருசி பார்த்தவர்கள்:

GEETHA ACHAL said...

சூப்பராக இருக்கின்றது வத்தல்...சாப்பிட வேண்டும் போல இருக்கின்றது...

பித்தனின் வாக்கு said...

ஆகா எனக்கு ரொம்ப பிடித்த ஒரு சைடு டிஷ். பார்க்க மிகவும் அருமை. எனக்கு ஒரு பாக்கெட் பார்சல் அனுப்பி வையுங்கள். இதை ஜவ்வரிசி வடாம் அல்லது வத்தல் என்று கூறுவார்கள். எனது பருப்புத் தொகையல், புளிக்குழம்பிற்கு இது அருமையான காம்பினேசன் ஆகும்.

Malini's Signature said...

பகோடா வத்தலா!!!... பேரு புதுசா இருக்கு,ஜவ்வரிசி வத்தல் தெரியும் ஆனா இது புதுசா இருக்கு...ஆமாம் மேனகா குழந்தை வைச்சுட்டு எப்படி இது எல்லாம் கூட உங்களாலே பன்ன முடியுது???

S.A. நவாஸுதீன் said...

பக்கோடா வத்தல் - சென்றமுறை விடுமுறையில் விருதுநகர் சென்றபோது அக்கா வீட்டில் சாப்பிட்டேன். ரொம்ப நல்லா இருந்தது. நன்றி சகோதரி

சாருஸ்ரீராஜ் said...

எனக்கு பிடித்த வத்தல் , அம்மா செய்து கொடுத்துடுவாங்க அதனால் தனியா செய்தது இல்லை . இப்போ கொஞ்சம் நாளா வத்தல் சாப்பிடாம இருந்தேன் ஆசையை கிளரிவிட்டிங்க , மதியதிற்கு பொறித்துவிட வேண்டியது தான்.

Jaleela Kamal said...

வத்தல் இல்லாமால் சாப்பாடே கிடையாது, தொட்டுக்க‌ வத்தல் மட்டும் இருந்தால் வெரும் ரசம், மோர் சாதமே போதுமானது.


ரொம்ப அருமை மேனகா, நெஜமா தான் கேட்கிறேன் எப்படி உங்களுக்கு டைம் கிடைக்குது,

எங்கம்மா நிறைய செய்து டின் டின்ன்னா கொண்டு வந்து எல்லா சொந்த பந்த்தஙக்ளுக்கும் கொடுப்பாங்க அந்த ஞாபகம் வருது.

இப்ப எல்லாம் செய்வதில்லை எல்லாம் ரெடிமேடே கிடைக்குது.

இத பார்த்ததும் நாமே செய்து சாப்பிடனும்முன்னு தோனுது

susri13 said...

its really very different.I never heard this

Menaga Sathia said...

நன்றி கீதா!!

நன்றி பித்தன்,பார்சல் கிடைத்ததா?

Menaga Sathia said...

ஆமாம் ஹர்ஷினி எங்கம்மா செய்வாங்க,எனக்கு ரொம்ப பிடிக்கும்.காலையிலேயே மகள் தூங்கும்போது போடுவேன்ப்பா.நன்றி ஹர்ஷினி அம்மா!!

Menaga Sathia said...

ஆமாம் இதனை சாப்பிட்டவர்கள் சுவையை மறக்க முடியாது.நன்றி நவாஸ் ப்ரதர்!!

Menaga Sathia said...

வத்தல் பொரித்து சாப்பிட்டிங்களா?நன்றி சாரு!!

நன்றி ஸ்ரீ!!

Menaga Sathia said...

//ரொம்ப அருமை மேனகா, நெஜமா தான் கேட்கிறேன் எப்படி உங்களுக்கு டைம் கிடைக்குது,

எங்கம்மா நிறைய செய்து டின் டின்ன்னா கொண்டு வந்து எல்லா சொந்த பந்த்தஙக்ளுக்கும் கொடுப்பாங்க அந்த ஞாபகம் வருது.//

மகள் தூங்கும் போது காலையிலேயே போடுவேன் அக்கா.எங்கம்மாவும் வத்தலை டின் நிறைய போட்டு வைப்பாங்க.வத்தலை பிடிக்காதவங்க யாருமே இருக்கமாட்டாங்க.நன்றி தங்கள் கருத்துக்கு!!

M.S.R. கோபிநாத் said...

ரசம்,மோர் சாதத்திற்க்கு மிக அருமையான சைடு டிஷ்.

Priya Suresh said...

Supera irruku intha vathal Menaga, ithu sapite paal naal ache..konjam veetuku parcel anupunga:)

Menaga Sathia said...

நன்றி கோபி ப்ரதர்!!

நன்றி ப்ரியா!!பார்சல் அனுப்பினேனே வந்ததா....

my kitchen said...

புதுசா இருக்கு.அருமை

Menaga Sathia said...

நன்றி செல்வி!!

Kanchana Radhakrishnan said...

ரொம்ப அருமை மேனகா

Menaga Sathia said...

நன்றி காஞ்சனா!!

01 09 10