Thursday 26 November 2009 | By: Menaga Sathia

கீரை பட்டாணி புலாவ்


தே.பொருட்கள்:

பாஸ்மதி - 2 கப்
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1 பெரியது
ப்ரோசன் பச்சைப்பட்டாணி - 1/4 கப்
கீறிய பச்சை மிளகாய் - 6
பொடியாக அரிந்த பசலைக்கீரை - 1 கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் பால் - 1 1/2 கப்
தண்ணீர் - 1 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு


தாளிக்க:

பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்


செய்முறை :

*குக்கரில் நெய்+எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+பச்சை மிளகாய் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

*பின் கீரை+பட்டாணி சேர்த்து லேசாக வதக்கி அரிசி+தேங்காய்ப்பால்+தண்ணீர்+உப்பு சேர்த்து வேகவிடவும்.

*3 விசில் அல்லது வெயிட் போட்டு 10 நிமிடத்தில் இறக்கவும்.

*ஈஸியான கீரை பட்டாணி புலாவ் ரெடி.

*இதற்க்கு முட்டை தொக்கு,உருளை வறுவல் நன்றாகயிருக்கும்.


பி.கு:

பட்டாணிக்கு பதில் கேரட் துறுவல் சேர்த்தும் செய்யலாம்.

22 பேர் ருசி பார்த்தவர்கள்:

Shama Nagarajan said...

different try..looks yummy

Priya Suresh said...

Nalla combination..pulao supera irruku pakkurathuke..

சூர்யா ௧ண்ணன் said...

பார்த்தாலே சாப்பிடனும் போல ஆசையா இருக்கு..,

சாருஸ்ரீராஜ் said...

very nice yummy recepie

padma said...

Healthy Recipe.Very nice looking.

suvaiyaana suvai said...

good recipe!!!

my kitchen said...

Healthy one,will try soon

Menaga Sathia said...

நன்றி ஷாமா!!

நன்றி ப்ரியா!!

நன்றி சூர்யா அண்ணா!!

Menaga Sathia said...

நன்றி சாரு அக்கா!!

நன்றி பதமா!!தங்கள் வருகைக்கும் நன்றி...

Menaga Sathia said...

நன்றி சுஸ்ரீ!!

செய்துபாருங்கள்,நன்றி செல்வி!!

Malar Gandhi said...

Very healthy recipe, dear.

தேவன் மாயம் said...

பார்க்க நல்லாத்தான் இருக்கு!!!

சிங்கக்குட்டி said...

ரொம்ப நல்லா இருக்கு கீதா வாழ்த்துகள்.

ஸாதிகா said...

சத்து மிக்க வித்தியசமான புலாவ்.பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி மேனகா.

Menaga Sathia said...

நன்றி மலர்!!

நன்றி மருத்துவரே!!

Menaga Sathia said...

நன்றி சிங்கக்குட்டி!!கமெண்ட் மாத்தி போட்டுட்டீங்க....

நன்றி ஸாதிகா அக்கா!!

பித்தனின் வாக்கு said...

ஆகா சூப்பரா இருக்குங்க. உங்க பதிவுகளைப் பார்த்தா சும்மா ஒருவாரம் உங்க வீட்டில டேரா போட்டு சாப்பிடனும் போல இருக்கு. நன்றி மேனகா சத்தியா.

Menaga Sathia said...

1 வாரம் என்ன ,மாதம் பூராவும் இங்கேயே டேரா போடுங்க.நன்றி சகோ!!

பித்தனின் வாக்கு said...

// 1 வாரம் என்ன ,மாதம் பூராவும் இங்கேயே டேரா போடுங்க.நன்றி சகோ!! //
ஆகா நான் ஏற்கனவே 68 கிலோ வெயிட் மற்றும் தொப்பையைக் குறைக்க முடியாமல், கஷ்டமா இருக்கு. இதுல ஒரு மாசம் உக்காந்து சாப்பிட்டா அவ்வளவு தான். அப்புறம் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு நடந்து போனாத்தான் குறையும் போல. நன்றி சகோதரி.

Thenammai Lakshmanan said...

different pulao

try seiren MENAKA

Menaga Sathia said...

செய்து பாருங்கள்,நன்றாக இருக்கும்.நன்றி அக்கா!!

Menaga Sathia said...

செய்து பாருங்கள் நன்றாக இருக்கும்.நன்றி அக்கா!!

01 09 10