Tuesday 20 December 2011 | By: Menaga Sathia

முட்டை கட்லட்/Egg Cutlet

வித்யா அவர்களின் குறிப்பை பார்த்து செய்தது,நன்றி!!

தே.பொருட்கள்

வேகவைத்த முட்டை - 4
Instant Dry Mashed Potato Mix - 2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 பெரியது
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மைதா - 2 டேபிள்ஸ்பூன்
ப்ரெட் க்ரம்ஸ் - தேவைக்கு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

*ஒரு பவுலில் உருளை மிக்ஸ்+வெங்காயம்+உப்பு+மிளகாய்த்தூள்+கொத்தமல்லித்தழை அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
*சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
*முட்டையை 2ஆகவோ அல்லது 4ஆகவோ கட்செய்யவும்.

*உருளை கலவையை சிறிது எடுத்து அதனுள் கட்செய்த முட்டையை வைத்து ஸ்டப் செய்யவும்.
*மைதா+உப்பு சேர்த்து சிறிது நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.

*ஸ்டப்பிங்கை மைதாவில் நனைத்து ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டவும்.
*கட்லட் அனைத்தையும் ப்ரிட்ஜில் 15 நிமிடம் வைத்திருந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பி.கு

*இன்ஸ்டண்ட் உருளை மிக்ஸ் பதிலாக வேகவைத்து மசித்த உருளையை சேர்க்கலாம்.

*எண்ணெயில் பொரிப்பதற்க்கு பதில் தவாவில் எண்ணெய்விட்டு 2புறமும் சுட்டெடுக்கலாம் அல்லது அவனில் பேக் செய்தும் எடுக்கலாம்.

*முட்டையை 2ஆக கட் செய்வதற்கு பதில் 4ஆக கட் செய்யலாம்.2ஆக கட் செய்தால் கட்லட் ரொம்ப பெரிதாக இருக்கும்.

*முட்டைக்கு பதில் துருவிய பனீர் அல்லது சீஸ் சேர்க்கலாம்.

15 பேர் ருசி பார்த்தவர்கள்:

சி.பி.செந்தில்குமார் said...

அய்யய்யோ ,அசைவமா, மீ எஸ் கேப்

சி.பி.செந்தில்குமார் said...

மேடம், பிளாக்ல போடற ஃபோட்டோல நம்ம சைட் பேரு வர வைக்க , அதாவது பிலாக் பேரு வர வைக்க என்னா செய்யனும்? ஹெல்ப் ப்லீஸ்

MANO நாஞ்சில் மனோ said...

கிட்டதட்ட என்னையும் சமையல் காரண ஆக்கிருவீங்க போலிருக்கே, அருமை அண்ட் சிம்பிள்...!!!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

Radhika said...

I'm always on the look out for simple egg recipes and this one is too good. thanks for sharing.

ராஜி said...

செஞ்சு பார்த்துட்டு வரேன்

Aarthi said...

romba nala iruku

Sangeetha M said...

aaah...romba puthusa erukku, great tea time snack...will try tawa fry method...thanks for sharing!!
Spicy Treats
Ongoing Event : Bake Fest # 2
Do participate in My 300th Post Giveaway

Priya Suresh said...

Mouthwatering here, attagasama irruku egg cutlets.

Jaleela Kamal said...

வித்யா அவர்களின் ரெசிபி நல்ல இருக்கு

நாங்க இத மட்டனில் உள்ளே அவித்த முட்டை வைத்து செய்வோம் , எங்க இஸ்லாமிய வீடுகளில் கல்யாணத்தில் செய்யும் ஸ்பெஷல் ரெசிபி.உருளை உள்ளே மட்டன் கீமாவைத்தும், கீமா உள்ளே அவித்த முட்டை வைத்தும், ரொம்ப ரிச் சாக இருக்கும்

Asiya Omar said...

அருமையாக வந்திருக்கு.சூப்பர்.

Mahi said...

முட்டை கட்லட்..புதுசா இருக்கு மேனகா! நல்லா இருக்கு!

Jayanthy Kumaran said...

omg...soooooooper tempting menaga..:)

Tasty Appetite

சாந்தி மாரியப்பன் said...

இதை நான் கடலைப்பருப்பை அரைச்சு அது கூட வெங்காயம் கறிவேப்பிலை இஞ்சி இத்யாதிகளைச் சேர்த்த கலவையில் ஸ்டஃப் செஞ்சு செய்யறதுண்டு.

உருளைக்கிழங்கில் ஸ்டஃப் புதுசா இருக்கு. பகிர்வுக்கு நன்றி :-)

விச்சு said...

இன்று வலைச்சரத்தில் தங்களின் இந்த சிறப்பான பதிவு. நேரம் கிடைத்தால் பாருங்கள்.மறக்காமல் தமிழ்மணத்தில் வாக்கினையும் பின்னூட்டமும் இடுங்கள். http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_15.html

01 09 10