Thursday 19 November 2009 | By: Menaga Sathia

உருளைக்கிழங்கு காலா ஜாமூன்

தே.பொருட்கள்:

வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1/4 கப்
பால் பவுடர் - 1 கப்
மைதாமாவு - 3/4 கப்
பால் - சிறிதளாவு
எண்ணெய் - பொரிக்க
புட் கலர் - 1 சிட்டிகை
நெய் - 1 1/2 டீஸ்பூன்

சர்க்கரை பாகு செய்ய

சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்


செய்முறை :

*3/4 கப் பால் பவுடர்+ 1/4 கப் மைதா+மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து மிருதுவாக கெட்டியாக பிசையவும்.தேவைப்பட்டால் மட்டும் சிறிது பால் தெளித்து பிசையவும்.இந்த கலவை வெள்ளைக்கலரில் இருக்கனும்.

*மீதமிருக்கும் பால் பவுடர்+மைதா+கலர் சேர்த்து பால் கலந்து கெட்டியாக மிருதுவாக பிசையவும்.

*வெள்ளைக் கலரில் இருக்கும் மாவை பெரிய உருண்டைகளாக உருட்டி,அதனுள் கலர் உருண்டையை பட்டாணி அளவு எடுத்து ஸ்டப் செய்யவும்.

*இப்படியாக உருண்டைகளை உருட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரிக்கவும்.

*திரும்பவும் ஒருமுறை உருண்டைகளை எண்ணெயில் பொரிக்கவும்.அப்பொழுது கறுப்பு கலரில் இருக்கும்.

*சர்க்கரை நீர் விட்டு காய்ச்சி பிசுப்பு பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள்+நெய்++பொரித்த் உருண்டைகள் சேர்க்கவும்.

*3 அல்லது 4 மணிநேரம் கழித்து பரிமாறலாம்.

37 பேர் ருசி பார்த்தவர்கள்:

ஜெட்லி... said...

உருளை கிழங்கில் ஜாமூனா??
இப்பதான் கேள்விப்படுறேன் ...

GEETHA ACHAL said...

உருளைகிழங்கு காலாஜாமூன் நன்றாக இருக்கின்றது...

சூப்பர்ப்...

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஐயம் பேக்!!!! பேக்கு இல்லேங்க பேக் .. திரும்பிட்டேன்.. படிச்சு கருத்து சொல்லுங்க!!!

suvaiyaana suvai said...

kalakkuringa super!!!

Priya Suresh said...

Wow Menaga, superb ponga...Kalajumun looks too juicy, spongy and soft...itha udane senchida vendiyathu than..

Malini's Signature said...

உருளைகிழங்கு காலாஜாமூன் நல்லா இருக்கு மேனகா... நான் ஒருமுறை ட்ரை செய்தேன் ஆனா உடைச்சுருச்சு...அடுத்தமுறை பாக்கலாம் :-)

Admin said...

எப்படி உங்களால மட்டும் இப்படி விதவிதமா. சுவையான உணவுகளை தரமுடியிது.

பித்தனின் வாக்கு said...

வித்தியாசமாகவும் நல்லாவுமிருக்கு. செய்துவிட வேண்டியதுதான். அப்புறம் அந்த தட்டுடன் பார்சல் பிளிஸ். நன்றி.

ஸாதிகா said...

படத்தைப்பார்க்கும் பொழுதே உடனே செய்து பார்க்கத்தூண்டுகின்றது.படம் எடுத்து,பதிவுபோட்ட மேனகா கரங்களுக்கு வைரவளையல் செய்து போடலாம்.

Thenammai Lakshmanan said...

Alloo bujia mathiri Aloo jamoonaa

gr88 ma menaka

my taste buds r dancin when viewing the double coloured jamoon in jeera

Menaga Sathia said...

ஆமாம் ஜெட்லி.என் மகளுக்கு ப்யூரே செய்யும் போது மசித்த உருளைக்கிழங்கு அதிகமாகி விட்டது.அதனால் இப்படி செய்தேன்.ரொம்ப நல்லயிருந்தது.நன்றி ஜெட்லி!!

Menaga Sathia said...

நன்றி கீதா!!

திரும்ப வந்ததில் சந்தோஷம்.கருத்தும் போட்டாச்சு,நன்றி ராஜ்!!

Menaga Sathia said...

நன்றி சுஸ்ரீ!!

நன்றி ப்ரியா!!செய்து பாருங்கள்,ரொம்ப நல்லாயிருக்கும்.

Menaga Sathia said...

எனக்கும் சில ஜாமூன் உடைந்துவிட்டது.உடையாமல் இருப்பதைதான் போட்டோ எடுத்து போட்டேன்.அடுத்த முறை நல்லா வரும்,செய்து பாருங்கள்.நன்றி ஹர்ஷினி அம்மா!!

Menaga Sathia said...

எனக்கு சமைப்பதில் ஒரு ஆர்வம்.அதான் இப்படிலாம் செய்கிறேன்.நன்றி சந்ரு!!

Menaga Sathia said...

அப்படியே அந்த தட்டுடன் பார்சல் அனுப்பியாச்சு சுதாகர் அண்ணா.நன்றி!!

Menaga Sathia said...

வைரவளையலா?ரொம்ப சந்தோஷமா இருக்கு.நன்றி ஸாதிகா அக்கா!!


காலா ஜாமூன் நல்லாயிருக்கும்.செய்து பாருங்கள்.நன்றி தேனம்மை அக்கா!!

சிநேகிதன் அக்பர் said...

உங்களுடைய மெனுக்களைப்படித்தேன். அழகான தொகுப்பு. செய்து பார்க்கிறேன் (சவுதியில் செல்ஃப் குக்கிங்தான்)

Unknown said...

Uralaikizhangu in Jamun. Sounds interesting!

சிங்கக்குட்டி said...

தெரிந்த முறை என்றாலும் பதிவு நல்லா இருக்கு மேனகா.

Nathanjagk said...

எப்பவும் வந்து படிக்கிறமாதிரியான பதிவுகளா இருக்கு. ​கொஞ்சம் சிக்கலான ​ரெஸிபிக​ளை ​செய்யறதுன்னா ச​மைக்கும் ​போ​தே ​கையில் ​குறிப்புகள் இருக்கணும் எனக்கு. ஒருமு​றை ​பாதி ச​மைத்துக் ​கொண்டிருக்கும் ​(​கோஃப்தா) போ​து ரெஸிபி குறிப்பு காணாமல் ​போய்விட்டது! ​தேடிக் கண்டுபிடிப்பதற்கு ​​நேரமில்லாம.. நானே என் ​போக்கில் ​போட்டுத்தாக்கி​னேன். அதுவும் அட்டகாசமாத்தான் இருந்தது...! இததாண்டா ச​மையல் கலை என்று புரிந்தது.

முட்டை வேர்க்கடலை ப்ரை பார்த்​தேன்.. ​செய்யலாம்னு ஆசையா இருக்கு.. ஆனா இப்ப டயட்ல இருக்கிறதால.. ​நோ சான்ஸ்.

உங்க வ​லைப்பதிவு நல்லாயிருக்கு! ​சைட் ​நேவி​கேஷன் ​ரொம்ப ஈஸியா, ​செளகர்யமா இருக்கு. வாழ்த்துக்கள்!

S.A. நவாஸுதீன் said...

உருளைக் கிழங்கில் ஜாமூனா. ஆச்சரியமா இருக்கு. அசத்துறீங்க சகோதரி

Kanchana Radhakrishnan said...

உருளைகிழங்கு காலாஜாமூன் super

Menaga Sathia said...

செய்து பார்த்து சொல்லுங்கள்,நன்றி அக்பர் தங்கள் கருத்துக்கு!!

Menaga Sathia said...

நன்றி திவ்யா!!


நன்றி சிங்கக்குட்டி!!

Menaga Sathia said...

//எப்பவும் வந்து படிக்கிறமாதிரியான பதிவுகளா இருக்கு. ​கொஞ்சம் சிக்கலான ​ரெஸிபிக​ளை ​செய்யறதுன்னா ச​மைக்கும் ​போ​தே ​கையில் ​குறிப்புகள் இருக்கணும் எனக்கு. ஒருமு​றை ​பாதி ச​மைத்துக் ​கொண்டிருக்கும் ​(​கோஃப்தா) போ​து ரெஸிபி குறிப்பு காணாமல் ​போய்விட்டது! ​தேடிக் கண்டுபிடிப்பதற்கு ​​நேரமில்லாம.. நானே என் ​போக்கில் ​போட்டுத்தாக்கி​னேன். அதுவும் அட்டகாசமாத்தான் இருந்தது...! இததாண்டா ச​மையல் கலை என்று புரிந்தது./ சமையல் செய்வது ரொம்ப ஈஸி.எதுவுமே நாம் செய்வதில் தான் இருக்கு.

தங்களின் அன்பான பின்னூட்டத்திற்க்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஜெகநாதன்!!

Menaga Sathia said...

நன்றி சகோதரரே!!

நன்றி காஞ்சனா!!

Thenammai Lakshmanan said...

அறுசுவை அரசியே

உங்களை ஒரு தொடருக்கு அழைத்து இருக்கிறேன்

ஒரு மாறுதலுக்காக தொடருங்கள்

என் இடுகையில் பிடித்த பத்தும் பிடிக்காத பத்தும் தொடர உங்களை அழைக்கிறேன்

வாழ்த்துக்கள்

Nathanjagk said...

ம்ம்ம்! நான்தான் மிக்க நன்றி ​சொல்லணும். இந்த அன்பான ​ரெஸிபிக்கு!
இந்த குறிப்புகள் ​வைத்துக் ​கொண்டு எல்லா நில​வெளிகளிலும் (எந்த நாடு என்றாலும்..) நான் நிரந்தரமாக இருந்துக்கலாம் ​போல!
ச​மை​யல் ஒரு அபூர்வமான விஷயம்.. நளன்: ஆண் என்ற மமதை இருந்து ​கொண்டிருந்தாலும், ​பெண்களுக்கு மட்டும் வாய்த்த இந்த ​விரல் ரகசியத்​தை என்னால் மறுக்க முடியவில்​லை. ​பெண்களால் அர்த்தமாகிறது ச​மையல்!

Menaga Sathia said...

தங்கள் அழைப்பிற்க்கு மிக்க நன்றி+சந்தோஷம்.ஏற்கனவே நான் இத்தொடரை எழுதியுள்ளேன்.நன்றி அக்கா!!

Menaga Sathia said...

நன்றி ஜெகநாதன்!!

my kitchen said...

Jamun from potato sounds good,want to try

Menaga Sathia said...

செய்து பாருங்கள் நன்றாகயிருக்கும்,நன்றி செல்வி!!

Jaleela Kamal said...

நானும் பால் பவுடரில் தான் செய்வேன், கோதுமை மாவு கூட சேர்க்கலாம்,


உருளை ஜாமுன் சூப்பர்,

Menaga Sathia said...

கோதுமைமாவும் சேர்க்கலாமா?அடுத்தமுறை டிரை பண்ணுகிறேன்.நன்றி ஜலிலாக்கா!!

Unknown said...

ஹாய் மேனகா ரொம்ப நல்லா இருக்குங்க இந்த குறிப்பு எப்படி இப்பாடிலாம் யோசிக்கிரீங்க...உருளைக்கிழங்கில் ஜாமூனா..அப்பிடின்னு பார்த்தேன் சூப்பரா இருக்கு....நன்றி.வாழ்த்துக்கள் மேலும் பல புதுப்து ரெசிப்பீச் கொடுத்து அசத்துங்க.

Menaga Sathia said...

நீங்களும் செய்து பாருங்க.இந்த ஜாமூன் ரொம்ப சாப்டா இருக்கும்.தங்கள் வாழ்த்துக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி கினோ!!

01 09 10