Tuesday 6 October 2009 | By: Menaga Sathia

வாழைப்பூ+வெள்ளரிக்காய் பச்சடி

தே.பொருட்கள்:

சுத்தம் செய்து பொடியாக அரிந்த வாழைப்பூ - 1/2 கப்
துருவிய வெள்ளரிக்காய் - 1/2 கப்
தயிர் - 125 கிராம்
சின்ன வெங்காயம் - 4
தக்காளி - 1
கொத்தமல்லித்தழை -சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு

செய்முறை :

*வெங்காயம்+கொத்தமல்லித்தழை+தக்காளி விதை நீக்கவும் பொடியாக நறுக்கவும்.

*வாழைப்பூவையும்,வெள்ளரிக்காயையும் கலக்கவும்.

*தாளிக்க குடுத்துள்ளவைகளை தாளித்து வாழைப்பூ கலவையில் கொட்டவும்.

*பறிமாறும் போது உப்பு+தயிர்+மல்லித்தழை+வெங்காயம்+தக்காளி சேர்த்துக் கலக்கவும்.

கவனிக்க:

வாழைப்பூவை பச்சையாக சாப்பிடுவதால் கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம் மறையும்.கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல மருந்து.

26 பேர் ருசி பார்த்தவர்கள்:

இராகவன் நைஜிரியா said...

ஐ... இந்த இடுகையை தங்கமணிகிட்ட காண்பிக்க மாட்டேனே? இல்லாட்டி, நீங்கதான் அழகாக, பொடிப்பொடியாக இந்த வாழைப்பூவை நறுக்குவீங்கன்னு சொல்லி, நைசா நம்ம தலைல அந்த வேலையை கட்டிடுவாங்க.

வாழப்பூ (நடுவில் நரம்பு எடுக்கணும்), வாழைத்தண்டு (நார் வந்து உயிரை எடுக்கும்), பீன்ஸ், அவரைக்காய் (இதுலயும் இந்த நார் ஆய்ந்து, பூச்சி இல்லாம் பார்த்து நறுக்கணும்) இதெல்லாம் நறுக்குவது கொஞ்சம் லொள்ளு வேலைங்க. ரொம்ப ஈசியானது, உருளைக்கிழங்குதாங்க..

என்ன நான் சொல்வது சரிதானுங்களே..

SUFFIX said...

//வாழைப்பூவை பச்சையாக சாப்பிடுவதால் கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம் மறையும்.கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல மருந்து//

உபயோகமான குறிப்பு, நன்றி.

Priya Suresh said...

Menaga, romba arumaiyana kuripu,healthy and delicious prefect pachadi..Neegha yentha dishkuda intha pachadiya serve panninga?

GEETHA ACHAL said...

சூப்பர்ப்..மிகவும் நன்றாக இருக்கின்றது.

Unknown said...

wow.. this is new to me.. thxs for the recipe.. great info about vazhai poo.

UmapriyaSudhakar said...

ஹாய் மேனகா, நல்ல சத்தான பச்சடி. நிறைய வித்தியாசமா முயற்சி பண்ணுறீங்க. உங்க முயற்சி தொடரட்டும்

பித்தனின் வாக்கு said...

ஆகா படத்தை பார்த்தாலே நிறைய வெஜிட்டபிள் பிரியானி அல்லது கலர்ந்த சாததிற்கு தொட்டுக் கொண்டு ஒரு புடி புடிச்சு, வயிறு முட்ட சாப்பிட்டு பின் ஒரு தலைகாணியப் போட்டு வெறுந்தரையில் படுத்தா அடுத்த ஒரு இரண்டு மணி நேரம் சுகமா தூங்கலாம். நல்லா இருக்கு. ஆனா தப்பா நினைக்காதிங்க எனக்கு எதைப் படித்தாலும் தப்புதான் முதல கண்ணுல படும். இந்த பதிவில் நீங்க காரத்திற்கு என்ன போடுவது என்று எழுதவில்லை, படத்தில் திருப்பு மாறிய வரமிளகாய் தென்பட்டாலும் தாளிக்கும் பொருளில் இல்லை. இதுக்கு இரண்டு அல்லது மூன்று வரமிளகாய் போட்டு தாளிக்கவும் என திருத்தம் செய்யுங்கள், அல்லது பச்சடியின் மீது பெப்பர் சால்ட் அல்லது மிளகுபொடி தூவச் சொல்லவும். தவறு இல்லை. தங்கள் ஆர்வமும் அவரசமும் அல்லது நேரமின்மை புரிகின்றது. பதிவை எழுதியவுடன் ஒருமுறைக்கு இருமுறை படிக்கவும் பின் வெளியிடவும். நான் சொன்னதில் தவறு இருந்தால் மன்னிக்கவும். அப்புறம் வாழைப்பூவை பச்சையாக சாப்பிட்டால் பற்கள் கரையாகாதா? நன்றி

நான் திருக்கோவில் தரிசன முறை என்ற பதிவை இட்டுள்ளேன், படித்து தவறு இருந்தால் சொல்லவும், திருத்திக் கொள்கின்றேன்.

Jaleela Kamal said...

அருமையான பச்சடி, அதுவும் வாழைப்பூ உடம்புக்கு ரொம்ப நல்லது.

Jaleela Kamal said...

// வாழைப்பூவை பச்சையாக சாப்பிடுவதால் கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம் மறையும்.கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல மருந்து//

mmmmmm super tips

ப்ரியமுடன் வசந்த் said...

கவனிக்க

நல்ல முயற்ச்சி சகோ

இதே மாதிரி கண்டினியூ பண்ணுங்க

sivanes said...

நல்ல குறிப்பு, முயற்சி செய்து(சமைத்து, ருசித்து )விட்டு முடிவைச்சொல்வோம்...! நன்றி :‍)

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நல்லா இருக்கு மேனகா உங்கள் பச்சடி ரொம்ப நல்லா இருக்குங்கோ

Menaga Sathia said...

ஆஹா அப்போ காய்கறி நறுக்குற வேலை உங்களுடையதா ப்ரதர். ஹி..ஹி...

//ரொம்ப ஈசியானது, உருளைக்கிழங்குதாங்க..

என்ன நான் சொல்வது சரிதானுங்களே..//ஆமாம் ஆமாம் நீங்க சொல்வது சரிதான்.கடவுளே இந்த இடுகையை உங்க தங்கமணி படிக்கனும்னு வேண்டிக்கிறேன்...

Menaga Sathia said...

நன்றி ஷஃபி ப்ரதர்!!

நன்றி ப்ரியா!!இதை நான் அப்படியே ஸ்நாக்ஸ் மாதிரி சாப்பிட்டேன்பா.

நன்றி கீதா!!

Menaga Sathia said...

நன்றி ஸ்ரீப்ரியா!!

நன்றி உமா!!உங்கள் ஊக்கம் மிகவும் சந்தோஷமா இருக்கு!!

Menaga Sathia said...

நீங்கள் சொன்னதில் எந்த தவறும் இல்லை பித்தன்.மன்னிப்பெல்லாம் எதற்க்கு.இனி இந்த மாதிரி பெரிய வார்த்தைலாம் சொல்லாதீர்கள்.

பொதுவாக பச்சடியில் காரம் சேர்க்கமாட்டேன்.சாலட்ல தான் மிளகுத்தூள் சேர்ப்பேன்.

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ப்ரதர்!!

Menaga Sathia said...

நன்றி ஜலிலாக்கா!!

நன்றி வசந்த்!!

நன்றி சிவனேசு தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்.முயற்சி செய்துவிட்டு சொல்லுங்க.

நன்றி சாரு!!

Menaga Sathia said...

பித்தன் வாழைப்பூவை மோர் கலந்த நீரில் கழவிவிட்டு செய்வதால் பச்சையாக சாப்பிடும்போது கரை படியாது.
தங்கள் பதிவைப் படித்தேன்.அழகா விளக்கி சொல்லிருக்கிங்க.

நட்புடன் ஜமால் said...

இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்தது.

பச்சையாக சாப்பிட்டால் - இது நல்ல உதவி குறிப்பு.

Menaga Sathia said...

நன்றி ஜமால் தங்கள் கருத்துக்கு!!

Anonymous said...

மேனகா இனிக்கு பிரியாணிக்கு தொட்டுக்க இந்த வாழப்பூ பச்சடி செஞ்சேன்..ரொம்ப டேஸ்டியா இருந்துச்சு..

Menaga Sathia said...

செய்துப்பார்த்து பின்னூட்டம் அளித்ததற்க்கு மிக்க நன்றி அம்மு!!

R.Gopi said...

வாழைப்பூ ப‌ச்ச‌டி ம‌ற்றும் வெள்ள‌ரிக்காய் ப‌ச்ச‌டி எனக்கு ரொம்ப‌ பிடிக்கும்....

வாழைப்பூ வ‌யிறு ச‌ம்பந்த‌மான‌ அனைத்து கோளாறுக‌ளுக்கும் ரொம்ப‌ ந‌ல்ல‌து... குறிப்பாக அந்த‌ கிட்னி ஸ்டோன்...

மொத்த‌த்தில் ப‌ச்ச‌டி சூப்பர்..........

வாழ்த்துக்க‌ள் மேன‌கா.........

Menaga Sathia said...

நன்றி கோபி!!

Vijiskitchencreations said...

மேனஹா நல்ல சத்தான பச்சடி. வாழைப்பூ இங்கு அவ்வளவாக கிடைப்பதில்லை என் சிஸ்டருக்கு சொல்லியிருக்கேன் அவங்க வீட்டில் வாழை இருக்கு.

Menaga Sathia said...

கிடைக்கும் போது செய்து பாருங்கள்.நன்றி விஜி!!

01 09 10